மகாத்துமா காந்தி போற்றி!


அகிம்சையால் நமை உயர்த்தி
    அகிலமே வியந்து போற்றும்
தகைமையைத் தந்த நல்லர்
    தலைவனும் தொண்டன் என்ற
மிகவுயர்வான எண்ணம்
    மிழற்றிட வாழ்ந்த பண்பர்
மகிமைகள் நிறைந்த எங்கள்
    மகாத்துமா காந்தி போற்றி!! 

-விவேக்பாரதி
02.10.2018

Popular Posts