Posts

Showing posts from September, 2018

காளி நினைப்பு

Image
காரிருளின் வேளைதனி லேநிலவைத் தேடியவோர் கனிந்த பத்தன் கோரியசெவ் வாக்கினிலும் கோலமிகும் பாட்டினிலும் குளிர்ந்து, பொன்னை நேரில் வானில் சிரித்து வீசிச் சீர்திங் களையே செய்தாய் காளீ! மூடனெனப் பேச்சிழந்து மூளையிலி யாயமர்ந்து முழுதுங் கண்ணீர் வாடலெனக் காலநிலை வோட்டியவன் நாவினிலே வலிகொள் சூலம் ஏடாய் நின்பேர் யாக்கக், கவிஞன் பாடல் புனையச் செய்தாய் காளீ! காவினிலோர் தீயரக்க னேகியுயிர் யாவுமழக் கடுமை செய்தாங் காவலினா லாடுகையில் தீயவனை மாய்த்திடவே திரண்டு தீயை ஏவித் துன்பந் தீர்த்தாய்! உலகோர் பாவம் விலகச் செய்தாய் காளீ! வேகத்துட னேகவிதை வீசிடுவோர் நாவினிலே விளையும் சந்தம் ஆகமங்க ளாகிநிதம் பூமியிலே பூரணமா யருளுஞ் சிம்மம் யாகம் நின்பேர் சொல்லல்! தவமாம் போகம் நினைவாய்ச் செய்வாய் காளீ! நானுமெனை நாடவுயிர் நாளமெலாங் காளிபெயர் நலமாய்க் கேட்பேன்! ஞானமென்ற னாழ்மனத்தி னோரத்தே நாடோறும் நலியா தோங்கும்! வானும் மண்ணும் நீநான்! ஒளிகொள் தேனும் மலரும் நீநான் காளீ!! -விவேக்பாரதி 24.09.2018

காளி நினைப்பு

Image
காரிருளின் வேளைதனி லேநிலவைத் தேடியவோர் கனிந்த பத்தன் கோரியசெவ் வாக்கினிலும் கோலமிகும் பாட்டினிலும் குளிர்ந்து, பொன்னை நேரில் வானில் சிரித்து வீசிச் சீர்திங் களையே செய்தாய் காளீ! மூடனெனப் பேச்சிழந்து மூளையிலி யாயமர்ந்து முழுதுங் கண்ணீர் வாடலெனக் காலநிலை வோட்டியவன் நாவினிலே வலிகொள் சூலம் ஏடாய் நின்பேர் யாக்கக், கவிஞன் பாடல் புனையச் செய்தாய் காளீ! காவினிலோர் தீயரக்க னேகியுயிர் யாவுமழக் கடுமை செய்தாங் காவலினா லாடுகையில் தீயவனை மாய்த்திடவே திரண்டு தீயை ஏவித் துன்பந் தீர்த்தாய்! உலகோர் பாவம் விலகச் செய்தாய் காளீ! வேகத்துட னேகவிதை வீசிடுவோர் நாவினிலே விளையும் சந்தம் ஆகமங்க ளாகிநிதம் பூமியிலே பூரணமா யருளுஞ் சிம்மம் யாகம் நின்பேர் சொல்லல்! தவமாம் போகம் நினைவாய்ச் செய்வாய் காளீ! நானுமெனை நாடவுயிர் நாளமெலாங் காளிபெயர் நலமாய்க் கேட்பேன்! ஞானமென்ற னாழ்மனத்தி னோரத்தே நாடோறும் நலியா தோங்கும்! வானும் மண்ணும் நீநான்! ஒளிகொள் தேனும் மலரும் நீநான் காளீ!! -விவேக்பாரதி 24.09.2018

யாதுமாகும் பெண்மை - சித்திரைக் கவியரங்கம், கோவை

Image
இறைவணக்கம் நின்றாளை அசுரர்களைக் கொன்றாளைப்    பச்சைமா நிறத்தி னாளை நன்றாளை அரிமேலே சென்றாளை    வண்டாடுங் குழலி னாளைக் குன்றாளை இடபாகம் வென்றாளை    நமைக்காக்கும் குணத்தி னாளை மன்றாடித் தமிழ்செய்வேன் மாசொன்றும்    வாராது காக்க தாயே! அவை வணக்கம் முன்னிருக்கும் மூத்தோர்க்கும் முத்தமிழ்க்கும் என்பேரின் பின்னிருக்கும் பாரதிக்கும் பீடுடையிப் போழ்துக்கும் கோவை நகரில் கொழுந்தமிழ்த் தேன்சுவைக்கும் நாவுடைய மக்களுக்கும் நற்றிசைக்கும் காற்றிற்கும் என்னை எழுதவைக்கும் ஏதமிலா ஆதிசக்தி அன்னைக்கும் மற்றும் அனைவருக்கும் என்னோடு யாதுமாகி நிற்கின்ற யவ்வணப் பெண்மையை ஓதிப் புகழவந்த ஒண்டமிழ்ப் பாவலர்க்கும் நல்லதமிழ் கேட்க நலமான பாமன்றை வல்லபடி வைத்த வள்ளல் கிருஷ்ணாஸ்வீட்ஸ் மக்களுக்கும் ஏணை மனங்களுக்கும் இப்போது வானொட்டக் கைதூக்கி வாழ்த்தி வணங்குகிறேன் நானொரு சின்னப் பயல்! தலைவர் வாழ்த்து வாத்தியார் என்று நாங்கள்    வாஞ்சையோ டழைக்கும் கல்வி மூத்தவர் இளைஞர் நெஞ்சை    முடுக்கிடும் இளைஞர்! நூல்கள் யாத்தவர் முன்னம் வந்து    யானுமே வணங்கிக் கைகள் சேர்த்தவர் தலைமை வாழ்த்திச்    செப்புவன் கவிதை யிங்கே! வவேசு தலைவரை

யாதுமாகும் பெண்மை - சித்திரைக் கவியரங்கம், கோவை

Image
இறைவணக்கம் நின்றாளை அசுரர்களைக் கொன்றாளைப்    பச்சைமா நிறத்தி னாளை நன்றாளை அரிமேலே சென்றாளை    வண்டாடுங் குழலி னாளைக் குன்றாளை இடபாகம் வென்றாளை    நமைக்காக்கும் குணத்தி னாளை மன்றாடித் தமிழ்செய்வேன் மாசொன்றும்    வாராது காக்க தாயே! அவை வணக்கம் முன்னிருக்கும் மூத்தோர்க்கும் முத்தமிழ்க்கும் என்பேரின் பின்னிருக்கும் பாரதிக்கும் பீடுடையிப் போழ்துக்கும் கோவை நகரில் கொழுந்தமிழ்த் தேன்சுவைக்கும் நாவுடைய மக்களுக்கும் நற்றிசைக்கும் காற்றிற்கும் என்னை எழுதவைக்கும் ஏதமிலா ஆதிசக்தி அன்னைக்கும் மற்றும் அனைவருக்கும் என்னோடு யாதுமாகி நிற்கின்ற யவ்வணப் பெண்மையை ஓதிப் புகழவந்த ஒண்டமிழ்ப் பாவலர்க்கும் நல்லதமிழ் கேட்க நலமான பாமன்றை வல்லபடி வைத்த வள்ளல் கிருஷ்ணாஸ்வீட்ஸ் மக்களுக்கும் ஏணை மனங்களுக்கும் இப்போது வானொட்டக் கைதூக்கி வாழ்த்தி வணங்குகிறேன் நானொரு சின்னப் பயல்! தலைவர் வாழ்த்து வாத்தியார் என்று நாங்கள்    வாஞ்சையோ டழைக்கும் கல்வி மூத்தவர் இளைஞர் நெஞ்சை    முடுக்கிடும் இளைஞர்! நூல்கள் யாத்தவர் முன்னம் வந்து    யானுமே வணங்கிக் கைகள் சேர்த்தவர் தலைமை வாழ்த்திச்    செப்புவன் கவிதை யிங்கே! வவ

உடனே விழி தமிழா - பைந்தமிழ்ச் சோலை கவியரங்கம்

உடனே விழி தமிழா - பைந்தமிழ்ச் சோலை கவியரங்கம் விநாயகர் காப்பு மஞ்சள் உருப்பிடித்த மாதா வினைகாக்க நெஞ்சம் நிமிர்த்திய நேர்முகனே - அஞ்சேல் எனச்சொல்லி இந்த எளியேனைக் காப்பாய் உனைச்சொல்லில் வைத்தேன் உயர்த்து! தமிழ் வாழ்த்து தமிழ் தமிழ் தமிழ் தமிழ்    தமிழ் தமிழ் தமிழ் தமிழ்! அமிழ்த மாகி வந்து நின்ற    ஆசியே தமிழ் தமிழ்! முகிழ்ந்தெ ழுந்து வீசு கின்ற    முறுவலே தமிழ் தமிழ் ! அகழ்ந்து கொண்டு நெஞ்சில் ஓடும்    ஆற்றலே தமிழ் தமிழ்! நாவெ டுத்த மனிதன் சொன்ன   நல்லசொல் தமிழ் தமிழ்! பாவெ டுத்த கவிஞர் சொல்லும்   பாட்டெலாம் தமிழ் தமிழ்!   தமிழ் தமிழ் தமிழ் தமிழ்    தமிழ் தமிழ் தமிழ் தமிழ்! அமிழ்த மாகி வந்து நின்ற    ஆவியே தமிழ் தமிழ்! தலைவர் வாழ்த்து பேராசான் தந்த பெருமை மிகுமவையில் பேராசை யாலேநான் பேசவந்தேன்! - ஊராசி பெற்றுயர்ந்த மாவரதன் பெற்றியெலாம் பாடிடக் கற்றுயர்ந்தோர் செய்வார் கவி! அரங்கத் தலைவர் அழகுத் தமிழைத் தரங்கமென வீசுகின்ற தங்கம் - மறந்தநம் சங்கத் தமிழெடுத்துச் சாற்றுவார் பாட்டுத்தார்! சிங்கக் கவினப்பன் தீ! உடனே விழி தமிழா உடனே விழி தமிழா - என்ன உறக்கம் இது புதிதாய்?   தமிழா என

உடனே விழி தமிழா - பைந்தமிழ்ச் சோலை கவியரங்கம்

உடனே விழி தமிழா - பைந்தமிழ்ச் சோலை கவியரங்கம் விநாயகர் காப்பு மஞ்சள் உருப்பிடித்த மாதா வினைகாக்க நெஞ்சம் நிமிர்த்திய நேர்முகனே - அஞ்சேல் எனச்சொல்லி இந்த எளியேனைக் காப்பாய் உனைச்சொல்லில் வைத்தேன் உயர்த்து! தமிழ் வாழ்த்து தமிழ் தமிழ் தமிழ் தமிழ்    தமிழ் தமிழ் தமிழ் தமிழ்! அமிழ்த மாகி வந்து நின்ற    ஆசியே தமிழ் தமிழ்! முகிழ்ந்தெ ழுந்து வீசு கின்ற    முறுவலே தமிழ் தமிழ் ! அகழ்ந்து கொண்டு நெஞ்சில் ஓடும்    ஆற்றலே தமிழ் தமிழ்! நாவெ டுத்த மனிதன் சொன்ன   நல்லசொல் தமிழ் தமிழ்! பாவெ டுத்த கவிஞர் சொல்லும்   பாட்டெலாம் தமிழ் தமிழ்!   தமிழ் தமிழ் தமிழ் தமிழ்    தமிழ் தமிழ் தமிழ் தமிழ்! அமிழ்த மாகி வந்து நின்ற    ஆவியே தமிழ் தமிழ்! தலைவர் வாழ்த்து பேராசான் தந்த பெருமை மிகுமவையில் பேராசை யாலேநான் பேசவந்தேன்! - ஊராசி பெற்றுயர்ந்த மாவரதன் பெற்றியெலாம் பாடிடக் கற்றுயர்ந்தோர் செய்வார் கவி! அரங்கத் தலைவர் அழகுத் தமிழைத் தரங்கமென வீசுகின்ற தங்கம் - மறந்தநம் சங்கத் தமிழெடுத்துச் சாற்றுவார் பாட்டுத்தார்! சிங்கக் கவினப்பன் தீ! உடனே விழி தமிழா உடனே விழி த

நாட்டியத் தாரகை

Image
நர்த்தனத் தாரகையே - உயிர் நாடியிலே சுரம் கோடி இசைத்திடும் அற்புத மானவளே! வித்தகத் தேன்கனியே - எழில் வீச்சுடன் வந்தென்றன் மூச்சை நிறுத்திடும் முத்து நிறத்தவளே! நாட்டிய நாயகியே - விழி நாளும் சுழற்றிடும் வாளெனக் கொண்டனை மாட்டினேன் நானதிலே! பூட்டிய சதங்களையுடன் - சிறு புன்னகையால் பல பொன்னகை தோற்பதைக் காட்டிட வந்தவளே! செம்மை நிறத்தழகே - உனைச் சேர்வது தான் மனம் நேர்வது தான் எண்ணம் சம்மதம் சொல்லடியே! சிம்மத்தின் பெண்மகளே - இடைச் சினுங்கலிலும் இதழ் முனகலிலும் இசைக் கும்மிகள் செய்பவளே! அஞ்சனம் விழியிலடி - எனை ஆட்டி நடத்திடும் ஈட்டிச் சிரிப்பொலி கொஞ்சுவ துன்னிதழ்கள்! மஞ்சள் வரைந்தகன்னம் - புது மாலை நிலவெனச் சோலை மலர்த்திடும் பிஞ்சுப் பிடிவிரல்கள்! கொவ்வை இதழ்ச்சிரிப்பே - கலை கொஞ்சும் முகத்தெழில் மஞ்சு நிறக்குழல் செவ்விய பெண்மணியே! கவ்விய காரிருளில் - முத்தக் கனிகள் பறிப்பதில் கனலை வளர்ப்பதில் பவ்வியம் பார்ப்பதுவீண்! எண்ணச் சிதறெல்லாம் - முந்தி என்னை அடிக்கையில் மின்னல் வெடிக்கையில் கண்ணில் சிரிப்பவளே! மண்ணில் உனைத்தொழவே - கவி வார்த்தைகளைப் பதம் கோத்துப் படைக்கிறேன் பெண்மைக் குயர்ந்தவளே! பாட்டுக்

நாட்டியத் தாரகை

Image
நர்த்தனத் தாரகையே - உயிர் நாடியிலே சுரம் கோடி இசைத்திடும் அற்புத மானவளே! வித்தகத் தேன்கனியே - எழில் வீச்சுடன் வந்தென்றன் மூச்சை நிறுத்திடும் முத்து நிறத்தவளே! நாட்டிய நாயகியே - விழி நாளும் சுழற்றிடும் வாளெனக் கொண்டனை மாட்டினேன் நானதிலே! பூட்டிய சதங்களையுடன் - சிறு புன்னகையால் பல பொன்னகை தோற்பதைக் காட்டிட வந்தவளே! செம்மை நிறத்தழகே - உனைச் சேர்வது தான் மனம் நேர்வது தான் எண்ணம் சம்மதம் சொல்லடியே! சிம்மத்தின் பெண்மகளே - இடைச் சினுங்கலிலும் இதழ் முனகலிலும் இசைக் கும்மிகள் செய்பவளே! அஞ்சனம் விழியிலடி - எனை ஆட்டி நடத்திடும் ஈட்டிச் சிரிப்பொலி கொஞ்சுவ துன்னிதழ்கள்! மஞ்சள் வரைந்தகன்னம் - புது மாலை நிலவெனச் சோலை மலர்த்திடும் பிஞ்சுப் பிடிவிரல்கள்! கொவ்வை இதழ்ச்சிரிப்பே - கலை கொஞ்சும் முகத்தெழில் மஞ்சு நிறக்குழல் செவ்விய பெண்மணியே! கவ்விய காரிருளில் - முத்தக் கனிகள் பறிப்பதில் கனலை வளர்ப்பதில் பவ்வியம் பார்ப்பதுவீண்! எண்ணச் சிதறெல்லாம் - முந்தி என்னை அடிக்கையில் மின்னல் வெடிக்கையில் கண்ணில் சிரிப்பவளே! மண்ணில் உனைத்தொழவே - கவி வார்த்தைகளைப

நெழல் இருக்குமா?

Image
மக்கா தெரிஞ்சிக்க - எப்பவும் வானம் தான் பெருசு - அது முக்காலத்திலும் எட்டா தொசக்க முறுக்குற திணுசு  ஆத்த மறிச்சி வீட்ட கட்டி ஐயோ வெள்ளமுன்னு - நாம அலறித் திரியுறோம் - இங்கக் காத்தக் கெடுத்து மழையத் தடுத்து காவிரி வர்லேன்னு - அடடா கண்ணீர் சிந்துறோம்! காட்டத் திருத்தி கழனி வெச்சான் காட்டு வாசிதான் - அவனும் நம்ம சாதிதான் - வயக் காட்ட அழிச்சு கட்டிடங் கட்டி காசுக்குத் தண்ணியையும் - இப்போநாம கஷ்டத்தில் வாங்குறோம்! மலைய வெட்டி பாத செஞ்சு நமக்கு முப்பாட்டன் - அழகா ஆத்துக்கு வழிவிட்டான் - இப்போ நெகிழி திணிச்சு ஆத்து வழியில மலைய செஞ்சுப்புட்டோம் - வெட்டதான் மனுஷன் போறவில்ல! உனக்கும் எனக்கும் மட்டும் இல்லே அடுத்த சந்ததிக்கும் - ஒலகம் இருக்க வேணுமடா! - நம்ம மனசு போக்குல அழிச்சுப் போனா புள்ளைக்கும் பேரனுக்கும் - மல, நதி மரம் இருக்காதே!! - ஒதுங்கிட நெழல் இருக்காதே! -விவேக்பாரதி 15.09.2018