மூடிய கதவு
மூடிய தாமந்தக் கதவு - பலர்
முனைந்த புரட்சியின் முடிவு!
கூடிய தாம்சில கனவு - எனக்
கொள்ளை யடிக்கும் நினைவு!
புரட்சியைச் செய்ததும் யாரு? - அதில்
புகழைக் கண்டதும் யாரு?
மிரட்சியைச் சந்தித்த தாரு? - அதை
மீட்டி நிறுத்திய தாரு?
அரசியல் செய்ததோர் கூட்டம் - கெட்ட
அழிவினைச் செய்ததோர் கூட்டம்
பரவிய சேதிகள் கேட்டு - துள்ளி
பதறிக் கிடந்ததோர் கூட்டம்!
மூடெனச் சொல்லின சிலவாய்! - விட்டு
ஓடெனச் சொல்லின சிலவாய்
நாடென்ன கதிபடும் என்றால் - தன்
நலத்தைப் பேணின தெளிவாய்
சாதித்து விட்டதை எண்ணி - கொஞ்சம்
சடுதியில் ஆடிமு டிப்போம்
மோதிட வானமே விழினும் - விரல்
முறுக்கிய வீரத்தைப் படைப்போம்!!
-விவேக்பாரதி
29.05.2018
முனைந்த புரட்சியின் முடிவு!
கூடிய தாம்சில கனவு - எனக்
கொள்ளை யடிக்கும் நினைவு!
புரட்சியைச் செய்ததும் யாரு? - அதில்
புகழைக் கண்டதும் யாரு?
மிரட்சியைச் சந்தித்த தாரு? - அதை
மீட்டி நிறுத்திய தாரு?
அரசியல் செய்ததோர் கூட்டம் - கெட்ட
அழிவினைச் செய்ததோர் கூட்டம்
பரவிய சேதிகள் கேட்டு - துள்ளி
பதறிக் கிடந்ததோர் கூட்டம்!
மூடெனச் சொல்லின சிலவாய்! - விட்டு
ஓடெனச் சொல்லின சிலவாய்
நாடென்ன கதிபடும் என்றால் - தன்
நலத்தைப் பேணின தெளிவாய்
சாதித்து விட்டதை எண்ணி - கொஞ்சம்
சடுதியில் ஆடிமு டிப்போம்
மோதிட வானமே விழினும் - விரல்
முறுக்கிய வீரத்தைப் படைப்போம்!!
-விவேக்பாரதி
29.05.2018
Comments
Post a Comment