அத்வைதம்


கனவொரு அவஸ்தை நினைவொரு அவஸ்தை
காளீ நடுவில் கனல்வது நீதான்
தினமொரு புரிதல் தினமொரு திமிறல்
திறமாய் மனத்தைப் பிடிப்பது நீதான்
நீ பரமாத்மா நான் ஜீவாத்மா
என்னுள் உனக்கு நிகழ்த்துவதும் நீ
நீ சித்தாந்தம் நான் வேதாந்தம்
நீயோ நானோ நடுவினில் ஆட்டம் 


நானும் மாயை அவரும் மாயை
நடக்கும் உலகம் அனைத்தும் மாயை
காணும் கனவும் காலமும் மாயை
கடைசியும் முதலும் யாவும் மாயை
நிகழ்வும் நீயாய் நிகழ்த்தும் பொருளாய்
நிகழ்வால் பயனை அடையும் ஒன்றாய்
இவை அத்வைதம் இயக்கிய சாரம்
இனிநீ நானே இதுதான் நீயே!!

-விவேக்பாரதி
29.06.2018

Comments

Popular posts from this blog

மரகதப் பஞ்சகம்

மாதங்களில் அவள் மார்கழி

கவிதை ஆண்டாள் - 1