Posts

Showing posts from August, 2018

சதி நடனம்

Image
    சலங்கையின் ஒலியோடே - தக    தரிகிட தரிகிட இசையோடே சடுதியில் ஆடுகிறாள் - சதி    சந்தச் சிலம்பொலி போடுகிறாள்! உலகுகள் அதற்கேங்கும் - பல    ஊழிகள் அவள்நடம் தனைத்தாங்கும் உயிர்களும் அதில்வாழும் - ஓம்    ஓமெனும் சுருதியும் அதிலோங்கும்! வானொரு மேடையென - நிலம்    வாரிதி யாவையும் ஆடையென வாழ்வெனும் மணிசிதறத் - தாய்    வடிவுடன் எழில்நட மாடுகிறாள் ஞானமெனும் விழியால் - அவள்    நிர்த்தனம் நோக்கிட நோக்கிடவோ நானவள் அவள்நானாய்ப் - பல    நாட்களின் நாடகம் போடுகிறாள்! மல்லிகை விண்மீன்கள் - அவள்    மடியினில் குலுங்கிடும் பொன்மணிகள் மனதினில் அவளாட்டம் - புதிர்    மருமம் கிளப்பிடும் ஆர்ப்பாட்டம் சொல்லினில் அவள்சந்தம் - கவி    சொக்கி ஜதிசொல்ல அவள்நடனம் சூரியன் ஒருநயனம் - பொழி    சுடர்விடு மதியொளி மறுநயனம் சிவனொரு பாகத்தில் - நுதல்    சிவந்திடும் குங்கும வேகத்தில் சிகையொரு தீக்கோலம் - பொறி    சீறிடும் இருவிழி வாட்கோலம் தவமொரு வழிகண்டீர் - எழில்    தாய்நடம் கண்டிடத் தவம்புரிவீர் தமிழ்க்கவி பாடிடுவீர் - அவள்    தகதக தகவென முன்வருவாள்! அம்பிகை ஆடுகிறாள் - சிவ    ஹரசிவ ஓமெனப் பாடுகிறாள் அன்பர்கள் ஆடுகிறார்

சதி நடனம்

Image
    சலங்கையின் ஒலியோடே - தக    தரிகிட தரிகிட இசையோடே சடுதியில் ஆடுகிறாள் - சதி    சந்தச் சிலம்பொலி போடுகிறாள்! உலகுகள் அதற்கேங்கும் - பல    ஊழிகள் அவள்நடம் தனைத்தாங்கும் உயிர்களும் அதில்வாழும் - ஓம்    ஓமெனும் சுருதியும் அதிலோங்கும்! வானொரு மேடையென - நிலம்    வாரிதி யாவையும் ஆடையென வாழ்வெனும் மணிசிதறத் - தாய்    வடிவுடன் எழில்நட மாடுகிறாள் ஞானமெனும் விழியால் - அவள்    நிர்த்தனம் நோக்கிட நோக்கிடவோ நானவள் அவள்நானாய்ப் - பல    நாட்களின் நாடகம் போடுகிறாள்! மல்லிகை விண்மீன்கள் - அவள்    மடியினில் குலுங்கிடும் பொன்மணிகள் மனதினில் அவளாட்டம் - புதிர்    மருமம் கிளப்பிடும் ஆர்ப்பாட்டம் சொல்லினில் அவள்சந்தம் - கவி    சொக்கி ஜதிசொல்ல அவள்நடனம் சூரியன் ஒருநயனம் - பொழி    சுடர்விடு மதியொளி மறுநயனம் சிவனொரு பாகத்தில் - நுதல்    சிவந்திடும் குங்கும வேகத்தில் சிகையொரு தீக்கோலம் - பொறி    சீறிடும் இருவிழி வாட்கோலம் தவமொரு வழிகண்டீர் - எழில்    தாய்நடம் கண்டிடத் தவம

வடிவாய்க் கவிசெய்வோம் வா!

Image
  வானங் கருத்துதரும், வற்றாத சந்தத்தை ஞானக் குயிலும் நமக்களிக்கும், - தேனைக் குடித்த கரடி குதித்தல்போல் துள்ளி வடிவாய்க் கவிசெய்வோம் வா!  ஆற்றல் மனத்துவசம், ஆக்கம் கரத்துவசம், ஏற்றம் நினைப்புவசம் ஏறிவா! - காற்றைப் பிடித்து வரிக்குள் பிதுக்க அடைத்து வடிவாய்க் கவிசெய்வோம் வா! நாட்டுநிலை மாறி நலமோங்க, நம்முடைய வீட்டுநிலை கூட வியப்பாகக், - கூட்டும் படையாகச் சொற்கள் பலம்சேர்க்க நாமும் வடிவாய்க் கவிசெய்வோம் வா இயற்கை இசைதரும் இன்பம், மனத்தை மயக்கும் அதுபெரும் மாயம்! - நயந்து தடையின்றி வானுக்குத் தாவிக் குதித்து வடிவாய்க் கவிசெய்வோம் வா! வண்ணக் கடல்காண, வாடா மலர்காண, எண்ணம்போல் காட்சி எழிலாகத் - உண்மை உடையாத காலம் உருவாகச் சேர்ந்து வடிவாய்க் கவிசெய்வோம் வா!! -விவேக்பாரதி 30.08.2018

வடிவாய்க் கவிசெய்வோம் வா!

Image
  வானங் கருத்துதரும், வற்றாத சந்தத்தை ஞானக் குயிலும் நமக்களிக்கும், - தேனைக் குடித்த கரடி குதித்தல்போல் துள்ளி வடிவாய்க் கவிசெய்வோம் வா!  ஆற்றல் மனத்துவசம், ஆக்கம் கரத்துவசம், ஏற்றம் நினைப்புவசம் ஏறிவா! - காற்றைப் பிடித்து வரிக்குள் பிதுக்க அடைத்து வடிவாய்க் கவிசெய்வோம் வா! நாட்டுநிலை மாறி நலமோங்க, நம்முடைய வீட்டுநிலை கூட வியப்பாகக், - கூட்டும் படையாகச் சொற்கள் பலம்சேர்க்க நாமும் வடிவாய்க் கவிசெய்வோம் வா இயற்கை இசைதரும் இன்பம், மனத்தை மயக்கும் அதுபெரும் மாயம்! - நயந்து தடையின்றி வானுக்குத் தாவிக் குதித்து வடிவாய்க் கவிசெய்வோம் வா! வண்ணக் கடல்காண, வாடா மலர்காண, எண்ணம்போல் காட்சி எழிலாகத் - உண்மை உடையாத காலம் உருவாகச் சேர்ந்து வடிவாய்க் கவிசெய்வோம் வா!! -விவேக்பாரதி 30.08.2018

வினைதீர்க்க விரைந்தோடி வா

Image
  வினைதீர்க்க விரைந்தோடி வா - நெஞ்சில்     வீரத்தை ஞானத்தைக் கருவாக்கி வா முனைநோக்கி நீயோடி வா - நாட்டின்     மையத்தைக் காக்கும் முனைப்போடு வா காலங்கள் உன்றன் வசம் - செய்யும்     கடமைகள் உரிமைகள் உன்கை வசம் ஜாலங்கள் உன்கண் வசம் - இன்னும்     சந்தேகம் என்னவோ நீயோடி வா வந்தாலே போதும் விழா - நீயும்     வழுவற்ற தேய்வற்ற புதுவெண்ணிலா தந்தாலே போதும் கரம் - பின்னர்     தரமுண்டு பலமுண்டு இதுவே வரம்! பிரிவுக்குள் சிக்கி டாதே - உண்டு     பிழைப்போரின் கூட்டத்துள் நின்றிடாதே சரிவுக்கும் ஏற்றமுண்டு - குறியைச்     சரியாக்கு நம்நெஞ்சில் மாற்றமுண்டு! பொய்சொல்லி ஆள்வார் தலை - வெற்றுப்     புறம்சொல்லி எப்போதும் ஆவார் சிலை கைசொல்லி தலை கேட்பதா? - உன்றன்     கடமைகள் செய்யாமல் நீ தோற்பதா? வேறு வலுவற்ற மூங்கில்கள் நிற்பதில்லை - எந்த     வன்காற்றும் புல்லை அறுப்பதில்லை மலர்கொய்யும் போதிலும் அழுவதில்லை - வெல்லும்     மனம்கொண்டு வினைசெய்ய விழுவதில்லை! உலகத்து நீதிகள் நமக்காகவே - வாழும்     உயிரெலாம் ஏங்குதோர் தலைக்காகவே சிலர்வாழப் பலர்வீழ இதுநியாயமா? - வினை     சர

வினைதீர்க்க விரைந்தோடி வா

Image
  வினைதீர்க்க விரைந்தோடி வா - நெஞ்சில்     வீரத்தை ஞானத்தைக் கருவாக்கி வா முனைநோக்கி நீயோடி வா - நாட்டின்     மையத்தைக் காக்கும் முனைப்போடு வா காலங்கள் உன்றன் வசம் - செய்யும்     கடமைகள் உரிமைகள் உன்கை வசம் ஜாலங்கள் உன்கண் வசம் - இன்னும்     சந்தேகம் என்னவோ நீயோடி வா வந்தாலே போதும் விழா - நீயும்     வழுவற்ற தேய்வற்ற புதுவெண்ணிலா தந்தாலே போதும் கரம் - பின்னர்     தரமுண்டு பலமுண்டு இதுவே வரம்! பிரிவுக்குள் சிக்கி டாதே - உண்டு     பிழைப்போரின் கூட்டத்துள் நின்றிடாதே சரிவுக்கும் ஏற்றமுண்டு - குறியைச்     சரியாக்கு நம்நெஞ்சில் மாற்றமுண்டு! பொய்சொல்லி ஆள்வார் தலை - வெற்றுப்     புறம்சொல்லி எப்போதும் ஆவார் சிலை கைசொல்லி தலை கேட்பதா? - உன்றன்     கடமைகள் செய்யாமல் நீ தோற்பதா? வேறு வலுவற்ற மூங்கில்கள் நிற்பதில்லை - எந்த     வன்காற்றும் புல்லை அறுப்பதில்லை மலர்கொய்யும் போதிலும் அழுவதில்லை - வெல்லும்     மனம்கொண்டு வினைசெய்ய விழுவதில்லை! உலகத்து நீதிகள் நமக்காகவே - வாழும்     உயிரெலாம் ஏங்குதோர் தலைக்காகவே சிலர்வாழப் பலர்வீழ இதுநியாயமா?

ரக்‌ஷா பந்தன்

Image
  கண்ணிமையின் ஒரிழைதான் விழுந்திடினும்     உயிர்துடிக்கும் கண்கள்! தாய்மைப் பெண்ணியத்தை எவரிடமும் பேணுகின்ற     உயர்நெஞ்சம்! பிழைகள் நீக்கி உண்மைதனை உள்ளத்தில் தைக்கின்ற     குருமார்கள்! உடலிற் கோடு வண்ணமுடன் வரையுங்கால் மழலைகளாம்!     சகோதரிகள் வாழ்க்கைக் கின்பம்! ஒருவீட்டில் ஒருதாயின் அரவணைப்பில்     வளர்க்கின்ற ஒருவன் பின்னாள் தெருவெல்லாம் வீடாகத் திரும்புதிசை     யாவுந்தாய் தெய்வ மாக மருவியதைக் காண்பதுவும் மனம்கொஞ்ச     வாழ்வதுவும் மகிமை கொண்ட திருநாடாம் நம்முடைய பாரதத்தில்     மட்டுந்தான் கிடைப்ப தாகும்! பணிக்கின்ற மென்கண்கள் இனிக்கின்ற     செவ்வாய்கள் படைபோல் சேரத் திணிக்கின்ற இனிப்புவகை திரள்கின்ற     ஒருகயிற்றின் திண்மைக் கெல்லாம் பிணைக்கின்ற புதுப்பாசம் பிறக்கின்ற     நற்பொழுது பின்னால் வந்து மணக்கின்ற ஒருநாளாய் மலர்ந்ததுநம்     தமிழ்நாட்டில் ரக்‌ஷா பந்தன்!! -விவேக்பாரதி 26.08.2018

ரக்‌ஷா பந்தன்

Image
  கண்ணிமையின் ஒரிழைதான் விழுந்திடினும்     உயிர்துடிக்கும் கண்கள்! தாய்மைப் பெண்ணியத்தை எவரிடமும் பேணுகின்ற     உயர்நெஞ்சம்! பிழைகள் நீக்கி உண்மைதனை உள்ளத்தில் தைக்கின்ற     குருமார்கள்! உடலிற் கோடு வண்ணமுடன் வரையுங்கால் மழலைகளாம்!     சகோதரிகள் வாழ்க்கைக் கின்பம்! ஒருவீட்டில் ஒருதாயின் அரவணைப்பில்     வளர்க்கின்ற ஒருவன் பின்னாள் தெருவெல்லாம் வீடாகத் திரும்புதிசை     யாவுந்தாய் தெய்வ மாக மருவியதைக் காண்பதுவும் மனம்கொஞ்ச     வாழ்வதுவும் மகிமை கொண்ட திருநாடாம் நம்முடைய பாரதத்தில்     மட்டுந்தான் கிடைப்ப தாகும்! பணிக்கின்ற மென்கண்கள் இனிக்கின்ற     செவ்வாய்கள் படைபோல் சேரத் திணிக்கின்ற இனிப்புவகை திரள்கின்ற     ஒருகயிற்றின் திண்மைக் கெல்லாம் பிணைக்கின்ற புதுப்பாசம் பிறக்கின்ற     நற்பொழுது பின்னால் வந்து மணக்கின்ற ஒருநாளாய் மலர்ந்ததுநம்     தமிழ்நாட்டில் ரக்‌ஷா பந்தன்!! -விவேக்பாரதி 26.08.2018

அவர்தான் பாரதி சுராஜ்

Image
பாரதி அன்பர் பைந்தமிழ்ச் செல்வர்     பக்குவ மாகப் பேசிடும் நெஞ்சர் தாரக மாகக் கண்ணனின் நாமம்     தன்னுடை நெஞ்சில் முழங்கிடும் பண்பர்! சூரிய னாகத் தனியொரு வீதி     சமைத்துப் பாரதி புகழை வளர்த்தார் நேரிய சிந்தனை நேரிய பேச்சு     நினைவில் அவர்க்குத் தமிழே மூச்சு அவர்தான் பாரதி சுராஜையா அவரைப் போலினி யாரையா? தள்ளா வயதினும் தமிழுக் காக     தரமுயர் மன்றம் நிதமும் நிகழ்த்தித் தள்ளா ததனை முன்னிருந் தூக்கித்     தகுந்த அறிவுரை பின்னால் பேசிக் கள்ளாய்க் கவிதை கிடைத்தால் சொக்கிக்     கண்ணில் ஒற்றி கரமழை பொழிந்து துள்ளும் உள்ளம் துவழா இளமைத்     தோற்றம் நமக்கும் ஏற்றம் அவரே அவர்தான் பாரதி சுராஜையா அவரைப் போலினி யாரையா? அழகிய திருமண் அகத்தில் பாரதி     ஆன்ற புலமை அதனுடன் ஹாஸ்யம் பழகிட இனிமை பக்குவப் பேச்சு     பாட்டைக் கேட்டுக் குழையும் குழந்தை முழுதும் தமிழின் முதுமைத் தேனில்     மூழ்கிய தங்கம் முனைப்பினில் சிங்கம் எழுத்தும் பேச்சும் வாழ்க்கை என்றே     எழிலாய் வாழ்ந்த அரசரின் பிம்பம் அவர்தான் பாரதி சுராஜையா அவரைப் போலினி யாரையா? நடந்தோம் அவரின் வழிப

அவர்தான் பாரதி சுராஜ்

Image
பாரதி அன்பர் பைந்தமிழ்ச் செல்வர்     பக்குவ மாகப் பேசிடும் நெஞ்சர் தாரக மாகக் கண்ணனின் நாமம்     தன்னுடை நெஞ்சில் முழங்கிடும் பண்பர்! சூரிய னாகத் தனியொரு வீதி     சமைத்துப் பாரதி புகழை வளர்த்தார் நேரிய சிந்தனை நேரிய பேச்சு     நினைவில் அவர்க்குத் தமிழே மூச்சு அவர்தான் பாரதி சுராஜையா அவரைப் போலினி யாரையா? தள்ளா வயதினும் தமிழுக் காக     தரமுயர் மன்றம் நிதமும் நிகழ்த்தித் தள்ளா ததனை முன்னிருந் தூக்கித்     தகுந்த அறிவுரை பின்னால் பேசிக் கள்ளாய்க் கவிதை கிடைத்தால் சொக்கிக்     கண்ணில் ஒற்றி கரமழை பொழிந்து துள்ளும் உள்ளம் துவழா இளமைத்     தோற்றம் நமக்கும் ஏற்றம் அவரே அவர்தான் பாரதி சுராஜையா அவரைப் போலினி யாரையா? அழகிய திருமண் அகத்தில் பாரதி     ஆன்ற புலமை அதனுடன் ஹாஸ்யம் பழகிட இனிமை பக்குவப் பேச்சு     பாட்டைக் கேட்டுக் குழையும் குழந்தை முழுதும் தமிழின் முதுமைத் தேனில்     மூழ்கிய தங்கம் முனைப்பினில் சிங்கம் எழுத்தும் பேச்சும் வாழ்க்கை என்றே     எழிலாய் வாழ்ந்த அரசரின் பிம்பம் அவர்தான் பாரதி சுராஜையா அவரைப் போலினி யாரையா? நடந்

மலையாள நாடு

மலையாள நாடு, எங்கள் மனம் கொள்ளும் நாடு மழையோடும் தென்றலோடும் உயிர்வாழும் நாடு கலையாத நம்பிக்கைகள் கருவாகும் நாடு கார்மேகம் தஞ்சங்கொண்டு விளையாடும் நாடு!  எங்களூர்ப் பெண்டுகளெல்லாம் கிள்ளைகளோடு விளையாடும் எங்கள் ஊர் ஆண்மகவெல்லாம் புலியின் கூட்டத் துறவாகும்! செங்கதிரும் அனுமதி கேட்டு மேகச் சேலை போர்த்திக் கொள்ளும் மங்கலமாம் வசந்த காலம் மடியில் எம்மைத் தாங்கிக் கொள்ளும்! ஒரு பாட்டுக் கெதிர்ப்பாட்டு குயில்கள் பாடும் அதைக்கேட்டு மறுபாட்டை மயிலும் பாடும்! இது கேரளத்து மண்ணல்லோ இறைவர்களின் விண்ணல்லோ இமயம் தாங்கும் இளமை நெஞ்சல்லோ! வீட்டுக்கு வாசலில் பொதுவாய்க் குட்டி அருவிகள் குதிபோடும் காட்டுக்கும் கழனிக்கும் பிள்ளைகள் ஓடி விளையாடும் ஏட்டுக்கும் எழுத்துக்கும் தான் எங்கள் கூட்டம் தலை வணங்கும் எப்போதும் அன்பே தெய்வம் ஆயிரம் மதங்கள் இதை முழங்கும்! உடல் தீண்டும் மலைக்காற்று உள்ளம் வருடும் உயர்வான செண்டை மேளம் உணர்வைத் திருடும் யானை எங்கள் வீடுகளில் குழந்தை போலே வாழ்கிறது விழுந்தால் எழுவோம் மனிதம் ஆள்கிறது!! -விவேக்பாரதி 24.08.2018

மலையாள நாடு

மலையாள நாடு, எங்கள் மனம் கொள்ளும் நாடு மழையோடும் தென்றலோடும் உயிர்வாழும் நாடு கலையாத நம்பிக்கைகள் கருவாகும் நாடு கார்மேகம் தஞ்சங்கொண்டு விளையாடும் நாடு!  எங்களூர்ப் பெண்டுகளெல்லாம் கிள்ளைகளோடு விளையாடும் எங்கள் ஊர் ஆண்மகவெல்லாம் புலியின் கூட்டத் துறவாகும்! செங்கதிரும் அனுமதி கேட்டு மேகச் சேலை போர்த்திக் கொள்ளும் மங்கலமாம் வசந்த காலம் மடியில் எம்மைத் தாங்கிக் கொள்ளும்! ஒரு பாட்டுக் கெதிர்ப்பாட்டு குயில்கள் பாடும் அதைக்கேட்டு மறுபாட்டை மயிலும் பாடும்! இது கேரளத்து மண்ணல்லோ இறைவர்களின் விண்ணல்லோ இமயம் தாங்கும் இளமை நெஞ்சல்லோ! வீட்டுக்கு வாசலில் பொதுவாய்க் குட்டி அருவிகள் குதிபோடும் காட்டுக்கும் கழனிக்கும் பிள்ளைகள் ஓடி விளையாடும் ஏட்டுக்கும் எழுத்துக்கும் தான் எங்கள் கூட்டம் தலை வணங்கும் எப்போதும் அன்பே தெய்வம் ஆயிரம் மதங்கள் இதை முழங்கும்! உடல் தீண்டும் மலைக்காற்று உள்ளம் வருடும் உயர்வான செண்டை மேளம் உணர்வைத் திருடும் யானை எங்கள் வீடுகளில் குழந்தை போலே வாழ்கிறது விழுந்தால் எழுவோம் மனிதம் ஆள்கிறது!! -விவேக்பாரதி 24.08.2018

எதை நாம் பெற்றோம்

Image
யார்பெற்றுத் தந்தாரிச் சுதந்தி ரத்தை?     யார்கையால் பெற்றோமிச் சுதந்தி ரத்தை? போர்பெற்றுத் தந்ததுவா? மக்கள் செய்த     போகத்தால் வந்ததுவா? உயர்நா டென்ற பேர்பெற்ற பாரதத்தைச் சிலபேர் வந்து     பேடியென மாற்றிவிடக் கார ணம்யார்? நீர்பெற்ற கண்ணுடந்தான் பெற்றோம்! கண்ணை     நீசர்கள் குத்தும்வரை பொறுத்த வர்யார்? வணிகத்துக் காயுள்ளே நுழைந்த மக்கள்     வாணிபத்தைத் தாண்டித்தன் அதிகா ரத்தை அணியணியாய்ப் படைவீரர் கொண்டு வந்து     அமைத்திட்டார் நம்நாட்டில், வரலா றாகும்! பணிந்துவந்து யவணர்களும் ரோமும் கூடப்     பக்குவமாய் வியாபாரம் செய்ய விட்ட துணிவுடைய நம்படையோ துணிச்சல் கெட்டுத்     துட்டுக்கும் வசதிக்கும் விலைபோனாரே! ஆள்வோர்மேல் நம்பிக்கை அற்றுப் போனால்     அதன்பின்னர் நாட்டுப்பற் றெங்கே வோங்கும்? தோள்சேர்த்து நிலங்காக்க உரிமை காக்கத்     தோன்றுகிற நெஞ்சுரமும் எங்கே சேரும்? ஆள்சேர்த்தார் அடிவருடி பலரைச் சேர்த்தார்     அளவினிலே குறைந்தவர்தான் ஆட்சி செய்தார் நாள்சேர்த்து வைத்திருந்த உணர்ச்சி யெல்லாம்     நாற்றிசையும் பொங்கியதால் பெற்றோம் இன்று! நாம்பெற்றோம்! எதைப்பெற்றோம்? பா

எதை நாம் பெற்றோம்

Image
யார்பெற்றுத் தந்தாரிச் சுதந்தி ரத்தை?     யார்கையால் பெற்றோமிச் சுதந்தி ரத்தை? போர்பெற்றுத் தந்ததுவா? மக்கள் செய்த     போகத்தால் வந்ததுவா? உயர்நா டென்ற பேர்பெற்ற பாரதத்தைச் சிலபேர் வந்து     பேடியென மாற்றிவிடக் கார ணம்யார்? நீர்பெற்ற கண்ணுடந்தான் பெற்றோம்! கண்ணை     நீசர்கள் குத்தும்வரை பொறுத்த வர்யார்? வணிகத்துக் காயுள்ளே நுழைந்த மக்கள்     வாணிபத்தைத் தாண்டித்தன் அதிகா ரத்தை அணியணியாய்ப் படைவீரர் கொண்டு வந்து     அமைத்திட்டார் நம்நாட்டில், வரலா றாகும்! பணிந்துவந்து யவணர்களும் ரோமும் கூடப்     பக்குவமாய் வியாபாரம் செய்ய விட்ட துணிவுடைய நம்படையோ துணிச்சல் கெட்டுத்     துட்டுக்கும் வசதிக்கும் விலைபோனாரே! ஆள்வோர்மேல் நம்பிக்கை அற்றுப் போனால்     அதன்பின்னர் நாட்டுப்பற் றெங்கே வோங்கும்? தோள்சேர்த்து நிலங்காக்க உரிமை காக்கத்     தோன்றுகிற நெஞ்சுரமும் எங்கே சேரும்? ஆள்சேர்த்தார் அடிவருடி பலரைச் சேர்த்தார்     அளவினிலே குறைந்தவர்தான் ஆட்சி செய்தார் நாள்சேர்த்து வைத்த

சுண்டுவிரல் மை

மண்ணுக்குள் கிடைக்காத வைரம்! அண்ட     மன்றத்தில் மின்னாத வைரம்! நூறு வண்ணத்தில் ஒளிகூட்டும் வைரம்! யார்க்கும்     மனமென்னும் கண்காட்டும் வைரம்! கேட்கும் பண்ணென்றும் காண்கின்ற சொற்கள் என்றும்     பல்லுருவ ஜொலிப்புகளைத் தாங்கும் வைரம் எண்ணத்துக் குகைச்சுவரில் எழுந்த வைரம்     எழுத்துக்கள் வைரம்!என் கவிதை வைரம்! விலையில்லை இதைவாங்க! என்ற போதும்     விளையாடும் நெஞ்சிருந்தால் தந்து செல்க நிலையாக அடுத்தகணம் உங்கள் வீட்டை     நிச்சயமாய் அலங்கரிக்கும் என்றன் வைரம்! உலையில்லை இதைவெட்டச் செவிக ளுக்குள்     உள்வாங்கிக் கொள்ளுங்கள் அங்கே பின்னர் கலையெல்லாம் நடந்தேறும் தடுத்தால் கூடக்     காப்பாற்ற முடியாது கரைந்து போக.... வைரத்தில் ஒருமின்னல் நெஞ்சைக் கீறி     வளமாக இடங்காணும் அமர்ந்து கொள்ளும், ஓரத்தின் ஒருமின்னல் உள்ளே மன்னும்     இருட்டுக்கும் ஒளியூட்டி கண் திறக்கும், சாரத்துக் கொருமின்னல் அதுதான் நம்மை     சத்தியமாய்ச் சொன்னபடி ஆட்டி வைக்கும், ஈரத்துக் கொருமின்னல் அதுதான் தன்னை     இதயத்தின் அரியனையில் நிலைக்க வைக்கும்! வியாபாரி நானப்பா வாங்க வந்தா

சுண்டுவிரல் மை

மண்ணுக்குள் கிடைக்காத வைரம்! அண்ட     மன்றத்தில் மின்னாத வைரம்! நூறு வண்ணத்தில் ஒளிகூட்டும் வைரம்! யார்க்கும்     மனமென்னும் கண்காட்டும் வைரம்! கேட்கும் பண்ணென்றும் காண்கின்ற சொற்கள் என்றும்     பல்லுருவ ஜொலிப்புகளைத் தாங்கும் வைரம் எண்ணத்துக் குகைச்சுவரில் எழுந்த வைரம்     எழுத்துக்கள் வைரம்!என் கவிதை வைரம்! விலையில்லை இதைவாங்க! என்ற போதும்     விளையாடும் நெஞ்சிருந்தால் தந்து செல்க நிலையாக அடுத்தகணம் உங்கள் வீட்டை     நிச்சயமாய் அலங்கரிக்கும் என்றன் வைரம்! உலையில்லை இதைவெட்டச் செவிக ளுக்குள்     உள்வாங்கிக் கொள்ளுங்கள் அங்கே பின்னர் கலையெல்லாம் நடந்தேறும் தடுத்தால் கூடக்     காப்பாற்ற முடியாது கரைந்து போக.... வைரத்தில் ஒருமின்னல் நெஞ்சைக் கீறி     வளமாக இடங்காணும் அமர்ந்து கொள்ளும், ஓரத்தின் ஒருமின்னல் உள்ளே மன்னும்     இருட்டுக்கும் ஒளியூட்டி கண் திறக்கும், சாரத்துக் கொருமின்னல் அதுதான் நம்மை     சத்தியமாய்ச் சொன்னபடி ஆட்டி வைக்கும், ஈரத்துக் கொருமின்னல் அதுதான் தன்னை     இதயத்தின் அரியனையில் நிலைக்க வைக்கும்! வியாபாரி நானப்பா வாங

நடைப்பாட்டு

நடையென்னடா நமக்கு புதுசா? நடடா! தம்பி நடடா! படையா வரக் காத்திருக்கு பாட்டுங் கவிதையுந் துணையிருக்கு! எட்டு வைக்கும் நடையிலதான் இந்தப் பூமி சுழலுதடா! கிட்ட என்ன தூரம் என்ன? நடக்கப் பாத விரியுமடா! நெஞ்ச நிமிர்த்தி நடந்தாலே வெண்ணிலாவப் புடிச்சிடலாம் கொஞ்சந் தலைய குணிஞ்சு பாத்தா, குட்டி ஒலக ரசிச்சிடலாம்! நம்ம மண்ணுத் தாயோட நடந்த படியே பேசிக்கணும்! பொம்ம கூட சாவிக்கு நடக்கும், நாம எதுக்கு யோசிக்கணும்? புழுதி பறக்க நடந்தாலே பூமியோட ஒறவுவரும் அழுத்தி நடந்தா அழுந்த நடந்தா ஆயுள் கூட அதிகம்வரும்! மரத்து நெழல் நமக்காக மலரத் தூவி வரவேற்கும் மண்ணு செழிக்க நாம நெலைக்க நடக்க நடக்க பலமாகும்!! -விவேக்பாரதி 13.08.2018 பாடலைக் கேட்கச் சொடுக்கவும்

நடைப்பாட்டு

நடையென்னடா நமக்கு புதுசா? நடடா! தம்பி நடடா! படையா வரக் காத்திருக்கு பாட்டுங் கவிதையுந் துணையிருக்கு! எட்டு வைக்கும் நடையிலதான் இந்தப் பூமி சுழலுதடா! கிட்ட என்ன தூரம் என்ன? நடக்கப் பாத விரியுமடா! நெஞ்ச நிமிர்த்தி நடந்தாலே வெண்ணிலாவப் புடிச்சிடலாம் கொஞ்சந் தலைய குணிஞ்சு பாத்தா, குட்டி ஒலக ரசிச்சிடலாம்! நம்ம மண்ணுத் தாயோட நடந்த படியே பேசிக்கணும்! பொம்ம கூட சாவிக்கு நடக்கும், நாம எதுக்கு யோசிக்கணும்? புழுதி பறக்க நடந்தாலே பூமியோட ஒறவுவரும் அழுத்தி நடந்தா அழுந்த நடந்தா ஆயுள் கூட அதிகம்வரும்! மரத்து நெழல் நமக்காக மலரத் தூவி வரவேற்கும் மண்ணு செழிக்க நாம நெலைக்க நடக்க நடக்க பலமாகும்!! -விவேக்பாரதி 13.08.2018 பாடலைக் கேட்கச் சொடுக்கவும்

சிறைபட்ட நெஞ்சு

Image
  ஐயோ இரவே கொல்லாதே - நீ     அழுத்தும் நிலையில் நானில்லை ஐயோ நிலவே சிரிக்காதே - உடன்     அழுதற் கிங்கே இடமில்லை மையாள் விழிமேல் மையலுடன் - அவள்     மனதைத் திருடும் ஆசையுடன் பைய நுழைந்தேன் அதுவுண்மை - அவள்     பட்டாள் சிறையில் அதுவுண்மை! தொடுதிரைப் பேசி தொட்டபடி - நீ   தொலைந்து போவாய் கொடுமிரவே விடுகதை விழியை நினைந்தபடி - நான்     விம்மி அழுவேன் கொடுமிரவே அடுத்தினி காலம் உடன்மாறும் - என்     ஆனந் தங்கள் எனக்காகும் விடுதலை ஒருநாள் வரமாகும் - நீ     விரைந்து நகர்வாய் கொடுமிரவே! அவரவர் வாழ்க்கை அவரவர்க்கு - என்     ஆதியும் அந்தமும் அவள்கணக்கு! கவலைகள் நெஞ்சில் கலந்திருக்கு - இக்     கவிதை தானே விஷமுறிப்பு! அவதி படுத்தும் தனியிரவே - உன்     அழிவை என்மேல் மட்டும்பொழி அவளை எதுவும் செய்யாதே - அவள்     அனிச்ச குணத்தாள் கொய்யாதே! போப்போ இரவே! பகலேவா - என்     பொல்லா ஏக்கம் மாயட்டும் போப்போ கனவே! ஒளியேவா - இப்     போக்குகள் எல்லாம் தீரட்டும் போப்போ அழுகைத் துளியேபோ - இனி     புலம்பக் கூடச் சொல்லில்லை போப்போ துயரே! விடிவேவா - என்    போதைக் காய்ச்சல்

சிறைபட்ட நெஞ்சு

Image
  ஐயோ இரவே கொல்லாதே - நீ     அழுத்தும் நிலையில் நானில்லை ஐயோ நிலவே சிரிக்காதே - உடன்     அழுதற் கிங்கே இடமில்லை மையாள் விழிமேல் மையலுடன் - அவள்     மனதைத் திருடும் ஆசையுடன் பைய நுழைந்தேன் அதுவுண்மை - அவள்     பட்டாள் சிறையில் அதுவுண்மை! தொடுதிரைப் பேசி தொட்டபடி - நீ   தொலைந்து போவாய் கொடுமிரவே விடுகதை விழியை நினைந்தபடி - நான்     விம்மி அழுவேன் கொடுமிரவே அடுத்தினி காலம் உடன்மாறும் - என்     ஆனந் தங்கள் எனக்காகும் விடுதலை ஒருநாள் வரமாகும் - நீ     விரைந்து நகர்வாய் கொடுமிரவே! அவரவர் வாழ்க்கை அவரவர்க்கு - என்     ஆதியும் அந்தமும் அவள்கணக்கு! கவலைகள் நெஞ்சில் கலந்திருக்கு - இக்     கவிதை தானே விஷமுறிப்பு! அவதி படுத்தும் தனியிரவே - உன்     அழிவை என்மேல் மட்டும்பொழி அவளை எதுவும் செய்யாதே - அவள்     அனிச்ச குணத்தாள் கொய்யாதே! போப்போ இரவே! பகலேவா - என்     பொல்லா ஏக்கம் மாயட்டும் போப்போ கனவே! ஒளியேவா - இப்     போக்குகள் எல்லாம் தீரட்டும் போப்போ அழுகைத் துளியேபோ - இனி     புலம்பக் கூடச் சொல்லில்லை போப்போ துயரே!

காமாட்சித் தாய்

Image
  கிள்ளையுங் கரும்பும், கண்கள்     கிளர்த்திடும் நிலவும் தாங்கி துள்ளிடும் விழிக ளோடு     தோன்றிடும் தெய்வ சக்தி விள்ளவே இயலா வண்ணம்     விரிந்தபே ரருளைக் கொண்டாள் நள்ளிருள் நிறத்துக் கூந்தல்     நலத்தினள் காமாட் சித்தாய் மலரினைத் தந்தாள் தன் தோள்     மாலையுந் தந்தாள் என்னை உலகெலாம் பார்க்கத் தன்றன்     உயரடி அமர்த்திக் கொண்டாள் பலங்களைத் தந்தாள் உண்ணப்     பல்சுவை உணவுந் தந்தாள் திலகமாய்க் குங்கு மத்தைத்     தீட்டினள் காமாட் சித்தாய்! சக்தியின் சகல தோற்றம்     சாந்தமாய் விளங்குந் தோற்றம் முக்தியின் ஆதித் தோற்றம்     முறுவலே புனைந்த தோற்றம் மக்களின் மனத்தை ஆளும்     மகிமையே அவளின் தோற்றம் அக்கறை பாசம் அன்பின்     அடித்தளம் காமாட் சித்தாய்! சங்கரன் பணிந்து போற்றிச்     சரிமடம் வைத்த காஞ்சி மங்கலப் பூமி யாளும்     மணிநிறத் தேவி காதில் சங்கினைத் தரித்த ஈசன்     சமவுடல் வென்ற சக்தி குங்குமப் பொலிவி லங்கும்     குணவதி காமாட் சித்தாய்! மதுரையில் மீனாட் சித்தாய்     மணமிகு காசி தன்னில் புதுமைவி சாலாட் சித்தாய்     புனிதரே பிறந்த காஞ்சிப் பதியிலே காமாட் சித்தாய்     பக்தர்கள் கோவில் வைத்த

காமாட்சித் தாய்

Image
  கிள்ளையுங் கரும்பும், கண்கள்     கிளர்த்திடும் நிலவும் தாங்கி துள்ளிடும் விழிக ளோடு     தோன்றிடும் தெய்வ சக்தி விள்ளவே இயலா வண்ணம்     விரிந்தபே ரருளைக் கொண்டாள் நள்ளிருள் நிறத்துக் கூந்தல்     நலத்தினள் காமாட் சித்தாய் மலரினைத் தந்தாள் தன் தோள்     மாலையுந் தந்தாள் என்னை உலகெலாம் பார்க்கத் தன்றன்     உயரடி அமர்த்திக் கொண்டாள் பலங்களைத் தந்தாள் உண்ணப்     பல்சுவை உணவுந் தந்தாள் திலகமாய்க் குங்கு மத்தைத்     தீட்டினள் காமாட் சித்தாய்! சக்தியின் சகல தோற்றம்     சாந்தமாய் விளங்குந் தோற்றம் முக்தியின் ஆதித் தோற்றம்     முறுவலே புனைந்த தோற்றம் மக்களின் மனத்தை ஆளும்     மகிமையே அவளின் தோற்றம் அக்கறை பாசம் அன்பின்     அடித்தளம் காமாட் சித்தாய்! சங்கரன் பணிந்து போற்றிச்     சரிமடம் வைத்த காஞ்சி மங்கலப் பூமி யாளும்     மணிநிறத் தேவி காதில் சங்கினைத் தரித்த ஈசன்     சமவுடல் வென்ற சக்தி குங்குமப் பொலிவி லங்கும்     குணவதி காமாட் சித்தாய்! மதுரையில் மீனாட் சித்தாய்     மணமிகு காசி தன்னில் புதுமைவி சாலாட் சித்தாய்     புனிதரே பிறந்த காஞ்சிப் பதியிலே காமாட்

எதிர்வீட்டுக் காதல்

எப்போது சென்றாலும் வரவேற் பாக     எழிலான பழமள்ளி மழைபெய் தென்னைத் தப்பாது நனைக்கின்ற எங்கள் வீட்டுத்     தனியான சுவைநாவல் மரத்தின் மீது இப்போது கிளிஜோடி அமர்ந்து கொண்டு     இதயங்கள் பரிமாறி இன்பக் காதல் அப்பியதாய்ப் பொழுதுகளைக் கழிக்கக் கண்டேன்     ஆனந்தம் அதிற்கொண்டேன் மேலும் கீழே இருஜோடி மண்புழுக்கள் ஒன்றை ஒன்று     இயல்பாக புல்லித்தம் காதல் நெஞ்சம் உருகிவிழ உறவாடும் செய்கை கண்டேன்     உள்ளத்தில் நல்லகளி நானுங் கண்டேன்! பருவத்தால் மழைவந்து வாசல் தீண்டப்     பக்குவமாய் இளவெய்யில் உடனி ணைந்து பொருதுவதும் சிலிர்ப்பதுவும் ஆகிக் காதல்     பொழுதாக்கும் செயல்கண்டு மகிழ்ந்து நின்றேன்! காதுக்குள் நான்கேட்ட பாட்டில் கூடக்     கவிஞர்கள் பலவாறு புகழ்ந்த காதல் தூதுக்கும் ஆள்விட்ட பழைய சேதி     தோன்றிடவே பார்க்கின்ற திசையில் எல்லாம் தோதுற்ற காதல்தான் ஆள்வ தென்னும்     தொன்மையறி வெய்திமனங் களிக்கும் நேரம் தீதுற்ற தைப்போலே எதிரே வீட்டில்     திட்டடிகள் சச்சரவு கேட்கக் கண்டேன்! தம்வீட்டுப் பெண்காதல் கேட்ட தற்குத்     தானந்த சச்சரவு நிகழ்ந்த தென்று அம்மாவுஞ் சொன்னவுடன் மனஞ்சு ழித்தேன்     ஆ

எதிர்வீட்டுக் காதல்

எப்போது சென்றாலும் வரவேற் பாக     எழிலான பழமள்ளி மழைபெய் தென்னைத் தப்பாது நனைக்கின்ற எங்கள் வீட்டுத்     தனியான சுவைநாவல் மரத்தின் மீது இப்போது கிளிஜோடி அமர்ந்து கொண்டு     இதயங்கள் பரிமாறி இன்பக் காதல் அப்பியதாய்ப் பொழுதுகளைக் கழிக்கக் கண்டேன்     ஆனந்தம் அதிற்கொண்டேன் மேலும் கீழே இருஜோடி மண்புழுக்கள் ஒன்றை ஒன்று     இயல்பாக புல்லித்தம் காதல் நெஞ்சம் உருகிவிழ உறவாடும் செய்கை கண்டேன்     உள்ளத்தில் நல்லகளி நானுங் கண்டேன்! பருவத்தால் மழைவந்து வாசல் தீண்டப்     பக்குவமாய் இளவெய்யில் உடனி ணைந்து பொருதுவதும் சிலிர்ப்பதுவும் ஆகிக் காதல்     பொழுதாக்கும் செயல்கண்டு மகிழ்ந்து நின்றேன்! காதுக்குள் நான்கேட்ட பாட்டில் கூடக்     கவிஞர்கள் பலவாறு புகழ்ந்த காதல் தூதுக்கும் ஆள்விட்ட பழைய சேதி     தோன்றிடவே பார்க்கின்ற திசையில் எல்லாம் தோதுற்ற காதல்தான் ஆள்வ தென்னும்     தொன்மையறி வெய்திமனங் களிக்கும் நேரம் தீதுற்ற தைப்போலே எதிரே வீட்டில்     திட்டடிகள் சச்சரவு கேட்கக் கண்டேன்! தம்வீட்டுப் பெண்காதல் கேட்ட தற்குத்     தானந்த சச்சரவு நிகழ்ந்த தென்று அம்மாவுஞ் சொன்னவுடன் மனஞ்சு ழித்தே

கபாலீஸ்வரன்

சிவநாமம் போதம் தரும் - சொல்லும் சிந்தையில் இன்பம் வரும்  கபாலீஸ்வரன் கருணாசாகரன் கவிதா தலைவன் கதி சேர்க்கிறவன்!  (அந்தச் சிவநாமம்) திசைகளில் எங்கும் திரள்கின்ற வெளிச்சம்     தீபத்துக்கார் பொறுப்பு? தசைகளில் கூட தகித்திடும் உணர்வு     தனல்வதுயார் நெருப்பு? இசைகளில் எல்லாம் இருக்கின்ற இறைவன்     இதயத்திலும் இருப்பு! விசைமிகு நெஞ்சில் விளைவதெல் லாமும்     விசித்திரனின் நடிப்பு! கபாலீஸ்வரன் கருணாசாகரன் கவிதா தலைவன் கதி சேர்க்கிறவன்! கண்களை மூடிக் காண்கின்ற இருளில்     காளனின் ஒளிநடனம் பண்களில் பாட்டில் பார்க்கிற கலையில்     பசுபதியின் வடிவம் உண்மையில் எங்கும் உறைகின்ற தெய்வம்     உணர்வது தான்கடினம் அண்மையில் தெரிந்தும் அக்கறை நாடும்     அறிவினில் அவன் விகடம்! கபாலீஸ்வரன் கருணாசாகரன் கவிதா தலைவன் கதி சேர்க்கிறவன்! எத்தனை பார்த்தும் முடிவற்ற வானம்     ஏகனின் திருப்பாதம் சித்தினைத் தேக்கிச் சீரினில் நிறுத்தத்     தென்படும் அவன் போதம் வித்தினை மரமாய் மறுபடி விதையாய்     விளைப்பது அவன் வேதம் இத்தனை சொல்லும் இத்தனை பொருளும்     இயற்றுவ தவன் நாதம்! கபாலீஸ்வரன் கருணாசாகரன் கவிதா த

கபாலீஸ்வரன்

சிவநாமம் போதம் தரும் - சொல்லும் சிந்தையில் இன்பம் வரும்  கபாலீஸ்வரன் கருணாசாகரன் கவிதா தலைவன் கதி சேர்க்கிறவன்!  (அந்தச் சிவநாமம்) திசைகளில் எங்கும் திரள்கின்ற வெளிச்சம்     தீபத்துக்கார் பொறுப்பு? தசைகளில் கூட தகித்திடும் உணர்வு     தனல்வதுயார் நெருப்பு? இசைகளில் எல்லாம் இருக்கின்ற இறைவன்     இதயத்திலும் இருப்பு! விசைமிகு நெஞ்சில் விளைவதெல் லாமும்     விசித்திரனின் நடிப்பு! கபாலீஸ்வரன் கருணாசாகரன் கவிதா தலைவன் கதி சேர்க்கிறவன்! கண்களை மூடிக் காண்கின்ற இருளில்     காளனின் ஒளிநடனம் பண்களில் பாட்டில் பார்க்கிற கலையில்     பசுபதியின் வடிவம் உண்மையில் எங்கும் உறைகின்ற தெய்வம்     உணர்வது தான்கடினம் அண்மையில் தெரிந்தும் அக்கறை நாடும்     அறிவினில் அவன் விகடம்! கபாலீஸ்வரன் கருணாசாகரன் கவிதா தலைவன் கதி சேர்க்கிறவன்! எத்தனை பார்த்தும் முடிவற்ற வானம்     ஏகனின் திருப்பாதம் சித்தினைத் தேக்கிச் சீரினில் நிறுத்தத்     தென்படும் அவன் போதம் வித்தினை மரமாய் மறுபடி விதையாய்     விளைப்பது அவன் வேதம் இத்தனை சொல்லும் இத்தனை பொருளும்     இயற்றுவ தவன் நாதம்! கபாலீஸ்வரன் கருண

மர்மக் குயில்

இந்தக் குயிலோசை எந்தத் திசையிருந்து     இதயம் பறிக்க வருகிறதோ? - என்     இளமை நனைக்க வருகிறதோ? சந்தத் தமிழ்ப்பாட்டு சிங்கத் தொனியில்வரும்     தனிமை கெடுக்க வருகிறதோ? - என்     தவிப்பைத் தடுக்க வருகிறதோ? பகல்போல் மாறிய மாலையிலே     பலகுரல் ஓசைகள் காதினிலே - அதில் அகமொழி போலிக் குயிலின் ஓசை     ஆழத்தைக் காட்டும் அலையோசை! (இந்தக் குயிலோசை) என்னைப் புதிதாக்கிச் சிந்தைக் களத்திலிது     ஏழு சுரங்களையும் படிக்கும் - இந்த     ஏழை மனதைச் சிறைபிடிக்கும்! தன்னை நிழலாக்கிச் சங்கீதத்தின் வழி     தனது முகம்காட்டிச் சிரிக்கும் - அந்தத்     தகுதி வரவேண்டும் எவர்க்கும்! யாரிதைக் கூவிடச் சொன்னாரோ?     யாழெனப் பாடல்கள் தந்தாரோ? - இங்கு நேரில் வராமல் தெய்வத்தைப் போல     நெஞ்சில் நிறைந்திடச் சொன்னாரோ? (இந்தக் குயிலோசை) மண்ணில் உயிரோசை வாழும் வரையிலிது     மனத்துக் குகையில் எதிரொலிக்கும் - இந்த     மயக்கம் கவிக்குச்சுதி கொடுக்கும்! கண்ணில் தெரியாத காட்சி பலகோடி     கருதக் கருத அவை இனிக்கும் - இது     காலம் மாற்றாத வழக்கம்! பூக்களைத் தூவிடும் தென்றலுடன்     புல்லாங் குழலிசை கேட்கிறது - ஒரு தீக்கதிர் ந

மர்மக் குயில்

இந்தக் குயிலோசை எந்தத் திசையிருந்து     இதயம் பறிக்க வருகிறதோ? - என்     இளமை நனைக்க வருகிறதோ? சந்தத் தமிழ்ப்பாட்டு சிங்கத் தொனியில்வரும்     தனிமை கெடுக்க வருகிறதோ? - என்     தவிப்பைத் தடுக்க வருகிறதோ? பகல்போல் மாறிய மாலையிலே     பலகுரல் ஓசைகள் காதினிலே - அதில் அகமொழி போலிக் குயிலின் ஓசை     ஆழத்தைக் காட்டும் அலையோசை! (இந்தக் குயிலோசை) என்னைப் புதிதாக்கிச் சிந்தைக் களத்திலிது     ஏழு சுரங்களையும் படிக்கும் - இந்த     ஏழை மனதைச் சிறைபிடிக்கும்! தன்னை நிழலாக்கிச் சங்கீதத்தின் வழி     தனது முகம்காட்டிச் சிரிக்கும் - அந்தத்     தகுதி வரவேண்டும் எவர்க்கும்! யாரிதைக் கூவிடச் சொன்னாரோ?     யாழெனப் பாடல்கள் தந்தாரோ? - இங்கு நேரில் வராமல் தெய்வத்தைப் போல     நெஞ்சில் நிறைந்திடச் சொன்னாரோ? (இந்தக் குயிலோசை) மண்ணில் உயிரோசை வாழும் வரையிலிது     மனத்துக் குகையில் எதிரொலிக்கும் - இந்த     மயக்கம் கவிக்குச்சுதி கொடுக்கும்! கண்ணில் தெரியாத காட்சி பலகோடி     கருதக் கருத அவை இனிக்கும் - இது     காலம் மாற்றாத வழக்கம்! பூக்களைத் தூவிடும் தென்றலுடன்     புல்லாங் குழலிசை கேட்கிறது - ஒர

பலர்வாய் மொழி

1) காதல் தோல்வி பெற்றவன்: பஞ்சல்ல நீயெரிக்கப், பாயல்ல நீபடுக்க, நஞ்சல்ல நீபருகி நாசமுற, - பஞ்சமுற்ற ஏழையல்ல உன்வரவுக் கேங்கிநிற்க, இஃதெந்த நாழிகையும் தாவுகின்ற நெஞ்சு! 2) காதல் நோய் பட்டவள்: பஞ்சனைய மெல்லணையும் பட்டுத் துகிலுடையும் வஞ்சகத்தீ போலே வளர்ந்தழிக்கும் - நெஞ்சைத் தலைவன்பால் அன்றேநான் தந்துவிட்டேன் காக்க நிலையா யுளதவர் நெஞ்சு! 3) தலைவன் பிரிவில் தலைவி: பஞ்சம் வறுமையெலாம் பட்டதுபோல் இப்போதென் நெஞ்சம் துடிக்கும் நிலையறிவாய் - வஞ்சகனே என்னைப் பிரிந்துநீ ஏன்சென்றாய் எப்போதும் நின்னை நினைந்துருகும் நெஞ்சு! 4) மழையை வியந்த புலவன்:  பஞ்சுப் பொதிமேகம் பால்சுரக்கும் அற்புதத்தைக் கொஞ்சம் வியந்து குதிக்கின்றேன் - தஞ்சமென வந்தமழை தானே வளங்கூட்டிக் காப்பாற்றும் நந்தமிழைப் போலதன் நெஞ்சு! 5) புரட்சியாளன்: பஞ்சில் நெருப்பிட்டால் பார்க்கும் சுடர்போல நெஞ்சில் நெருப்பிட நேர்ப்படுவோம் - கொஞ்சமா நாட்டின் பிழையழிய நாமெல்லாம் கூடிவிட்டால் நீட்டும் சுடர்நமது நெஞ்சு!! -விவேக்பாரதி 03.08.2018

பலர்வாய் மொழி

1) காதல் தோல்வி பெற்றவன்: பஞ்சல்ல நீயெரிக்கப், பாயல்ல நீபடுக்க, நஞ்சல்ல நீபருகி நாசமுற, - பஞ்சமுற்ற ஏழையல்ல உன்வரவுக் கேங்கிநிற்க, இஃதெந்த நாழிகையும் தாவுகின்ற நெஞ்சு! 2) காதல் நோய் பட்டவள்: பஞ்சனைய மெல்லணையும் பட்டுத் துகிலுடையும் வஞ்சகத்தீ போலே வளர்ந்தழிக்கும் - நெஞ்சைத் தலைவன்பால் அன்றேநான் தந்துவிட்டேன் காக்க நிலையா யுளதவர் நெஞ்சு! 3) தலைவன் பிரிவில் தலைவி: பஞ்சம் வறுமையெலாம் பட்டதுபோல் இப்போதென் நெஞ்சம் துடிக்கும் நிலையறிவாய் - வஞ்சகனே என்னைப் பிரிந்துநீ ஏன்சென்றாய் எப்போதும் நின்னை நினைந்துருகும் நெஞ்சு! 4) மழையை வியந்த புலவன்:  பஞ்சுப் பொதிமேகம் பால்சுரக்கும் அற்புதத்தைக் கொஞ்சம் வியந்து குதிக்கின்றேன் - தஞ்சமென வந்தமழை தானே வளங்கூட்டிக் காப்பாற்றும் நந்தமிழைப் போலதன் நெஞ்சு! 5) புரட்சியாளன்: பஞ்சில் நெருப்பிட்டால் பார்க்கும் சுடர்போல நெஞ்சில் நெருப்பிட நேர்ப்படுவோம் - கொஞ்சமா நாட்டின் பிழையழிய நாமெல்லாம் கூடிவிட்டால் நீட்டும் சுடர்நமது நெஞ்சு!! -விவேக்பாரதி 03.08.2018

குறிப்பிடம் தவறியது

காத்திருக்கச் சொல்லி விட்டு     காற்றைப்போல் பறந்து விட்டால் பூத்திருந்த கண்கள் எல்லாம்     பூழ்தியிலே வாடு மன்றோ... வேர்த்திருந்த நெஞ்சுக் குள்ளே     வேதனைகள் தொடர்ந்த டிக்கப் பார்த்திருந்த இளமை மட்டும்     பாழாகி வீழ்ந்த தம்மா! இரவினில் இருக்கச் சொன்னாய்     இமைக்கத வவிழ்த்து வைத்தேன் கரங்களை இணைப்ப மென்றாய்     கனவுகள் வளர்த்து வைத்தேன் சுரமின்றி சுதித விக்கச்     சுழன்றிடும் உயிர்து டிக்க மரமென நின்றி ருந்தே     மரணத்தைத் தழுவு கின்றேன் தவறுகள் உனது மில்லை     தண்டனை உனக்கு மில்லை கவிதைகள் இருக்கும் மட்டும்     கவலைகள் கணப்ப தில்லை திவலைகள் சிந்திச் சிந்தி     தெப்பமாய் நனைந்து விட்டேன் தவமென அதைநி னைத்துத்     தடத்தினில் தொடரு கின்றேன்! நெஞ்சினில் ஆசை வந்து     நிகழ்த்திய கூத்துக் கெல்லாம் வஞ்சனைக் கனவு வந்து     வனைந்திட்ட காட்சிக் கெல்லாம் அஞ்சுகம் உன்னைச் சொல்லி     ஆவதும் ஒன்றும் இல்லை கொஞ்சமே புலம்பி நிற்பேன்     கோபத்தால் எனைய ழிப்பேன் உன்முகம் பார்த்து நிற்க     உவகையே கொண்டு வந்து பொன்னிலா முகத்தைக் கண்டு    

குறிப்பிடம் தவறியது

காத்திருக்கச் சொல்லி விட்டு     காற்றைப்போல் பறந்து விட்டால் பூத்திருந்த கண்கள் எல்லாம்     பூழ்தியிலே வாடு மன்றோ... வேர்த்திருந்த நெஞ்சுக் குள்ளே     வேதனைகள் தொடர்ந்த டிக்கப் பார்த்திருந்த இளமை மட்டும்     பாழாகி வீழ்ந்த தம்மா! இரவினில் இருக்கச் சொன்னாய்     இமைக்கத வவிழ்த்து வைத்தேன் கரங்களை இணைப்ப மென்றாய்     கனவுகள் வளர்த்து வைத்தேன் சுரமின்றி சுதித விக்கச்     சுழன்றிடும் உயிர்து டிக்க மரமென நின்றி ருந்தே     மரணத்தைத் தழுவு கின்றேன் தவறுகள் உனது மில்லை     தண்டனை உனக்கு மில்லை கவிதைகள் இருக்கும் மட்டும்     கவலைகள் கணப்ப தில்லை திவலைகள் சிந்திச் சிந்தி     தெப்பமாய் நனைந்து விட்டேன் தவமென அதைநி னைத்துத்     தடத்தினில் தொடரு கின்றேன்! நெஞ்சினில் ஆசை வந்து     நிகழ்த்திய கூத்துக் கெல்லாம் வஞ்சனைக் கனவு வந்து     வனைந்திட்ட காட்சிக் கெல்லாம் அஞ்சுகம் உன்னைச் சொல்லி     ஆவதும் ஒன்றும் இல்லை கொஞ்சமே புலம்பி நிற்பேன்     கோபத்தால் எனைய ழிப்பேன் உன்முகம் பார்த்து நிற்க     உவகையே கொண்டு வந்து பொன்னிலா முகத்தைக்