குண்டு மணித் தங்கம்

குண்டு மணித் தங்கமே
கொடுத்து வெச்ச வைரமே
குட்டிக் குட்டிக் கதகேளு - நீ
குலுங்கிச் சிரிச்சுக் கேளு...

ஒரு காட்டில் ஒரு யான
அது கூட ஒரு பூன

பூனையும் யானையும்
பாட்டுப் பாடிச்சாம்
தும்பிக்கைய பீப்பீயா
யான ஊதிச்சாம்!

புலியொன்னு ஓடி வந்துச்சான்
அத புடிக்க எலி வந்துச்சான்
குறுக்க பல்லி வர
அது வால்ல தடுக்கிட்டு
புலி வந்து முன்ன விழுந்துச்சாம்
அது நசுங்க எலி விழுந்துச்சாம்!

காக்கா வட திருடி
குயிலுக்கிட்ட தந்துச்சான்
யாரு கேட்டாலும்
தராதேன்னுச்சான்

குயிலு அந்த வடைய
பாட்டி தட்டில் போட்டுப்புட்டு
திருடக் கூடாது
நண்பான்னு சொல்லிச்சான்!

ஒசக்க திராட்ச கொத்து
நரி எட்டிப் பாத்துச்சான்
புடிக்க முடியாம
புளிப்புன்னு சொல்லிச்சான்

அப்போ கொரங்கு வந்து
திராட்ச கொத்த தள்ளி விட்டு
முயற்சி வேணுமுங்க
அண்ணாச்சீன்னுச்சாம்! a

ஆட்டுக்குட்டி ரெண்டு
பாலத்துல வந்துச்சாம்
நகர முடியாம
முட்டிக்கிட்டு நின்னுச்சாம்

ஒரு கழுகு ஒரு ஆட்ட
அந்தப் பக்கம் தூக்கி விட்டு
சண்ட போடாதே
நண்பானு சொல்லிச்சாம்!!


-விவேக்பாரதி


பாடல் 

Comments

Popular Posts