இன்னும் என்ன அமைதி?


இன்னு மென்னடா அமைதி காப்பது!
    எடுடா தம்பி வாளை! - அட
    இதுதான் நல்ல வேளை! - நமை
பின்னி ருந்தொரு வீர மின்றியே
    அடித்தான் அற்பக் கோழை - பீறி
    எழடா! போற்றும் நாளை! 


வஞ்சம் என்பதும் சூழ்ச்சி என்பதும்
    வாழும் கோஷம் ஆச்சு! - நம்
    வலிமை எங்கு போச்சு? - பிறர்
தஞ்சம் என்றதும் காக்கும் நெஞ்சமே
    தன்மானம் என்ன ஆச்சு? - கேட்டுத்
    தழலாய்க் கொள்க மூச்சு!

வீரர் மாயலாம் வீரம் மாயுமா?
    வீச்சு நம்மில் உண்டு! - பார்பார்
    விந்தை நம்மில் உண்டு! - இனி
பார தத்தையார் தீண்டப் பார்ப்பினும்
    பாயும் ஆண்மைக் குண்டு! - அஃதெம்
    பாவையர்க்கும் உண்டு!!

-விவேக்பாரதி
15.02.2019

Comments

Popular Posts