Posts

Showing posts from November, 2018

குற்றால குதூகலம்

Image
குற்றால அருவியில் முதன்முறை குளித்தபோது, அதைக் கண்டு வியந்து தண்ணீரின் சத்தத்துதோடே உரக்கச் சொன்ன கவிதை.  படிப்படியாய்த் தண்ணீர்;  பளிங்குபோலத் தண்ணீர்  பரம்பொருளே நீர்வடிவில்  பாய்ந்தணைத்த தண்ணீர்!   குடங்குடமாய்த் தண்ணீர்;  குன்று பாய்ச்சும் தண்ணீர்  கொட்டிக்கொட்டி உடல்முழுக்கக்  குளிர்கொடுக்கும் தண்ணீர்!   எடுக்கவெடுக்கத் தன்ணீர்;  இன்பமான தண்ணீர்;  எழுதிவைத்த ஓவியமாய்  ஏறிவிழும் தண்ணீர்;   விடியலெனப் பெருகி  விலங்குபோடும் அருவி,   விளையாடிப் பார்க்கையிலே  உள்ளமாகும் குருவி!! –விவேக்பாரதி  18.11.2018

அவன் பதத்திற்குக் கீழே

Image
 அவன் பதத்திற்குக் கீழே - இந்த     அண்ட பகிரண்டம் சுழலும் தவம் முயல்வார்க்குள் எல்லாம் - இந்தத்     தலைவன் பாதமே தெரியும்! சிவனும் குருவென்னும் வேலன் - சின்னச்     சிரிப்பு சிரிக்குமணு கூலன் கவலை இனியில்லை நெஞ்சே - கந்தன்     கழல்கள் உண்டெதற்கும் அஞ்சேல்! வள்ளி தெய்வானை யோடு - வீதி     வலமும் வருகின்ற போது உள்ளம் எங்குமவன் காட்சி - எந்த     உயிரின் உள்ளுமிவன் ஆட்சி கள்ளம் இல்லாத நெஞ்சில் - இந்தக்     கந்தன் வாழுவது திண்ணம் வெள்ளம் இவன்வார்க்கும் கண்ணீர் - துன்ப     வெம்மை தணிந்துயரும் எண்ணம்! வேலும் உண்டுநமைக் காக்க - இந்த     வேந்தன் உண்டுநலம் சேர்க்கக் காலன் எதிர்நிற்கும் போதும் - சொல்லக்     கந்தன் பேருண்டு போதும்! ஞாலம் காக்கவரும் வேலன் - தமிழ்     ஞானி யர்க்குதவு சீலன் கோலத்தில் சின்ன பாலன் - கந்தன்     கொல்லும் கயமைக்குக் காலன்! -விவேக்பாரதி 12.10.2018

பாரதி கானா

Image
ஹே!  பாரதியே பொறந்து வந்தான் நம்ம நாட்டுல அவன் பாட்டு சத்தம் கேட்டுது பார் நடு ரோட்டுல சூடு பறக்க வந்த அந்த அதிர் வேட்டுல வெள்ளையன் சுருட்டிக்கிட்டு ஓடிப்புட்டான் மிட் நைட்டுல முண்டாசு கவிஞன் பாரதி - அவன் மீச முறுக்கி நின்ன தீப்பொறி சொறன இல்லாம சுருண்டு கெடந்த மனுசன எழுப்பப் பாடுனான் சிங்கம் போல கர்ஜன பதிச்சி நடந்தானே மண்ணு மேட்டுல பாட்டு தானே சோறு அவன் வூட்டுல ஆத்தா சக்திய பக்கத்துல பாத்தவன் இந்திய தேவிய சொதந்திரமா நெனச்சவன் பேனா எடுத்தானே துப்பாக்கி பறக்க இனிமேல் இவன்போல யார்வந்து பொறக்க!! -விவேக்பாரதி 05.11.2018

வெடியற்ற விடியல்

Image
image courtesy :http://static.dnaindia.com/sites/default/files/2014/10/21/276983-diwali-10.jpg  வெடியற்ற விடியலைக் காணவேண்டும் - மண்ணின்    வேதனை கூடாதிருக்க வேண்டும் - கோர இடியற்ற திருநாளைக் காணவேண்டும்! - அன்று     இன்பமே வரமாய்க் கிடைக்கவேண்டும்! - நொந்து மிடியுற்ற தாய்பூமி மோட்சம்பெற - அசுரன்    மிரட்சியைக் கொன்றநாள் தீபாவளி - அன்று விடியட்டும் நல்வாழ்த்தும் உற்சாகமும் - நம்மை    விலகட்டும் பொய்ப்புகை பிறதூசுகள்! குப்பைகள் புகைகளும் அலங்காரமோ? - நிலம்    கொடுத்ததற் கேதரும் பரிகாரமோ? - இதனைத் தப்பென்று தெளியாமல் வாழ்கின்றதால் - நம்மைத்    தரிகெட்ட கரியபுகை சூழ்கின்றதே! - தேவை முப்போதும் நெருக்கிடப் புகைவாகனம் - விட்டு    முந்திடுங் குதிரைகள் போலோடுவோம் - பல குப்பைக்கு மத்தியில் உயர்கோபுரம் - கட்டி    கோடிகள் பெற்றதாய் நாம்பாடுவோம்! விடுமுறை நாளிலும் வெடிமாசினால் - புவி    விக்கிட வைப்பதோர் விளையாடலோ? - வளம் தடுத்திடும் செய்கைக்குப் பல்லாயிரம் - இங்கு    செலவுகள் செய்வதோர் அறிவாண்மையோ? - வையம் அடுப்பெனப் புகையோடு நெருப்பைத்தர - அதனை    ஆனந்தம் ஆனந்தம் எனச்சொல்வமோ? - இதை விடுத்துயர் வ

வெடியற்ற விடியல்

Image
image courtesy :http://static.dnaindia.com/sites/default/files/2014/10/21/276983-diwali-10.jpg  வெடியற்ற விடியலைக் காணவேண்டும் - மண்ணின்    வேதனை கூடாதிருக்க வேண்டும் - கோர இடியற்ற திருநாளைக் காணவேண்டும்! - அன்று     இன்பமே வரமாய்க் கிடைக்கவேண்டும்! - நொந்து மிடியுற்ற தாய்பூமி மோட்சம்பெற - அசுரன்    மிரட்சியைக் கொன்றநாள் தீபாவளி - அன்று விடியட்டும் நல்வாழ்த்தும் உற்சாகமும் - நம்மை    விலகட்டும் பொய்ப்புகை பிறதூசுகள்! குப்பைகள் புகைகளும் அலங்காரமோ? - நிலம்    கொடுத்ததற் கேதரும் பரிகாரமோ? - இதனைத் தப்பென்று தெளியாமல் வாழ்கின்றதால் - நம்மைத்    தரிகெட்ட கரியபுகை சூழ்கின்றதே! - தேவை முப்போதும் நெருக்கிடப் புகைவாகனம் - விட்டு    முந்திடுங் குதிரைகள் போலோடுவோம் - பல குப்பைக்கு மத்தியில் உயர்கோபுரம் - கட்டி    கோடிகள் பெற்றதாய் நாம்பாடுவோம்! விடுமுறை நாளிலும் வெடிமாசினால் - புவி    விக்கிட வைப்பதோர் விளையாடலோ? - வளம் தடுத்திடும் செய்கைக்குப் பல்லாயிரம் - இங்கு    செலவுகள் செய்வதோர் அறிவாண்மையோ? - வையம் அடுப்பெனப் புகையோடு நெருப்பைத்தர - அதனை    ஆனந்தம் ஆனந்தம் என

கடுகு தவழ்ந்த கடல்

Image
எதற்கும் வரையறை கொடுத்துப் பழகிய தோஷத்தால், ஞானக் கடலின் வரையறையை ஒரு கடுகு சொல்கிறது.  நெஞ்சைக் கடைந்தெடுக்க நேரும் சுகநிகழ்வு! நஞ்சு கலந்ததோர் நன்மருந்து – அஞ்சிடவும்  ஏற்றிடவும் வைக்கும் எரிதழல்! ஞானமெனும்  மாற்றிட மில்லா மறை! (1)  மறையில் வகுப்பதும், மாபெரியோர் சொல்லும்  நெறியில் இருப்பதும், நில்லா – இறையென்று  சொல்லுவதும் ஞானச் சுடரைத்தான்! அந்தத்தில்  வெல்லுவதும் ஞான விடை! (2)  விடையறியாக் கேள்விக்கு வித்தாகிப் பின்னர்  மடையாய்ப் பதிதந்து மாய்க்கும்! – கடைக்கோடி  புல்லும் புழுவுக்கும் பூண்டிற்கும் சேர்கின்ற  பொல்லாத போகப் பொருள்! (3)  பொருள்மீதும் தேகப் பொலிவுகளின் மீதும்  அருள்மீதும் அன்பிலும் ஆறா திருக்கின்ற  ஆசை அடங்க அவதரிக்கும் நெஞ்சத்தில் பேசும் அசரீரிப் பேர்! (4) பேருக்கும் சேர்க்கும் பெருமைக்கும் மற்றும்வே  றாருக்கும் கோடா அரசியலாம்! – ஊருக்குப்  போகும் வரையமைதி போகா மனத்தெரியும்  வேக நெருப்பின் விசை (5)  விசையோடு பாயும் விசித்திர உள்ளம்  அசையா அமைதியில் ஆழ்ந்தால் – கசையாய்நம்  சொல்மாற்றும் மந்திரம்! சொல்லில் அடங்காது  வல்லோனாய் ஆக்கும் வரம்! (6)  வரத்தால் வருவதன்று வாங்க