குற்றால குதூகலம்


குற்றால அருவியில் முதன்முறை குளித்தபோது, அதைக் கண்டு வியந்து தண்ணீரின் சத்தத்துதோடே உரக்கச் சொன்ன கவிதை. 

படிப்படியாய்த் தண்ணீர்; 
பளிங்குபோலத் தண்ணீர் 
பரம்பொருளே நீர்வடிவில் 
பாய்ந்தணைத்த தண்ணீர்!
 
குடங்குடமாய்த் தண்ணீர்; 
குன்று பாய்ச்சும் தண்ணீர் 
கொட்டிக்கொட்டி உடல்முழுக்கக் 
குளிர்கொடுக்கும் தண்ணீர்!
 
எடுக்கவெடுக்கத் தன்ணீர்; 
இன்பமான தண்ணீர்; 
எழுதிவைத்த ஓவியமாய் 
ஏறிவிழும் தண்ணீர்;
 
விடியலெனப் பெருகி 
விலங்குபோடும் அருவி,  
விளையாடிப் பார்க்கையிலே 
உள்ளமாகும் குருவி!!

–விவேக்பாரதி 
18.11.2018Comments

Popular Posts