செல்லம்மா பாரதி
முண்டாசுக் கவிப்புயலை இசையாய்ச் செய்த
    மூங்கிலுக்கா முக்காடு போட்ட கோலம்?
பெண்டிர்க்கு விடுதலையை இசைத்துச் சென்ற
    பேராசைக் காரன்மனை விக்கா கோரம்?
குண்டாட்டம் தீமைகளைத் துளைத்தோன் தம்மைக்
    கொண்டபெரும் பீரங்கிக்கா இத்துன்பம்?
அண்டிவந்த பொய்மூடத் தனமாம் பேயை
    அணிந்தபடி வீழ்கின்ற உலகத் தீரே!!


-விவேக்பாரதி 
05.12.2018

Comments

பிரபலமான பதிவுகள்