தலையணை

கைவிரலின் வருடலிலே தென்றல் தோன்றும்
   கனிவான குரல்பாட்டில் சொர்க்கம் தோன்றும் 
மெய்யணைக்கும் ஆடையினால் சிலிர்ப்பு தோன்றும் 
   மெத்தையெலாம் நம்நெஞ்சம் மறக்கத் தோன்றும் 
பொய்யிணைந்த கதைகேட்கத் தூக்கம் தோன்றும் 
   போயந்தக் கதைக்குள்ளே வாழத் தோன்றும் 
வையத்தில் நாம்தூங்கக் கடவுள் தந்த 
   மடியணைமுன் தலையணைகள் தோற்கும் தானே!!
-விவேக்பாரதி 
03.06.2018

Comments

Popular Posts