கனவும் கனவு சார்ந்த நினைவும்

இதுவும் ஒரு குறும்படப் படப்பின்போது நிகழ்ந்த அனுபவம் தான். எழுதச் சொன்ன நண்பன் Karthik Mano வுக்கு நன்றி. புயல் வரும் என்று அறிவித்த சமயம். அன்று மாலை தொடங்கி முழு இரவும் படப்பிடிப்பு நடத்துவதாய் எங்கள் திட்டம். சுமார் 7 மணி அளவில் தொடங்கினோம். ராயப்பேட்டை பகுதியில் குடியிருப்புகளிடம் அனுமதி கேட்டுத் தொடங்குவதற்கு அவ்வளவு நேரம் ஆனது. சரியாக பாதிக் காட்சி நடித்துக் கொண்டிருக்கும்போது எதிர்பாரா விருந்தாளி வானிலிருந்து வந்தது. சரியான மழை! கொஞ்சம் கூட இடைவேளை தாராத மழை! ஒரு முதியவர் தன் வீட்டு கார் பார்க்கில் நின்றுகொள்ள இடம் தந்தார். இரவு நேரத்தில் அவர் எங்களுக்குக் கர்ண மகாராஜாவைப் போல காட்சி அளித்தார். ஆனால் எல்லாரும் அங்கே நிற்க முடியவில்லை. சிலர் நாங்கள் வந்திருந்த காரில் படுத்துக் கொஞ்ச நேரம் தூங்கலாம் என்று தயாரானோம். குளிர், மழை, படப்பிடிப்பை நடத்த முடியாத கவலை என்று எதுவும் எங்களைப் பீடிக்கவில்லை. பொழுதைச் சிரித்தபடி மிகவும் துள்ளலோடு ஒருவரை ஒருவர் கலாய்த்தபடி தான் கழித்துக் கொண்டிருந்தோம். சரி! நாங்கள் தூங்குகிறோம் என்று இரண்டு நண்பர்களுடன் நானும் காருக்குள் ஏறிக் கொண்டேன். இ