கருமாரி கிரகமாலை

காப்பு: நவக்கிரக நாயகியே நானுன் பதத்தில் அவம்நீங்க வேண்டி அமர்ந்து – கவிசொல்வேன் ! மாலை முடிந்திடவும் மாற்றம் நிகழ்ந்திடவும் காலங் கொடுத்தருள்வாய் காப்பு ! நூல் : காரிய மாற்றிக் கடமைசெய் வோரின் கருத்திடையில், சீரிய நோக்கிற் சிறப்புறச் செல்பவர் சிந்தைதனில் பேருரு வாகும் பெருங்கரு மாரி பெயருரைக்கச் சூரியத் தேவன் சுகத்தினை நல்கிச் சுடருகவே ! (1) சுடர்விடு மட்டிகை சுட்டிக ளாரமும் சூடியிங்கே இடமெனும் பாக மிருந்தருள் வீசும் இறையவளைக் கடமை புரியும் கருமா ரியவள் கனிப்பெயரைச் சடுதியிற் சொல்லிடச் சந்திரன் இன்பொளி சாற்றுகவே ! (2) சாற்று மவள்பெயர் தந்திடும் சக்திகள் சங்கடத்தை மாற்றி உயர்க்கதி மண்ணில் நிறுத்திடும் ! மாண்புடைய காற்றி லுயர்ந்து கருமா ரியின்பேர் கருதுகின்ற ஆற்ற லுணர்ந்தங் காரகன் நன்மை அளித்திடவே ! (3) அளிக்கும் சிரத்தையி லானந்தங் கண்டே அணைத்திடுவாள் ! ஒளிதிகழ் கல்வியி லுண்மையி லூன்றியிங் கோங்கிடுவாள் ! களிதருந் தேவி கருமா ரியின்பேர் கதைத்திடவே தெளிவினை நெஞ்சிடைத் தேக்க புதனெனும் தேவனுமே ! (4) தேவரின் துன்பமும் தேய்ந்திடக் கந்தனின் தேசெனவே காவலர் கைகொளும் கங்கெனும் வேலினைக் கைகொட