பாரதி கானாஹே! 
பாரதியே பொறந்து வந்தான்
நம்ம நாட்டுல
அவன் பாட்டு சத்தம் கேட்டுது பார்
நடு ரோட்டுல
சூடு பறக்க வந்த அந்த அதிர் வேட்டுல
வெள்ளையன்
சுருட்டிக்கிட்டு ஓடிப்புட்டான்
மிட் நைட்டுல

முண்டாசு கவிஞன் பாரதி - அவன்
மீச முறுக்கி நின்ன தீப்பொறி
சொறன இல்லாம சுருண்டு கெடந்த மனுசன
எழுப்பப் பாடுனான் சிங்கம் போல கர்ஜன
பதிச்சி நடந்தானே மண்ணு மேட்டுல
பாட்டு தானே சோறு அவன் வூட்டுல
ஆத்தா சக்திய பக்கத்துல பாத்தவன்
இந்திய தேவிய சொதந்திரமா நெனச்சவன்
பேனா எடுத்தானே துப்பாக்கி பறக்க
இனிமேல் இவன்போல யார்வந்து பொறக்க!!
-விவேக்பாரதி
05.11.2018

Comments

பிரபலமான பதிவுகள்