சாதிக் கொடுமைகள் வேண்டா

https://soundcloud.com/vivekbharathi/70rpgngtz2mt
ஒருபுறம் பார்த்தால் தீமைகள் தலையை
   உயர்த்திச் சிரிக்கின்றன,
ஒருபுறம் சாதிகள் உயர்ந்து வளர்ந்தே
   உயிரைக் குடிக்கின்றன,
திரிபுரம் கண்ணால் தீய்த்த பிரானே
   திமிறிநீ வாராயோ?
எரியுற இவைதான் மழுங்கிக் கரைய
   எதிர்வினை செய்யாயோ? 

சாதிகள் இல்லாச் சமவெளி வேண்டும்
   சந்நிதி பொதுவாகும்
நீதிகள் அழியா நிலைமை வேண்டும்
   நிம்மதி கருவாகும்
ஆதியே வானே அண்டமே அரனே
   ஆவன செய்யாயோ?
ஓதி உழைத்தே உயிர்களை வாழ்த்தி
   உயர்வுற உய்யோமோ?  

-விவேக்பாரதி
20.05.2018

Comments

Popular Posts