இனிய பெங்களூர்

பெங்களூரில் தமிழ் பேசிய ஓலா ஆட்டோ ஓட்டுநரிடம் நான் கவிஞன் என்று சொல்லவும் ஊரைப் பற்றியொரு கவிதை கேட்க, உடனே சொன்னது...

எப்போதும் இளந்தென்றல் குளிராக வீசும்
    எங்கெங்கும் பலமொழிகள் பலரின்வாய் பேசும்
முப்போதும் சுடும்வெய்யில் முகையாகப் பூக்கும்
    மூண்டபல கல்மலைகள் விண்முட்டிப் பேர்க்கும்
தப்பாத நெரிசல்கள் சாலைகளைத் தேக்கும்
    தாராளம் கஞ்சமென வேற்றுமைகள் பார்க்கும்
ஒப்பில்லா பசுமரங்கள் ஓரத்தில் நிற்கும்
    ஒயிலான இப்பெங்க ளூரினிய வூரே!!


-விவேக்பாரதி
10.06.2018

Comments

பிரபலமான பதிவுகள்