Posts

Showing posts from May, 2019

எழுத எஞ்சும் வலி

Image
உன்நே   ரத்தில்   எனக்கும்   பங்கிட்   டுறுதுணையாய் என்சோ கத்தைத் தீர்பாய்க் காப் பாய்! எழில்கமழும்  மின்னோக் கத்துக் கண்ணாய் மீட்டு ம் இசைக்குரலாய்!  உன்னோக் கத்தில் ஊமை எனைநீ உயர்த் துகவே!  மூடன் அற்பன் மூளை இல்லா முடவனெ னைப்  பாடம் சொல்லிப் பரிவோ டேகா பகலி றவாய்  ஆடும் நெஞ்சுக் கடிமை என்னை அணை த்துமடி  சூடும் எண்ணம் கொள்வாய் அழகே சு ந்தரியே!  வாவா வந்தென் வாட்டம் நீக்கி வா ழ்வளிப்பாய்  நீவா வந்தே நீட்டிக் கவிதை நி ஜம்கொடுப்பாய்  போய்வா என்றே புரட்டும் செய்கை  புதுக்கியெனை  பாவாய் காக்கப் பரிவோ டேவா பை ரவியே!  வாழ்வித் திடவோர் வைரத் தடமாய்  வந்தவள்நீ  தாழ்வித் திட்டென் தமிழ்சொத் தெ ழவே செய்தவள்நீ  பாழ்வித் தெனநான் பட்டேன் புவி யில் பரிவுடனே  ஊழ்வித் தகற்றி உயிர்வித் திடு வாய் உத்தமியே!  ஏனோ என்னை எனக்கே பிடிக்க வில் லையடி  ஏனோ என்னை உனக்கு மட்டும் பிடி க்கிறதோ!  வானோ வனமோ வளமை தரவே வந்துதித் தாய்  ஞானா நிலையே நலமே தவமே நல்லவளே!   பித்தன் என்னைப் பிழைக்க வைத்த  பைங்கிளியே  புத்தன் ஆக்கிப் புன்மை தீர்த்த  புண்ணியமே!  கத்தும் மனத்துக் காயன் நீங்கக்  கடைவிழியால்  சித்தம் குளிரப் பாராய் ந

கண்ணீர் வெள்ளம்

Image
அன்பே இதயத்தின் ஆணி இயக்ககமே  இன்பே இல்லாமல் இங்கே கருகுகிறேன்!  எதுதான் என்குற்றம்? எப்போதும் போலுன்னில்  பொதுவாய் நானிருப்பேன் எனநினைத்தல் குற்றமதோ?  உன்னை முழுதாய் உலகமாக மொத்தமாய்  எண்ணி வாழ்வதுதான் என்னுடைய தவறாமோ?  எனக்குன் மனத்தில் எவருக்கும் இல்லாத  தனியிடம் இருக்குமெனச் சிந்தத்தல் பிழையாமோ?  நீயாய் எனைத்தினமும் அழைப்பாய் எனநினைத்து  ஓயாமல் காத்திருக்கும் உள்ளம்தான் என்பிழையோ?  ஒன்றும் விளங்கவில்லை உயிமட்டும் ரத்தமெழ  நின்று கதறி நிலைதாழ்ந்து வீழ்கிறது!  கவிதை இருக்கிறது கைத்தேற்றி காப்பாற்ற  செவிகள் இல்லையே சேதிகளை நான்சொல்ல!  சிலபொழு துன்னால் தனிமை ஆனதற்கே  அலையாய்ப் பேரலைகாய்க் கண்ணீர் பொங்குதடி!  பலநாள் நானுன்னைப் பார்க்காமல் பேசாமல்  உலகத்தில் வாழ்வதெலாம் உளம்நினைத்தால் கதறுதடி!   தேனே திரவியமே நீயின்றி என்வாழ்க்கை  வீணே என்பதெலாம் பழையகதை நீயறிவாய்!  ஒப்புக்குச் சொன்ன வார்த்தையென நினைத்தாயோ?  எப்போதும் எல்லாரும் போல மறந்திடுவேன்  என்றே நினைத்தாயோ? என்போல பித்தனைநீ  முன்பு கண்டாயோ? நானறியேன்! என்னைப்பார் நீவருவாய் எனக்காத்து நீண்டிருக்கும் இவ்விடத்தில்  நாவறட்சி ஆகி நான்மய

ராஜா வேசம் சிறுகதை தொகுப்பு - நூல்நோக்கம்

Image
மே 03. 2019-  சரசுராம் எழுதியிருக்கும் சிறுகதைத் தொகுப்பு “ராஜா வேசம்”. பொதுவாக சிறுகதைகள் என்னைப் பெரிதாய்க் கவர்வதில்லை. கதை என்றாலே தேர்ந்தெடுத்து வாசிப்பவன் நான். இந்தப் புத்தகத்தின் சில கதைகளை வாசிக்கும்போதே, முழுவதுமாய் வாசித்துவிட வேண்டும் என்று தோன்றிவிட்டது. அத்தனை வசீகரம் இவரது கதைகளில் எவ்விடத்தும் குறையாமல் காணப்படுகிறது. சற்றும் எதிர்பாராக் கோணங்களில் அமைந்திருக்கிறது ஒவ்வொரு கதையும். ஆனால் நாம் அந்த நிலைகளைப் பற்றி ஒருமுறையேனும் வாழ்வில் கேள்விப்படாமல் இருந்திருக்க மாட்டோம். மகனுக்காக பாரட்டை மறுத்த அண்ணாமலையும், தன் சோகத்தை மறைத்த பார்வதியும் கண்முன் நிற்கிறார்கள். என்னுடைய இந்த இருபதாம் வயதில், நானும் என் சமூகமும் எங்கள் பெற்றோர்களை எப்படிக் காக்க வேண்டும் என்பது அதிலே பாடமாக வருகிறது. பாட்டி சொல்லாத கதை நம் அனைவரின் வாழ்விலும் நிகழும் தருணம் என்பது ஸ்பாய்லர். இதனை இங்கே வைப்பது எனக்கு மகிழ்ச்சியான செய்தி தான். என் பள்ளிக்கால பேருந்து நிறுத்த நண்பர்களை இப்போது சில டிப்போக்களில் பார்க்க முடியுமா என்று தேடிக் கொண்டிருக்கிறேன். அனைத்துக்கும் முத்தாய்ப்பு அந்த ராஜா வேசம் கட