கேள்வியும் பதிலும்

கேள்வி - Sivasubramanian Ganapathy

பரம்பொருள் ஓளியுரும் அறிவாம்ன்னு சொன்ன பாரதி எழுது கோலும் இந்த எழுத்தும் தெய்வம்ன்னு சொல்றார்?? எப்படி இனைத்து பார்க்க முடியுதா???

பதில் - விவேக்பாரதி

ஒன்றே பரம்பொருள் நாமதைப் பலவாய்
நின்று மருவி நிகழ்த்துத லுற்றோம்
ஒன்றே எனிலது அனைத்திலு முளதென்
றன்றே முன்னோர் அறைந்தனர் கேளீர்!
தெய்வம் தன்னைப் பலவடி வாகச்
செய்து கொண்டதன் செம்மை காணீர்
புல்லாய்ப் புழுவாய்ப் பூடாய் மரமாய்க்
கல்லாய் மனிதராய்க் காற்றாய் கடலாய்ப்
பலவகை யாகப் படைத்ததனுக்குள்
உலகியல் உறவுகள் நிறுவிக் கொண்டது!
சிவனின் மனைவி சக்தி என்பதும்
தவமுனி ஏசு தூத னென்பதும்
ஆசை துறந்த புத்தன் என்பதும்
பாசம் புகட்டிய நபிகள் என்பதும்
பலவகை மனிதர் படித்து வாழ்ந்து
கலப்பதற் கவரே ஆக்கிய உருக்கள்
பார்க்கும் கண்ணைக் குறித்தே பார்வை
வார்த்த உருவம் ஒன்றே அதனை
நம்பித் தொழுதல் நமக்குள் உணர்தல்
அன்பொடு பிறர்க்குள் ஆண்டவன் காணல்
நல்லறம் செய்தல் நாட்டினைக் காத்தல்
சொல்செயல் காத்தல் சோர்வு நீக்குதல்
உண்மை உறுதி உயர்வு நோக்குதல்
எண்ணம் என்றும் எழுச்சி விதைத்தல்
ஆகிய நம்கடன் ஆக
தேகமும் உயிரும் தெய்வத மாமே!!

விவேக்பாரதி
01.08.2018

Popular Posts