Posts

Showing posts from July, 2018

அவன் எத்தனை?

ஏழை மனத்தில் ஊஞ்சல் கட்டி    இறைவன் ஆடுகிறான் - பிறர்  வாழக் கரங்கள் தருவோர் நெஞ்சில்     வசந்தம் பாடுகிறான்  தாழும் நிலையில் தள்ளி அணைத்துத்     தாய்மை காட்டுகிறான் - நாம்  வீழும் பொழுதில் பாடம் புகட்டி    வித்தை கூட்டுகிறான்! அவன் எத்தனை தொழிலுக் கதிபன்! அவன் எத்தனை பேரின் தொண்டன்! அவன் எத்தனை பேருக் குண்மை! அவன் எத்தனை பேரின் பொம்மை! சின்ன விதையை உந்தும் விசையாய்ச்    சிரித்துப் பார்க்கிறான் - அவன் மின்னல் கீற்றும் மேகப் பாட்டும்    விரித்துப் பார்க்கிறான் அன்பின் வடிவில் ஆனந்த மாகி    அமர்ந்து கிடக்கிறான் - எங்கும் இன்பம் நிறைந்தால் துன்பம் துடைக்க    இடத்தை கேட்கிறான்! அவன் எத்தனை பெரிய ஞானி! அவன் எத்தனைக் கடலில் தோணி! அவன் எத்தனை உயர்ந்த ஏழை! அவன் எத்தனை துளிர்க்கும் வாழை! உணர மறுத்தார் உணர்ந்தார் என்று    உருவம் பார்ப்பதில்லை - உண்மை புணர முடியும் இடத்தில் சேரப்    புத்தி நடுங்கவில்லை கணங்க ளெல்லாம் மனத்தில் நின்றே    காட்சி தருகிறான் - நம்மை அணைக்கும் போது சேதி சொல்லி    அனலைக் குறைக்கிறான்! அவன் எத்தனை காலம் வாழ்வான் அவன் எத்தனை காலம் தாழ்வான் அவன் எத்தனை நெஞ்சை ஆள்வான் அவன் எ

அவன் எத்தனை?

ஏழை மனத்தில் ஊஞ்சல் கட்டி    இறைவன் ஆடுகிறான் - பிறர்  வாழக் கரங்கள் தருவோர் நெஞ்சில்     வசந்தம் பாடுகிறான்  தாழும் நிலையில் தள்ளி அணைத்துத்     தாய்மை காட்டுகிறான் - நாம்  வீழும் பொழுதில் பாடம் புகட்டி    வித்தை கூட்டுகிறான்! அவன் எத்தனை தொழிலுக் கதிபன்! அவன் எத்தனை பேரின் தொண்டன்! அவன் எத்தனை பேருக் குண்மை! அவன் எத்தனை பேரின் பொம்மை! சின்ன விதையை உந்தும் விசையாய்ச்    சிரித்துப் பார்க்கிறான் - அவன் மின்னல் கீற்றும் மேகப் பாட்டும்    விரித்துப் பார்க்கிறான் அன்பின் வடிவில் ஆனந்த மாகி    அமர்ந்து கிடக்கிறான் - எங்கும் இன்பம் நிறைந்தால் துன்பம் துடைக்க    இடத்தை கேட்கிறான்! அவன் எத்தனை பெரிய ஞானி! அவன் எத்தனைக் கடலில் தோணி! அவன் எத்தனை உயர்ந்த ஏழை! அவன் எத்தனை துளிர்க்கும் வாழை! உணர மறுத்தார் உணர்ந்தார் என்று    உருவம் பார்ப்பதில்லை - உண்மை புணர முடியும் இடத்தில் சேரப்    புத்தி நடுங்கவில்லை கணங்க ளெல்லாம் மனத்தில் நின்றே    காட்சி தருகிறான் - நம்மை அணைக்கும் போது சேதி சொல்லி    அனலைக் குறைக்கிறான்! அவன் எத்தனை காலம் வாழ்வான் அவன் எத்தனை காலம் தாழ்வான் அவன் எத்தனை நெஞ்சை ஆள

பிழைத்த தமிழகம்

போராட்டம் பலகண்டு சலித்த நேரம்    போடாப்போ என்றெண்ணிக் கிடந்த நேரம் காரோட்டம் எதிர்பார்த்துக் களைத்துப் போன    கானமயில் போல்நாங்கள் வறண்ட நேரம் தேரோட்டும் வீதியிலே திருவி ழாப்போல்    திரளாக வந்துவிட்டாய் அம்மா உன்றன் நீரோட்ட உருக்கண்டோம் நிறைவு கண்டோம்    நிலையான நெல்மணிகள் சிலிர்க்கக் கண்டோம்! குளங்குட்டை தேக்கிவைத்த காலம் சென்று      குளமெல்லாம் கட்டிடமாய் வளர்ந்த நாளில் வளமைக்கும் உரிமைக்கும் ஏங்கி ஏங்கி    வாசல்களில் கத்திநின்றோம் கொடுமை மாய இளவேனில் நேரத்துத் தென்றல் போல    இதமாக இயல்பாகச் சேர்ந்தாய் அம்மா உளவரைக்கும் எமையுய்ய வைக்கும் உன்னை    உள்ளபடி காக்கின்ற வழிதான் காணோம்! பொதுவாகத் தான்வந்தாய் பார தத்தில்    பொருளறிந்தார் உனைக்காக்கும் தகைமை செய்தார் மெதுவாகத் தொடங்குகின்ற நிலத்தில் நீயும்    மேன்மையுடன் வாழ்ந்திடவே அணைகள் செய்தார் நதியாகப் பெருக்கெடுத்துத் திரண்டு சூழும்    நன்னாட்டில் உன்வளமை மட்டும் பார்த்து விதியென்றே நீகடலைக் கலக்கும் மட்டும்    வீணாக விடுகின்றோம் அறியோம் அம்மா! வறண்டநிலம் பயிர்காண வந்து பாய்ந்தாய்    வறுமைபெறும் உழவர்க்கு வசந்த மானாய் சுறண்டியவர் கோரத்

பிழைத்த தமிழகம்

போராட்டம் பலகண்டு சலித்த நேரம்    போடாப்போ என்றெண்ணிக் கிடந்த நேரம் காரோட்டம் எதிர்பார்த்துக் களைத்துப் போன    கானமயில் போல்நாங்கள் வறண்ட நேரம் தேரோட்டும் வீதியிலே திருவி ழாப்போல்    திரளாக வந்துவிட்டாய் அம்மா உன்றன் நீரோட்ட உருக்கண்டோம் நிறைவு கண்டோம்    நிலையான நெல்மணிகள் சிலிர்க்கக் கண்டோம்! குளங்குட்டை தேக்கிவைத்த காலம் சென்று      குளமெல்லாம் கட்டிடமாய் வளர்ந்த நாளில் வளமைக்கும் உரிமைக்கும் ஏங்கி ஏங்கி    வாசல்களில் கத்திநின்றோம் கொடுமை மாய இளவேனில் நேரத்துத் தென்றல் போல    இதமாக இயல்பாகச் சேர்ந்தாய் அம்மா உளவரைக்கும் எமையுய்ய வைக்கும் உன்னை    உள்ளபடி காக்கின்ற வழிதான் காணோம்! பொதுவாகத் தான்வந்தாய் பார தத்தில்    பொருளறிந்தார் உனைக்காக்கும் தகைமை செய்தார் மெதுவாகத் தொடங்குகின்ற நிலத்தில் நீயும்    மேன்மையுடன் வாழ்ந்திடவே அணைகள் செய்தார் நதியாகப் பெருக்கெடுத்துத் திரண்டு சூழும்    நன்னாட்டில் உன்வளமை மட்டும் பார்த்து விதியென்றே நீகடலைக் கலக்கும் மட்டும்    வீணாக விடுகின்றோம் அறியோம் அம்மா! வறண்டநிலம் பயிர்காண வந்து பாய்ந்தாய்    வறுமைபெறும் உழவர்க்கு வசந்த மானாய் சு

ஆத்தா வரும் ஆடி

ஆடி மாச வெள்ளியிலே ஆத்தா வரா வாசலிலே அலங்காரத் தீபம் ஏந்தி ஆரத்தியக் காட்டுவோம் அவளாலே நாமிருக்கும் ஆனந்தத்தப் பாடுவோம்!  கோலாகலப் பந்தலுல கொழந்த போல அவ வரா! கொட்டுச் சத்தம் கூடவர கொலுவிருக்க அவ வரா! நாலாபக்கம் வேதச்சத்தம் நடுவுலதான் அவ வரா நாம படும் துன்பங்கள நசுக்கிடத்தான் அவ வரா! ஆடி மாச வெள்ளியிலே தங்கக் கொலுசு பாதத்துல தகிடததிமி சொல்லுது தமிழறிஞ்ச புலவருக்குத் தத்தகாரம் சொல்லுது அங்கமெல்லாம் கருப்புப் பூச்சு ஆரத்திபோல் குங்குமம் ஆத்தா நடந்து வரும் நேரம் அகிலமெல்லாம் மங்கலம்! ஆடி மாச வெள்ளியிலே சொடுக்குப் போடும் நேரத்துல சொர்க்கம் நரகம் காட்டுவா! சொகுசுங் காட்டி சோகங் காட்டி சோதனையில வாட்டுவா! அடுக்குமல்லி பல்வரிச அதிரச் சிரிக்கும் முத்துதான் ஆடிப்பாடும் ஏழைக்கிவ அழியாத சொத்துதான்! ஆடி மாச வெள்ளியிலே ஆத்தா வரா வாசலிலே அலங்காரத் தீபம் ஏந்தி ஆரத்தியக் காட்டுவோம் அவளாலே நாமிருக்கும் ஆனந்தத்தப் பாடுவோம்!! -விவேக்பாரதி 20.07.2018 பாடல்

ஆத்தா வரும் ஆடி

ஆடி மாச வெள்ளியிலே ஆத்தா வரா வாசலிலே அலங்காரத் தீபம் ஏந்தி ஆரத்தியக் காட்டுவோம் அவளாலே நாமிருக்கும் ஆனந்தத்தப் பாடுவோம்!  கோலாகலப் பந்தலுல கொழந்த போல அவ வரா! கொட்டுச் சத்தம் கூடவர கொலுவிருக்க அவ வரா! நாலாபக்கம் வேதச்சத்தம் நடுவுலதான் அவ வரா நாம படும் துன்பங்கள நசுக்கிடத்தான் அவ வரா! ஆடி மாச வெள்ளியிலே தங்கக் கொலுசு பாதத்துல தகிடததிமி சொல்லுது தமிழறிஞ்ச புலவருக்குத் தத்தகாரம் சொல்லுது அங்கமெல்லாம் கருப்புப் பூச்சு ஆரத்திபோல் குங்குமம் ஆத்தா நடந்து வரும் நேரம் அகிலமெல்லாம் மங்கலம்! ஆடி மாச வெள்ளியிலே சொடுக்குப் போடும் நேரத்துல சொர்க்கம் நரகம் காட்டுவா! சொகுசுங் காட்டி சோகங் காட்டி சோதனையில வாட்டுவா! அடுக்குமல்லி பல்வரிச அதிரச் சிரிக்கும் முத்துதான் ஆடிப்பாடும் ஏழைக்கிவ அழியாத சொத்துதான்! ஆடி மாச வெள்ளியிலே ஆத்தா வரா வாசலிலே அலங்காரத் தீபம் ஏந்தி ஆரத்தியக் காட்டுவோம் அவளாலே நாமிருக்கும் ஆனந்தத்தப் பாடுவோம்!! -விவேக்பாரதி 20.07.2018 பாடல்

வசந்த வாசல்

வசந்தம் என்னும் வாசலிலே வரவேற் பில்லாச் சிறுகுழந்தை - என் அசதியிலே நான் பாடுவதெல்லாம் அகமொழி யாகும் புதுமழலை!  நான் விண்ணில் விரிந்து விதையில் ஒளிந்து விருட்ச மாகும் அதிசயம் - பல வினையெல் லாமென் விரல்களுக் குள்ளதன் விந்தை காண்ப தவசியம் - என் கண்ணுக் குள்ளே ககனத் துளியைக் கண்டு கண்டு ரசிப்பவன் - அக் காட்சியி லேயொரு துளியைக் கிள்ளிக் காதில் கவிதை படிப்பவன்! ஒரு கணத்தில் தொடங்கி கணத்தில் முடியும் கணக்கு மறியா வாழ்க்கையில் - இதைக் கணிப்ப தெவனோ நடிப்ப தவனே காட்சிகள் மட்டும் சேர்க்கையில் - நம் மனத்துத் திரையில் மலைகள் கவிழும் மலரும் விரியும் உண்மைதான் - இம் மரும மறிந்தால் மரித்து விழினும் மண்ணில் வாழ்வ துறுதிதான்! புவி எடுத்த பிறப்பில் எதற்கு பயணம்? எதனை நோக்கி நகர்கிறோம்? - இதில் இடையில் உறவு இடியாய்ப் பிரிவு இடத்தை மட்டும் பகிர்கிறோம் - இறை கொடுத்த உயிர்க்குள் கோடிய ணுக்குள் குடியி ருப்பதும் தெய்வமே - தன் குணத்தில் மனிதன் உயர்வான் தாழ்வான் குலத்தில் இல்லை பாவமே! -விவேக்பாரதி 19.07.2018

வசந்த வாசல்

வசந்தம் என்னும் வாசலிலே வரவேற் பில்லாச் சிறுகுழந்தை - என் அசதியிலே நான் பாடுவதெல்லாம் அகமொழி யாகும் புதுமழலை!  நான் விண்ணில் விரிந்து விதையில் ஒளிந்து விருட்ச மாகும் அதிசயம் - பல வினையெல் லாமென் விரல்களுக் குள்ளதன் விந்தை காண்ப தவசியம் - என் கண்ணுக் குள்ளே ககனத் துளியைக் கண்டு கண்டு ரசிப்பவன் - அக் காட்சியி லேயொரு துளியைக் கிள்ளிக் காதில் கவிதை படிப்பவன்! ஒரு கணத்தில் தொடங்கி கணத்தில் முடியும் கணக்கு மறியா வாழ்க்கையில் - இதைக் கணிப்ப தெவனோ நடிப்ப தவனே காட்சிகள் மட்டும் சேர்க்கையில் - நம் மனத்துத் திரையில் மலைகள் கவிழும் மலரும் விரியும் உண்மைதான் - இம் மரும மறிந்தால் மரித்து விழினும் மண்ணில் வாழ்வ துறுதிதான்! புவி எடுத்த பிறப்பில் எதற்கு பயணம்? எதனை நோக்கி நகர்கிறோம்? - இதில் இடையில் உறவு இடியாய்ப் பிரிவு இடத்தை மட்டும் பகிர்கிறோம் - இறை கொடுத்த உயிர்க்குள் கோடிய ணுக்குள் குடியி ருப்பதும் தெய்வமே - தன் குணத்தில் மனிதன் உயர்வான் தாழ்வான் குலத்தில் இல்லை பாவமே! -விவேக்பாரதி 19.07.2018

ஹரன் ஐயாவுக்கு அஞ்சலி

Image
பாடமாய்க் கண்ட உன்னைப்     படமாகக் காண்ப தற்கா நாடெலாம் சுற்றி நானும்     நாடினேன் நின்றன் நட்பை? ஏடெலாம் வழங்கா ஞானம்     எழுதினாய் இதயத் துள்ளே பாடுவேன் உனக்கோர் பாடல்     பகருவேன் நெஞ்சை அங்கே! மனமெலாம் தேசத் தின்மேல்     மட்டுமே வைத்தாய் நாளும் வினையெலாம் அதற்கே செய்து     விதியெனக் கலந்து விட்டாய் முனைப்புடன் உனக்கு நீயே     முடைந்தவோர் பாதை இங்கே எனக்கென விட்டாய் போலும்     எடுக்கிறேன் நடையை நானும் நீசொலும் வாச கங்கள்     நீசெயும் காரி யங்கள் வாசமாய் நெஞ்சத் துள்ளே     வாழ்க்கையில் கலந்து நிற்கத் தேசமே தெய்வம் என்னும்     தெளிவிலே புறபட் டேன்யான் மாசிலா வண்ணம் காத்து     மனத்திலே மகிழ்வாய் ஐயா! அறத்தினைக் காத்தல் செய்வேன்     அஞ்சுதல் விட்டொ ழித்தேன் மறத்தினை மனத்தில் ஏற்றேன்     வழித்துணை ஆகி என்றன் திறத்தினால் பார தத்தாய்     திருப்பதம் போற்றிக் காக்கும் சிறப்பினை நல்கி யென்றன்     தினத்திலே நிறைந்தி ருப்பாய் ஹரனெனும் ஐயா உன்போல்     அடுத்தினி யாரெ மக்கு? வரமெனத் தந்த தெய்வம்     வழங்கிய தெடுத்துக் கொள்ள மரணமாம

ஹரன் ஐயாவுக்கு அஞ்சலி

Image
பாடமாய்க் கண்ட உன்னைப்     படமாகக் காண்ப தற்கா நாடெலாம் சுற்றி நானும்     நாடினேன் நின்றன் நட்பை? ஏடெலாம் வழங்கா ஞானம்     எழுதினாய் இதயத் துள்ளே பாடுவேன் உனக்கோர் பாடல்     பகருவேன் நெஞ்சை அங்கே! மனமெலாம் தேசத் தின்மேல்     மட்டுமே வைத்தாய் நாளும் வினையெலாம் அதற்கே செய்து     விதியெனக் கலந்து விட்டாய் முனைப்புடன் உனக்கு நீயே     முடைந்தவோர் பாதை இங்கே எனக்கென விட்டாய் போலும்     எடுக்கிறேன் நடையை நானும் நீசொலும் வாச கங்கள்     நீசெயும் காரி யங்கள் வாசமாய் நெஞ்சத் துள்ளே     வாழ்க்கையில் கலந்து நிற்கத் தேசமே தெய்வம் என்னும்     தெளிவிலே புறபட் டேன்யான் மாசிலா வண்ணம் காத்து     மனத்திலே மகிழ்வாய் ஐயா! அறத்தினைக் காத்தல் செய்வேன்     அஞ்சுதல் விட்டொ ழித்தேன் மறத்தினை மனத்தில் ஏற்றேன்     வழித்துணை ஆகி என்றன் திறத்தினால் பார தத்தாய்     திருப்பதம் போற்றிக் காக்கும் சிறப்பினை நல்கி யென்றன்     தினத்திலே நிறைந்தி ருப்பாய் ஹரனெனும் ஐயா உன்போல்     அடுத்தினி யாரெ மக்கு? வரமெனத் தந்த தெய்வம்     வழங்கிய தெடுத்துக்

நேற்றைய நெஞ்சிலிருந்து - HIV, AIDS விழிப்புணர்வு

எங்கள் கல்லூரிக்கு AIDS மற்றும் HIV கிருமி குறித்த விழிப்புணர்வை மாணவர்களிடம் சொல்லி உரையாற்ற சில இளைஞர்கள் வந்தார்கள். அவர்களில் பலர் வெளிநாட்டவர். எல்லா வகுப்புகளுக்கும் சென்று இந்த நோயைக் குறித்த விழிப்புணர்வைப் பரப்பினார்கள். எல்லா இடத்திலும் தான் இது போல நடக்கின்றது ஆனால் இவர்கள் சொன்ன முக்கியமாக விஷயமே, "Breaking the STIGMA" என்னும் மூட நம்பிக்கைகளைப் பெயர்த்தல். HIV மற்றும் AIDS நோயைக் குறித்த குழப்பங்களும் வதந்திகளும் மனிதர்களை பயமுறுத்துகின்றன. சாதாரணமாக இருக்கும் ஒருவருக்குக் கூட அவருக்குத் தெரியாமலேயே இந்நோய் வந்து தாக்கக் கூடும். ஒரு அட்டைப் பூச்சி எப்படி வலிக்காமல் ரத்தத்தை உறிஞ்சி எடுக்குமோ அதனைப் போல பாதிக்கப்பட்ட மனிதரின் உடலில் ஆரம்ப கட்டத்தில் தனது இருப்பைக் காட்டாமல் மொத்த நோய் எதிர்ப்பு சக்தியையும் தாக்கும் கிருமி இந்த HIV கிருமி. இது உண்மை. இது தொட்டால் பரவும், எச்சில் மற்றும் வியர்வையால் பரவும் என்று மக்களை ஒதுக்கி வைப்பது என்பது வதந்தி. இதனைத் தெளிவாக விளக்கிய அந்தக் குழுவினர். நான்கு உண்மைகள் என்றொரு பட்டியலும் இட்டனர். அவை, 1) HIV கிருமி மனிதரிடமிருந

நேற்றைய நெஞ்சிலிருந்து - HIV, AIDS விழிப்புணர்வு

எங்கள் கல்லூரிக்கு AIDS மற்றும் HIV கிருமி குறித்த விழிப்புணர்வை மாணவர்களிடம் சொல்லி உரையாற்ற சில இளைஞர்கள் வந்தார்கள். அவர்களில் பலர் வெளிநாட்டவர். எல்லா வகுப்புகளுக்கும் சென்று இந்த நோயைக் குறித்த விழிப்புணர்வைப் பரப்பினார்கள். எல்லா இடத்திலும் தான் இது போல நடக்கின்றது ஆனால் இவர்கள் சொன்ன முக்கியமாக விஷயமே, "Breaking the STIGMA" என்னும் மூட நம்பிக்கைகளைப் பெயர்த்தல். HIV மற்றும் AIDS நோயைக் குறித்த குழப்பங்களும் வதந்திகளும் மனிதர்களை பயமுறுத்துகின்றன. சாதாரணமாக இருக்கும் ஒருவருக்குக் கூட அவருக்குத் தெரியாமலேயே இந்நோய் வந்து தாக்கக் கூடும். ஒரு அட்டைப் பூச்சி எப்படி வலிக்காமல் ரத்தத்தை உறிஞ்சி எடுக்குமோ அதனைப் போல பாதிக்கப்பட்ட மனிதரின் உடலில் ஆரம்ப கட்டத்தில் தனது இருப்பைக் காட்டாமல் மொத்த நோய் எதிர்ப்பு சக்தியையும் தாக்கும் கிருமி இந்த HIV கிருமி. இது உண்மை. இது தொட்டால் பரவும், எச்சில் மற்றும் வியர்வையால் பரவும் என்று மக்களை ஒதுக்கி வைப்பது என்பது வதந்தி. இதனைத் தெளிவாக விளக்கிய அந்தக் குழுவினர். நான்கு உண்மைகள் என்றொரு பட்டியலும் இட்டனர். அவை, 1) HIV கிருமி மனி

எத்தனை காலம்?

மாங்காட்டுக் காமாட்சி அம்மன் கோவிலில் பாடிய பாடல்.....  எத்தனை காலம் காத்திருப்பேன்? அடி     என்னருந் தாயே பதிலுரைப்பாய்! பித்தனைப் போலிங்கு பாடுகிறேன் உன்றன்     பீடு முகங்காண ஏங்குகிறேன்! சித்தனைப் போலென்னைச் செய்திடம்மா! வந்து     ஜீவனுக்குள் ஒளி பெய்திடம்மா! எத்தனை காலம் காத்திருப்பேன்? அம்மா     என்துயர் தீரும் வழியுரைப்பாய்! குங்கும வாசம் கொஞ்சிவரும்! உன்னைக்     கும்பிடும் மனங்கள் கோடிவரும்! மங்கள வாத்தியம் மகிழ்ந்திருக்கும்! என்றன்     மனமெங்கும் உன்முகம் நிறைந்திருக்கும்! அங்கத்தில் மஞ்சள் சிரித்திருக்கும்! எங்கும்     அன்பெனும் அரசு விரிந்திருக்கும்! திங்களைப் போல்முகம் ஜொலித்திருக்கும்! கண்டால்     திரண்டிடும் அச்சம் விழுந்திருக்கும்! -விவேக்பாரதி  

எத்தனை காலம்?

மாங்காட்டுக் காமாட்சி அம்மன் கோவிலில் பாடிய பாடல்.....  எத்தனை காலம் காத்திருப்பேன்? அடி     என்னருந் தாயே பதிலுரைப்பாய்! பித்தனைப் போலிங்கு பாடுகிறேன் உன்றன்     பீடு முகங்காண ஏங்குகிறேன்! சித்தனைப் போலென்னைச் செய்திடம்மா! வந்து     ஜீவனுக்குள் ஒளி பெய்திடம்மா! எத்தனை காலம் காத்திருப்பேன்? அம்மா     என்துயர் தீரும் வழியுரைப்பாய்! குங்கும வாசம் கொஞ்சிவரும்! உன்னைக்     கும்பிடும் மனங்கள் கோடிவரும்! மங்கள வாத்தியம் மகிழ்ந்திருக்கும்! என்றன்     மனமெங்கும் உன்முகம் நிறைந்திருக்கும்! அங்கத்தில் மஞ்சள் சிரித்திருக்கும்! எங்கும்     அன்பெனும் அரசு விரிந்திருக்கும்! திங்களைப் போல்முகம் ஜொலித்திருக்கும்! கண்டால்     திரண்டிடும் அச்சம் விழுந்திருக்கும்! -விவேக்பாரதி  

புழுக்கம்

மலரைக் கூட புசிக்கும் ஓநாய்     மயக்கம் வாழும் காலம் மனத்தில் முழுதும் குப்பை நிரப்பி     மறைத்து வேஷம் கோலம் உலகில் இனிமேல் எதுதான் மிஞ்சும்     உண்மை நேர்மை செத்தால்? உணர்வுக் குள்ளே கனல்வர வேண்டும்     உயர்வாய் பெண்ணே வித்தாய்! ஆணே ஆணே பெண்ணழு கின்றாள்     அசிங்கம் நமக்கென் றறிவாய் ஆண்டவன் படைத்த கண்களி லொன்று     அழிவதைக் எண்ணிக் குணிவாய் வீணே தைரியம் அவரிடம் சொல்லி!     விட்டொழிப் பாயுன் காமம் விளையாட் டல்ல வாழ்க்கை என்பது     வினைகள் செய்யும் யாகம்! உன்னைப் பேயாய்ப் பார்ப்பது கண்டும்     உணர்ச்சி இல்லா நெஞ்சா? உறுதுணை யாக இருக்க விலையேல்,     உனக்கேன் ஆண்மை? நஞ்சாய்! பெண்ணைக் காணும் போதுன் கண்ணில்     பேணுக உண்மை ஒழுக்கம் பேடித் தனங்கள் மறைந்தால் நம்மைப்     பிரியும் இந்தப் புழுக்கம்!! -விவேக்பாரதி 18.07.2018

புழுக்கம்

மலரைக் கூட புசிக்கும் ஓநாய்     மயக்கம் வாழும் காலம் மனத்தில் முழுதும் குப்பை நிரப்பி     மறைத்து வேஷம் கோலம் உலகில் இனிமேல் எதுதான் மிஞ்சும்     உண்மை நேர்மை செத்தால்? உணர்வுக் குள்ளே கனல்வர வேண்டும்     உயர்வாய் பெண்ணே வித்தாய்! ஆணே ஆணே பெண்ணழு கின்றாள்     அசிங்கம் நமக்கென் றறிவாய் ஆண்டவன் படைத்த கண்களி லொன்று     அழிவதைக் எண்ணிக் குணிவாய் வீணே தைரியம் அவரிடம் சொல்லி!     விட்டொழிப் பாயுன் காமம் விளையாட் டல்ல வாழ்க்கை என்பது     வினைகள் செய்யும் யாகம்! உன்னைப் பேயாய்ப் பார்ப்பது கண்டும்     உணர்ச்சி இல்லா நெஞ்சா? உறுதுணை யாக இருக்க விலையேல்,     உனக்கேன் ஆண்மை? நஞ்சாய்! பெண்ணைக் காணும் போதுன் கண்ணில்     பேணுக உண்மை ஒழுக்கம் பேடித் தனங்கள் மறைந்தால் நம்மைப்     பிரியும் இந்தப் புழுக்கம்!! -விவேக்பாரதி 18.07.2018

பலாத்காரம்

நடிகையரை நடிகர்களைப் பார்த்து விட்டால்     நாத்தொங்க வாலாட்டிப் பின்னா லோடி அடிவருடி செல்ஃபிகளை எடுத்துத் தள்ளி     அதுகொண்டு மார்தட்டும் கூட்ட மெல்லாம் வெடிபோல வெடிக்கின்ற செயலைப் பார்த்து     வியந்தபடி நிற்கின்றேன் பெண்கள் என்றால் முடிபோடும் பொம்மைகள் என்றார் அந்நாள்     முகைகூட பலியானாள் கயமைக் கிந்நாள் பாடல்களில் திரைக்கதையில் நிகழ்ச்சி தம்மில்     பாழ்காம எண்ணத்தைத் திணித்துத் தீர்க்கும் ஊடகமாம் அரக்கர்களின் கூட்ட மின்று     உருமுகின்ற நிலைகண்டு திகைக்கின் றேன்நான் ஏடகத்தில் முன்னோர்கள் சொல்லி வைத்த     எல்லாமே பொய்யென்று பொய்மை பேசும் நாடகத்தே பெண்மகளை மலர்கள் தம்மை     நசுக்கிடுதல் காணமட்டும் குதிக்கின் றார்கள்! நம்பிக்கை பலாத்காரம் செய்யப் பட்டு     நாளாகிப் பொனதிந்த நிலமாம் தாயைத் தம்பிக்கும் வைக்காமல் அண்ணன் மாரே     தான்சுரண்டி பலாத்காரம் செய்து விட்டார் கும்பிட்டுக் கும்பிட்டு மனிதர் மானம்     குலைந்திடவே பலாத்காரம் செய்தார் பின்தான் வம்பிற்குப் பெண்களிடம் செய்ய வந்தார்     வாட்டமெனில் முன்னதற்கும் வாடல் வேண்டும் சுயவொழுக்கம் எல்லாமே முன்னோர் வேதம்     சுத்தமான சி

பலாத்காரம்

நடிகையரை நடிகர்களைப் பார்த்து விட்டால்     நாத்தொங்க வாலாட்டிப் பின்னா லோடி அடிவருடி செல்ஃபிகளை எடுத்துத் தள்ளி     அதுகொண்டு மார்தட்டும் கூட்ட மெல்லாம் வெடிபோல வெடிக்கின்ற செயலைப் பார்த்து     வியந்தபடி நிற்கின்றேன் பெண்கள் என்றால் முடிபோடும் பொம்மைகள் என்றார் அந்நாள்     முகைகூட பலியானாள் கயமைக் கிந்நாள் பாடல்களில் திரைக்கதையில் நிகழ்ச்சி தம்மில்     பாழ்காம எண்ணத்தைத் திணித்துத் தீர்க்கும் ஊடகமாம் அரக்கர்களின் கூட்ட மின்று     உருமுகின்ற நிலைகண்டு திகைக்கின் றேன்நான் ஏடகத்தில் முன்னோர்கள் சொல்லி வைத்த     எல்லாமே பொய்யென்று பொய்மை பேசும் நாடகத்தே பெண்மகளை மலர்கள் தம்மை     நசுக்கிடுதல் காணமட்டும் குதிக்கின் றார்கள்! நம்பிக்கை பலாத்காரம் செய்யப் பட்டு     நாளாகிப் பொனதிந்த நிலமாம் தாயைத் தம்பிக்கும் வைக்காமல் அண்ணன் மாரே     தான்சுரண்டி பலாத்காரம் செய்து விட்டார் கும்பிட்டுக் கும்பிட்டு மனிதர் மானம்     குலைந்திடவே பலாத்காரம் செய்தார் பின்தான் வம்பிற்குப் பெண்களிடம் செய்ய வந்தார்     வாட்டமெனில் முன்னதற்கும் வாடல் வேண்டும் சுயவொழுக்கம் எல்லாமே முன்னோர் வேதம்     சுத்

தமிழின் சக்தி

தமிழுக்குச் சக்தியுண்டு – அதைத்    தாரணி கண்டிடும் நாளுமுண்டு! தமிழுக்குள் பக்தியுண்டு – தம்பி    தாவிநீ பாடு தமிழிற்சிந்து! கம்பன் கவிதையைப்போல் – இந்தக்    காசினி கண்ட கவிகளுண்டோ? உம்பர் வியந்தகவி – நம    துள்ளத்தி லூறி யினிக்குங்கவி! வள்ளுவன் சொன்னதைப்போல் – புவி    வாழ்க்கைக் குயரிய வேதநெறி கொள்ளுவ தெந்தமொழி – அன்புக்    கொள்கை பரப்பும் தமிழையன்றி? ஓங்கு புகழ்ச்சிலம்பும் – நல்ல    ஒண்டமிழ்ச் செல்வச் சிந்தாமணியும் தாங்கும் பெருமையெலாம் – வேற்றுத்    தன்மை மொழிகள் பெறலெளிதோ? ஒலியின் குறிப்பளந்தே – வளர்ந்    தோங்கிய யாப்புக் களஞ்சியம்போல் கலியில் பிரிதுமுண்டோ? – தமிழ்க்    கவிதையைப் போற்பிற வெல்லமுண்டோ? வானக் கருத்துமுதல் – இந்த    மண்ணகத் துள்ள அணுவரையில் ஆன தகவலெல்லாம் – நமக்    கள்ளிக் கொடுத்ததும் ஆன்மசக்தி! தேர்ந்தவிஞ் ஞானச்சக்தி! – தமிழ்    தெள்ளமு தான இசையின்சக்தி! சேர்ந்த பலமொழிக்கும் – எழில்    சேர்ந்த தமிழ்நம் உரிமைச்சக்தி! பாரதிர் பாட்டுச்சக்தி! – கொண்ட    பண்டைய நூல்கள் பழமைச்சக்தி! வீரத் திருவின்சக்தி! – தமிழ்    வீரியம் கூட்டிடும் அன்புச்சக்தி! கட்டுரைப் புதினங்கள

தமிழின் சக்தி

தமிழுக்குச் சக்தியுண்டு – அதைத்    தாரணி கண்டிடும் நாளுமுண்டு! தமிழுக்குள் பக்தியுண்டு – தம்பி    தாவிநீ பாடு தமிழிற்சிந்து! கம்பன் கவிதையைப்போல் – இந்தக்    காசினி கண்ட கவிகளுண்டோ? உம்பர் வியந்தகவி – நம    துள்ளத்தி லூறி யினிக்குங்கவி! வள்ளுவன் சொன்னதைப்போல் – புவி    வாழ்க்கைக் குயரிய வேதநெறி கொள்ளுவ தெந்தமொழி – அன்புக்    கொள்கை பரப்பும் தமிழையன்றி? ஓங்கு புகழ்ச்சிலம்பும் – நல்ல    ஒண்டமிழ்ச் செல்வச் சிந்தாமணியும் தாங்கும் பெருமையெலாம் – வேற்றுத்    தன்மை மொழிகள் பெறலெளிதோ? ஒலியின் குறிப்பளந்தே – வளர்ந்    தோங்கிய யாப்புக் களஞ்சியம்போல் கலியில் பிரிதுமுண்டோ? – தமிழ்க்    கவிதையைப் போற்பிற வெல்லமுண்டோ? வானக் கருத்துமுதல் – இந்த    மண்ணகத் துள்ள அணுவரையில் ஆன தகவலெல்லாம் – நமக்    கள்ளிக் கொடுத்ததும் ஆன்மசக்தி! தேர்ந்தவிஞ் ஞானச்சக்தி! – தமிழ்    தெள்ளமு தான இசையின்சக்தி! சேர்ந்த பலமொழிக்கும் – எழில்    சேர்ந்த தமிழ்நம் உரிமைச்சக்தி! பாரதிர் பாட்டுச்சக்தி! – கொண்ட    பண்டைய நூல்கள் பழமைச்சக்தி! வீரத் திருவின்சக்தி! – தமிழ்    வீரியம் கூட்டி

மூர்த்தியவன் யானை முகன் - நடுவெழுத்தலங்காரம்

"சந்தவசந்தம்" கூகுள் குழுமத்தில் கவிமாமணி இலந்தையாரின் நெறிகாட்டலில் கவிஞர் குருநாதன் ரமணி அவர்கள் தலைமையில் நிகழ்ந்துகொண்டிருக்கிறது மிறைப்பா கவியரங்கம் . அதில் அடியேன் பதிந்த கவிதைகளும் ஒன்று. நடுவெழுத்தலங்காரம் என்பது செய்யுளில் சொல்லப்படும் சொற்களின் வேறுபெயர்களை எடுத்துக்கொண்டு அவற்றின் நடுவெழுத்துகளைக் கோத்துப் படித்தால் வேறுபெயர் வருவது. அப்படி ஒரு நடுவெழுத்தலங்காரத்தில் காப்புச் செய்யுள் இயற்றினேன். நோயிலும் சிந்தனையின் நோக்கிலும் விண்ணிருந்து பாயும் மழையிலும் பாரிலும் - நாயுணர்த்தும் நேர்த்திமிகு பண்பிலும் நேயத்தோ டேகாப்பான் மூர்த்தியவன் யானை முகன்! பொருள் : நோய் வரும்போதும், சிந்தனையில் நோக்கில் இருந்தும், விண்ணிலிருந்து பாயும் மழையாகவும், பாரிலும், நாய் உணர்த்தும் நன்றி என்னும் நேர்த்திமிகு பண்பினை உணர்த்தி நம்மை நேயத்துடன் காக்கும் மூர்த்தி தான் யானை முகன். நடுவெழுத்து: நோய் - வியாதி - யா சிந்தனையின் நோக்கு - நினைவு - னை விண்ணிருந்து பாயும் மழை - அமுது - மு பார் - செகம் - க நாயுரைக்கும் நேர்த்திமிகு பண்பு - நன்றி - ன் "யானைமுகன்" -விவேக்பாரதி 01.07.

மூர்த்தியவன் யானை முகன் - நடுவெழுத்தலங்காரம்

"சந்தவசந்தம்" கூகுள் குழுமத்தில் கவிமாமணி இலந்தையாரின் நெறிகாட்டலில் கவிஞர் குருநாதன் ரமணி அவர்கள் தலைமையில் நிகழ்ந்துகொண்டிருக்கிறது மிறைப்பா கவியரங்கம் . அதில் அடியேன் பதிந்த கவிதைகளும் ஒன்று. நடுவெழுத்தலங்காரம் என்பது செய்யுளில் சொல்லப்படும் சொற்களின் வேறுபெயர்களை எடுத்துக்கொண்டு அவற்றின் நடுவெழுத்துகளைக் கோத்துப் படித்தால் வேறுபெயர் வருவது. அப்படி ஒரு நடுவெழுத்தலங்காரத்தில் காப்புச் செய்யுள் இயற்றினேன். நோயிலும் சிந்தனையின் நோக்கிலும் விண்ணிருந்து பாயும் மழையிலும் பாரிலும் - நாயுணர்த்தும் நேர்த்திமிகு பண்பிலும் நேயத்தோ டேகாப்பான் மூர்த்தியவன் யானை முகன்! பொருள் : நோய் வரும்போதும், சிந்தனையில் நோக்கில் இருந்தும், விண்ணிலிருந்து பாயும் மழையாகவும், பாரிலும், நாய் உணர்த்தும் நன்றி என்னும் நேர்த்திமிகு பண்பினை உணர்த்தி நம்மை நேயத்துடன் காக்கும் மூர்த்தி தான் யானை முகன். நடுவெழுத்து: நோய் - வியாதி - யா சிந்தனையின் நோக்கு - நினைவு - னை விண்ணிருந்து பாயும் மழை - அமுது - மு பார் - செகம் - க நாயுரைக்கும் ந

இளங்கவிஞர்களுக்குக் கடிதம்

முன்குறிப்பு: சேவாலயாவின் "மகாகவி பாரதியார் மேனிலைப் பள்ளி"யில் நிகழ்ந்த கவிதை மன்றத்தின் தொடக்க விழாவில் அந்த மாணவர்களுக்காக நான் எழுதிய கடிதம்.  இளங்கவிஞர்களுக்கு இளங்கவியின் வணக்கம் , கவிதை எழுத ஆர்வம் பெற்ற உங்கள் அனைவருக்கும் கலைவாணி பரிபூரண அருளைக் கொடுக்கட்டும். கவிதை எழுத வேண்டும் என்ற முனைப்பெடுத்து விட்டீர்கள். அதுவே வெற்றி. நான் வேறென்ன சொல்ல ? இருந்தாலும் உங்களிடம் சொல்ல வேண்டும் என்று சில விஷயங்கள் என் மனத்துக்குள் எப்போதும் இருந்ததுண்டு. அவற்றை இந்தத் தருணத்திலேனும் உங்களுடன் பகிர்ந்து கொள்கிறேன். முதலில் "நம்பிக்கை வேண்டும்". "நம்பிக்கை இல்லாதவன் கவிதை எழுத வரக்கூடாது" என்று எழுத்தாளர் ஜெயகாந்தன் விளையாட்டாகச் சொல்லுவார். அது முற்றிலுமான உண்மை. உங்களுக்குள் "நாம் எழுதுவது கவிதை தானா ?" என்ற எண்ணம் எழுந்தால் அது எழுதத் தடை. அதை உடைக்க வேண்டும். நம்பிக்கையோடு எழுதுங்கள். எழுத எழுதத்தான் கவிதைக்கான தேடலுக்குள் நீங்கள் பயணப்பட தோதாக இருக்கும். எப்படியெல்லாம் கவிதை எழுதி இருகிறார்கள் ? எப்படி எல்லாம் எழுத முடியும் என்ற ஆராய்ச்சியி