அன்புள்ள வானரசன் ஐயாவுக்குவைரவரி கட்கிவரே சொந்தக் காரர்
    வார்த்தைகளைத் தேர்ந்தெடுத்துச் சொல்லும் தீரர்
தைரியத்தை எப்போதும் தரித்த நெஞ்சர்
    தமிழ்வீட்டில் வாழ்கின்ற சுட்டிப் பிள்ளை!
மைதரித்த தாலிவரும் இளைஞர்! சூழும்
    இளமைதரித் தாரதனால் இளைஞர்! வெற்றுப்
பொய்திரித்துப் பேசுகின்ற புலவர்க் கூடே
    புகழுக்காய் சாயாத வான ராசன்!


தொன்மைத்த மிழ்ச்சங்கம் இவர்ரா ஜாங்கம்
    தொன்மைத்த மிழ்த்தாய்க்கே இவரின் சேவை!
வண்ணமிகு பேனாயனத்தைத் தீட்டி
    வாழ்கின்றார் நவயுகத்துக் கம்பனாண்டான்!
எண்ணத்தில் எப்போதும் நகையின் ஊறல்
    எவருக்கும் தாழாத முறுவல் சாரல்
திண்ணத்தைப் பறைசாற்றும் வெள்ளைச் சட்டை
    திறமான கவிதைகள் இவரின் பாட்டை!

வானரசன் ஐயாவின் பிறந்த நாளில்
    வற்றாத தமிழ்கொண்டும் சக்தி அம்மை
ஞானமய மாயென்னில் நின்று கொண்டும்
    நன்றாக வாழ்த்திடநான் எழுது கின்றேன்!
தேனமிர்தத் தமிழோடும் சுற்றத் தோடும்
    தேயாத சமுதாய நலத்தினோடும்
கானமென இப்புவியில் ஐயா வாழ்க
    கவிதைக்கு யர்வான அரசன் வாழ்க!!

அன்பன்
விவேக்பாரதி
21.02.2019

Comments

பிரபலமான பதிவுகள்