Posts

Showing posts from April, 2019

அரசனும் அரசியும்

Image
மன்னவன் நானுனக்கு - அடி       மாதரசே நீ அரசியடி!  என்னரும் பைங்கிளியே - நீ       என்முன்பு வந்திடும் போதினையே  இன்னமும் வேண்டுகிறேன்! - என்       இதய அறைகளில் எதிரொலியாய்  உன்னுடை நாமமடி! - எனை       உதறிவிட் டாலென்ன நான்புரிவேன்!  பூக்களின் ராணியடி - நீ       புள்ளினம் பேசிடும் ஓசையடி  பாக்களின் தேனியடி - எனைப்       பாவலன் ஆக்கிய தேவியடி  சீக்கிரம் நீவரவும் - என்       ஜீவன் ஒளிபெற வைத்திடவும்  தீக்கிறை யாகிமனம் - ஒரு       திண்ண தவத்தை இயற்றும்நிதம்!  கோபத்தில் மூத்தவளே - எனைக்       கோல மொழியில் சிறையெடுத்தே  ஆபத்தை நீக்கிவைத்தாய் - அடி       ஆசைவைத்தாய் மிகப் பாசம்வைத்தாய்!  தாபத்தை நீகளைந்தாய் - என்       தமிழைக் கவிதையை எளிமைசெய்தாய்  தூபத்தைப் போல்மனத்தில் - நீ       துணையெனவே நின்று சுடரவைத்தாய்!  காதலைச் செய்யவந்தாய் - என்       கவிதைகள் கேட்டு ரசிகையென நீதிறம் ஏற்றிநின்றாய்! - இன்று       நேற்றல்லடி நம் காதலது  காதங்கள் தூரங்களும் - பல       காலங்கள் வாழ்ந்து சிறந்ததுவாம்!  நீதிகள் சொல்லியவை - இதில்       நீயும் நானுமொரு காதலர்கள்!  என்னை இணைந்ததுவும் - எனது       இன்பங்கள்

சகியைத் தேடி

கைகள் நீட்டித் தேடுகின்றேன் - என்    காதல் நிலவை காணவில்லை! கண்கள் விரித்துக் காத்திருந்தும் - அவள்    கனிந்த கைகள் தீண்டவில்லை! சைகை மொழியில் தேடுகின்றேன் - என்    சகியை ஏனோ காணவில்லை சலங்கை சத்தம் கேட்கிறது - அவள்    சரிந்த நிழலைக் காணவில்லை! என்னை எழுப்பப் பின்முதுகில் - அவள்    எட்டி உதைப்பாள்! நேரவில்லை! ஏதோ காதில் முணுமுணுத்து - அவளை    ஏந்தி அணைப்பேன்! நிகழவில்லை! கண்ணைத் திறந்து கன்னத்தில் - நான்    கவிதை இடுவேன்! காணவில்லை! காலம் மட்டும் செல்கிறது - எனைக்    கையால் மீட்பாள் தோன்றவில்லை! அத்தான் என்பாள் ஆசையுடன் - நான்    அதைத்தா என்பேன் வாஞ்சையுடன் அதிகா லையிலா என்றபடி - என்    ஆசை தணிப்பாள் இளையகொடி பித்தா என்பாள் முரண்பிடிப்பாள் - அது    பிடித்திருந் தாலும் அவள்துடிப்பாள் பிறையாய் நாணி முகம்குழைவாள் - அப்    பிரியத் தில்நான் கண்மலர்வேன்! இப்போ ததுபோல் நேரவில்லை - என்    இரவு தீர வழியுமில்லை இதயம் திருடிப் போனகிள்ளை - அவள்    எங்கே உள்ளாள் தெரியவில்லை! எப்போ தேனும் கனவுகளில் - கண்     இமைக்காப் போதில் நினைவுகளில் என்முன் வருவாள் சிரித்தபடி - எனை    எழுதச் சொல்வாள் அணைத்தபடி!

உலக நாடக நாள்

நடிகன் என்பவன் நாட்டின் கலைமுகம்! விடியப் போகும் வருங்கா லத்தை முடிந்து நிலைக்கும் முற்கா லத்தை வெடித்துக் கிடக்கும் நிகழ்கா லத்தை நடிப்பில் காட்டும் நயங்கள் கொண்டவன்! உள்ளுக் குள்ளே உலுக்கும் உணர்வு பள்ளம் போலப் பட்டிருந் தாலும் ஊரைத் தன்றன் உற்சா கத்தால் சீரை மறந்து சிரிக்க வைப்பவன்! உடலை மனத்தை ஒருசேர் கலனாய்த் திடம்பட இயக்கத் தெரிந்த மனிதன்! பாராட் டிற்குங் கைத்திட் டிற்கும் நீராய் வியர்வை நிறைய உகுப்பவன்! ஏட்டில் பாட்டில் எழுதிய தெல்லாங் கூட்டி மக்கள் குடிக்கத் தருபவன்! தன்னலம் என்பதைத் தாயகம் தாய்மொழி நன்னலம் காத்தல் என்று பெயர்ப்பவன்! விகடம் சிறுசிறு விளம்பரம் செய்தே அகத்தில் செய்திகள் ஆழப் பதிப்பவன்! மேடை ஏறி வேடம் கட்டினால் ஆடும் கூத்தில் தன்னை இழப்பவன்! எழுந்து நின்று கைத்தட் டுகிற முழுமைக் காக மூச்சு பிடிப்பவன்! பல்லோர் உலகில் பகைமை கொண்டும் சொல்லில் பூசும் விஷத்தைக் கொண்டும் பிறரின் வாழ்வில் பிழையாய் நடிக்க அறத்துடன் மேடையில் மட்டும் நடிக்கும் நாடக நடிகர் களுக்கென் ஊடகம் திறந்த உயர்வாழ்த் துகளே!! -விவேக்பாரதி 28.03.2019

தீர்ந்து திறக்கட்டும்

அவள் அழுகைத் துளிகள் அமிலத் துகள்கள் ஆணே அறியாயோ? - உனை முழுதாய் அழிக்கும் மூர்க்கம் என்றே முதலில் உணராயோ? அவள் கதறல் ஒலிகள் கத்தி முனைகள் கருத்திற் கொள்ளாயோ? - நீ அதைத்தான் விரும்புகின்றாய் என்றால், அழிவை மதியாயோ? அவமானத்தில் தலைகள் கவிழ அழுது குணிந்து கண்கள் கரைய ஆணினம் மொத்தம் வெட்கிக் கிடக்கும் இந்த வேளையில், இனி மழைதான் வருமா? வசந்தம் வருமா? கொளுத்தும் வெயில் குளுமை பெறுமா? சோகக் கண்ணீர் பாவம் கழுவ கடந்து போகக் காட்சிகள் உண்டாம்! என்ன வளர்ந்தோம்? எங்கோ தொலைந்தோம்! ஏனோ மூர்க்கத் தீயில் எரிந்தோம்! வக்கிரம் காணும் விளையாட் டானது! மக்கள் வாழ்வு மல்லரங் கானது! முறைத்துப் பார்க்கும் பாலினக் கோரம்! மறைக்கப் பார்க்கும் அரசியல் புத்தி! இதற்கு மத்தியில் மூச்சு விடுகிறேன் நாசி குமட்டி நடுங்குதல் காணீர்! வார்த்தை எவர்க்கும் வாழ்க்கை தராது வார்த்தை அன்றி அழவழி யேது? தீர்ந்து போகட்டும் மானுட மிருகம் திறக்கட்டும் இனி புதிய பாரதம்!! மன வருத்ததுடன் விவேக்பாரதி 13.03.2019

நினைத்துப் பார்க்க

நினைத்துப் பார்க்க நேரமில்லை    நெருங்கி வா! - உன் கனத்த கூந்தல் சிறையில் என்னைக்    கடத்திப் போக ஓடி வா! ஓர மனத்தில் ஈரச் சலனம்    உரசிப் பார்க்கும் இந்தத் தருணம் காரணங்களே இல்லாமல்    கவிதை என்னும் புயல்கள் ஜனனம் கண் தொடாத தூரத்தில் நாம்    காதலோடு ஏங்குகின்றோம்! மண் தொடாமலே அலையும்     மழையைப் போலத் தூங்குகின்றோம்! (நினைதுப் பார்க்க) கரங்களே என் கலங்களாகி     கால நீச்சல் நானும் மூழ்கி வரங்களே இல்லாத் தவத்தில்    வாழ்க்கை போடும் சின்ன போகி இதயமே இப்போது வந்து    இன்பமே சொத்தாகத் தந்து உதய காலை நேரம் மட்டும்    உதவ வேண்டும் ஆதலினால் (நினைத்துப் பார்க்க) https://drive.google.com/file/d/19X05AXGTSa-UTgPZtNu43fjm59cgAM2-/view?usp=drivesdk -விவேக்பாரதி 11.03.2019

நினைத்துப் பார்க்க

நினைத்துப் பார்க்க நேரமில்லை    நெருங்கி வா! - உன் கனத்த கூந்தல் சிறையில் என்னைக்    கடத்திப் போக ஓடி வா! ஓர மனத்தில் ஈரச் சலனம்    உரசிப் பார்க்கும் இந்தத் தருணம் காரணங்களே இல்லாமல்    கவிதை என்னும் புயல்கள் ஜனனம் கண் தொடாத தூரத்தில் நாம்    காதலோடு ஏங்குகின்றோம்! மண் தொடாமலே அலையும்     மழையைப் போலத் தூங்குகின்றோம்! (நினைதுப் பார்க்க) கரங்களே என் கலங்களாகி     கால நீச்சல் நானும் மூழ்கி வரங்களே இல்லாத் தவத்தில்    வாழ்க்கை போடும் சின்ன போகி இதயமே இப்போது வந்து    இன்பமே சொத்தாகத் தந்து உதய காலை நேரம் மட்டும்    உதவ வேண்டும் ஆதலினால் (நினைத்துப் பார்க்க) பாடல் : -விவேக்பாரதி 11.03.2019

உலகம் அளந்து பார்க்காத ஆழம்

உலகம் அளந்து பார்க்காத ஆழம், பெண்மை. அனைத்து மகளிர்க்கும் எனதினிய  மகளிர் தின வாழ்த்துகள் பெண்மை என்பதோர் ஆயுதம் - நம்    பெருமை அளந்திடும் சீதனம் பெண்மை என்பதோர் பூவனம் - அது    பேண வேண்டிய தோர்வளம்! பெண்மை காப்பதே நம்கடன் - அப்    பேறு வாய்ப்பதே தெய்வதம் பெண்மை வாழ்கெனப் பாடுவோம் - எந்தப்    பெண்ணைக் கண்டாலும் போற்றுவோம்! ஆணின் பலமெலாம் ஊனிடம் - பெரும்    ஆன்ம பலமெலாம் பெண்ணிடம் காண வேண்டிய கீர்த்திகள் - நம்    காரி கைவசம் பூர்த்திகள் பேணும் நல்லறம் பெண்ணிடம் - பல    போரும் அமைதியும் பெண்ணிடம் தூணைப் போலதைக் காத்துதான் - எதிர்    தோன்றும் போதெலாம் வாழ்த்துவோம்! வானின் மாமழை தாய்க்குணம் - அலை    வண்ணக் கடலும் காதல்மனம் சேனை ஆயிரம் ரௌத்திரம் - பல    செழுமை பெண்கொளும் பூரணம்! ஞானம் அவர்சொலும் போதனை - அவர்    நாமம் தேன்வரும் கீர்த்தனை தானு ணர்ந்திதை ஏத்துவோம் - பெருந்    தண்மை பெண்களைப் போற்றுவோம்!! -விவேக்பாரதி 08.03.2019