கவவுக்கை நெகிழா - படம் தந்த கவிதை

யார் வகுத்த விதியில்
இவர்கள் காதல் அடங்கும்?
யார் மொழிந்த கதையில்
இவர்கள் வாழ்வு நிகழும்?
யார் மனத்தின் திரையில்
இவர்கள் காட்சி தொடங்கும்?
யார் மறுக்க? வெறுக்க?
இதுவும் காதல் உலகம்! 


கண் கொடுத்த ஈர்ப்பு
காயத் துடிப்பும் சேர்ப்பு
பெண் கவர்ந்த பெண்ணும்
ஆண் கவர்ந்த ஆணும்
பருவக் கால ஈர்ப்பைப்
பழுது பார்க்கும் உலகம்
உருவத் தோற்றம் மறந்து
உள்ளம் ஏற்கும் காதல்!

காதலர்கள் பிரியா,
கவவுக்கை நெகிழா,
தீதறுக நாளும்
திறன்றிந்து வாழ்க!
நீரடித்து என்றும்
நீர் விலகுவதில்லை!
மாரடிக்கும் உலகம்
மறுத்து பேசும் உண்மை!!

கவவுக்கை நெகிழா 
https://www.youtube.com/watch?v=rJWIpMvXLUY&sns=fb 

Comments