இன்ப வரம்

இந்த வானினை நோக்கிடும் போதிலும்
    ஈர்க்கும் வெண்ணிலா கண்டிடும் போதிலும்
மந்த மாருதம் தொட்டிடும் போதிலும்
    மாரி யின்மணம் பட்டிடும் போதிலும்
சுந்த ரத்தமிழ் கேட்டிடும் போதிலும்
    துங்க நற்றமிழ் பேசிடும் போதிலும்
சிந்தை எங்கணும் மேவிடும் இன்புபோல்
     சீவன் காண்பதோர் நற்களி இல்லையே!!


-விவேக்பாரதி
13.06.2018

Comments

பிரபலமான பதிவுகள்