இரயில் பயண வெண்பாக்கள்

சக்கரங்கள் ஆயிரமாய் ஜன்னல்கள் கண்களுமாய்
அக்கறையாய் மக்கள் அகம்தாங்கி - சிக்கென
இந்தரயில் முன்னே இயக்கத்தைக் காண்கிறது!
சொந்தரயில் போல சுகம்! 


நாலா புறத்தினிலும் நல்லகாற்று கோதிவிடக்
கோலா கலச்சத்தம் கொண்டிசைத்து - வேலேபோல்
பாய்கின்ற திந்தரயில் பார்க்கப் பரவசந்தான்!
சாய்கின்ற ஜன்னல் சகி!

யார்யாரோ நட்பாக எல்லாரை யும்சேர்க்கும்
பார்போல செல்லும் பலரயில்கள் - ஊர்சேர்க்கப்
போராடும் தோழர்கள் போட்டியிலா வீரர்கள்
காரோடும் மின்சாரக் கம்பு!

-விவேக்பாரதி
22.06.2018

Comments

Popular Posts