சின்னப் பாப்பா

சின்னச் சின்ன பாப்பா - கொஞ்சம்
    சிரிச்சுச் சிரிச்சுப் பார்ப்பா
வண்ண வண்ண ஆடை - போட்டு
    வாசல் வந்து நிற்பா


குச்சி மிட்டாய் கேட்பா - வாங்கிக்
    கொடுக்க அடம்பி டிப்பா
உச்சி வகுட்டுக் காரி - அவதான்
    உசுற ஆட்டும் மாரி

கண்ணக் கண்ணச் சிமிட்டி - அழகாக்
    கவித பேசி நிப்பா
பின்னல் அசைய அசைய - வந்தே
    பின்னால் மறஞ்சி ருப்பா

சின்னச் சின்னப் பாப்பா - அவதான்
    சிரிச்சுச் சிரிச்சுப் பார்ப்பா
என்ன வாங்கி னாலும் - வேணும்
    எனக்கு முன்னு கேப்பா!

பாப்பா தூங்கப் போக - அழகாப்
    பாட்டுப் பாட வேணும்
பாப்பா தூங்கிப் புட்டா - உலகே
    பகலில் தூங்கிப் போகும்

-விவேக்பாரதி
10.05.2018

Comments

Popular Posts