நினைத்துப் பார்க்க

நினைத்துப் பார்க்க நேரமில்லை
   நெருங்கி வா! - உன்
கனத்த கூந்தல் சிறையில் என்னைக்
   கடத்திப் போக ஓடி வா!

ஓர மனத்தில் ஈரச் சலனம்
   உரசிப் பார்க்கும் இந்தத் தருணம்
காரணங்களே இல்லாமல்
   கவிதை என்னும் புயல்கள் ஜனனம்

கண் தொடாத தூரத்தில் நாம்
   காதலோடு ஏங்குகின்றோம்!
மண் தொடாமலே அலையும் 
   மழையைப் போலத் தூங்குகின்றோம்! (நினைதுப் பார்க்க)

கரங்களே என் கலங்களாகி 
   கால நீச்சல் நானும் மூழ்கி
வரங்களே இல்லாத் தவத்தில்
   வாழ்க்கை போடும் சின்ன போகி

இதயமே இப்போது வந்து
   இன்பமே சொத்தாகத் தந்து
உதய காலை நேரம் மட்டும்
   உதவ வேண்டும் ஆதலினால் (நினைத்துப் பார்க்க)

பாடல் :
-விவேக்பாரதி
11.03.2019

Comments

Popular Posts