Posts

Showing posts from June, 2019

தென்றலே மெதுவாக வீசு

Image
தென்றலே மெதுவாக வீசு - எங்கள்     தேய்பிறை முழுநிலா ஆனதைப் பேசு! அன்பினை நெஞ்சோடு பூசு - நீ     ஆடிவந் தேநிதம் மேனியைக் கூசு! யாருக்கும் கிட்டாத வெண்ணிற அப்பளம்     யாரோடும் சொல்லாமல் வான்சென்றது தேருக்குள் சக்கரம் இருப்பதைப் பார்த்துளோம்     தேரேயோர் சக்கர வடிவென்றது! வானுக்கு விளக்கேந்தி வளமகள் வருகிறாள்     வஞ்சியைக் காணவே நாடுகின்றோம் ஏனிந்த நாணமோ விளக்கத்தை நீட்டியே     எங்கே மறைகிறாள் தேடுகின்றோம்! (தென்றலே மெதுவாக வீசு) குளிரென்ற நிலைவந்து குவியலாய் உருமாறி     குன்றாகி வானிலே நிலவானது வெளிரென்ற கன்னமோ வென்பஞ்சுக் கிண்ணமோ     விழியோரம் கருநீலம் உருவானது! விண்ணுக்குள் வெண்ணிலா கண்ணுக்குள் அந்நிலா     விடுகதை என்பதா விடையென்பதா? எண்ணத்தில் பாடலாய் எழுத்துக்குள் ஜீவனாய்     ஏறினாள் இந்நிலா கவியின்விழா!! (தென்றலே மெதுவாக வீசு!!) -விவேக்பாரதி 19.04.2019

பிரதோஷப் பாடல்

Image
கயிலை மலையிருக்கக் கருணைக் கரமிருக்கக் கவலை இனியேது! மயிலைப் பதியிருக்க மனதில் அவனிருக்க மறுபடி வரவேது? பரமன் துணையே பலமெனப் பிடித்தால்     பாதை தெளிந்திடலாகும் சரணம் சரணம் எனவே செபித்தால்     சந்தேகங்கள் மாயும் தலைவன் அவனே எனவே நினைத்தால்     தன்னால் அடிமை நீங்கும் உலகம் அவனின் விளையா டலென     உணர்ந்தால் கடமை ஓங்கும்! அகமே கோவில் அன்பே தீபம்     அறிவே அதில்வரும் ஜோதி சுகமே சிவமாம் சிவமே சுகமாம்     சுடரில் உயிரும் பாதி! -விவேக்பாரதி 17.04.2019

படி! படி! படி!

Image
படி படி படி - அது பக்குவமாக்கும் படி படி படி படி - அந்தப் பாதையில் நிற்கும் படி! படி! படி! படி! உள்ளே தைக்க ஊன்றிப் படி     உணர்வை இழந்து மூழ்கிப் படி பிள்ளை போல புதிதாய்ப் படி     பிதற்றல் இன்றி தெளிவாய்ப் படி மனதை வருடும் மெதுவாய்ப் படி     மாற்றம் நிகழ்த்தும் வகையாய்ப் படி உனக்கே உன்னைக் காட்டப் படி     உண்மை எதுவோ அதனைப் படி காலம் தாண்டும் கவிதை படி     கணக்கா வழக்கா எதையும் படி நாளும் படி!நீ நன்றைப் படி     நடுவைப் படி!பின் முனைகள் படி! யார்சொன் னாலும் நீயாய்ப் படி     யானை போலே நிறுத்தப் படி நேர்சிந் தனைகள் நிறைவாய்ப் படி     நெற்றி வியர்க்கும் உழைப்பாய்ப் படி வாசகன் போலே வளர்ந்து படி     வார்த்தை சேரும் வலுவாய்ப் படி யாசகன் போலே எல்லாம் படி     எதற்கிப் பிறவி? அதற்காய்ப் படி! படி! படி! படி! -விவேக்பாரதி 15.04.2019

எம் வரதராசன் வாழ்க

Image
மரபுக்குப் புதுச்சோலை அமைந்து வைத்த     மாண்புடைய ஓர்நெஞ்சம் கற்றோர் போற்றும் வரதரெனும் வள்ளலவர் பிறந்த நாளில்     வாக்கென்னும் பொன்கொண்டு வாழ்த்து கின்றேன் தரமுடைய தமிழ்நூற்கள் நுணுகிக் கற்றுத்     தாராள மாயறிவை வளர்த்த மேதை சிரத்தையுடன் தமிழ்மகளைக் காதல் கொள்ளும்     சிறப்பான எம்வரது வாழ்க வாழ்க தந்தையென வழிகாட்டும் பாசம் ஓர்பால்     தாயெனவே அமுதூட்டும் நேசம் ஓர்பால் சொந்தமெனத் தோள்கொடுக்கும் நட்பும் ஓர்பால்     சொல்லுவதில் புதிர்போடும் குறும்பும் ஓர்பால் விந்தைமிகு வினைசெய்யும் வீச்சும் ஓர்பால்     விளையாட உடன்சேரும் ஆசை ஓர்பால் எந்தநிலை வந்தாலும் தலைதா ழாத     ஏற்றத்தை ஏந்துகிற வீரம் ஓர்பால் எல்லாமே பாவலர்கண் அமைந்த பண்பாம்     எழுத்தென்னும் நாடாளும் மன்னன்! சொல்லும் சொல்லாலே சவுக்கடிகள் வீசும் தீரர்!     சொல்முடிவில் சுட்டிருந்தால் மருந்தும் செய்வார்! கல்லாமல் பலபேர்கள் பட்டம் போட்டுக்     காசுக்கு விலைபோகும் உலகம் தன்னில் வல்லாண்மை பலவாய்த்த போதும் செல்வ     வழக்கத்தில் வழுக்காத வரதர் வாழ்க! தலைமைகள் என்பதெலாம் பொறுப்பே அன்றி     தம

எம் வரதராசன் வாழ்க

Image
மரபுக்குப் புதுச்சோலை அமைந்து வைத்த     மாண்புடைய ஓர்நெஞ்சம் கற்றோர் போற்றும் வரதரெனும் வள்ளலவர் பிறந்த நாளில்     வாக்கென்னும் பொன்கொண்டு வாழ்த்து கின்றேன் தரமுடைய தமிழ்நூற்கள் நுணுகிக் கற்றுத்     தாராள மாயறிவை வளர்த்த மேதை சிரத்தையுடன் தமிழ்மகளைக் காதல் கொள்ளும்     சிறப்பான எம்வரது வாழ்க வாழ்க தந்தையென வழிகாட்டும் பாசம் ஓர்பால்     தாயெனவே அமுதூட்டும் நேசம் ஓர்பால் சொந்தமெனத் தோள்கொடுக்கும் நட்பும் ஓர்பால்     சொல்லுவதில் புதிர்போடும் குறும்பும் ஓர்பால் விந்தைமிகு வினைசெய்யும் வீச்சும் ஓர்பால்     விளையாட உடன்சேரும் ஆசை ஓர்பால் எந்தநிலை வந்தாலும் தலைதா ழாத     ஏற்றத்தை ஏந்துகிற வீரம் ஓர்பால் எல்லாமே பாவலர்கண் அமைந்த பண்பாம்     எழுத்தென்னும் நாடாளும் மன்னன்! சொல்லும் சொல்லாலே சவுக்கடிகள் வீசும் தீரர்!     சொல்முடிவில் சுட்டிருந்தால் மருந்தும் செய்வார்! கல்லாமல் பலபேர்கள் பட்டம் போட்டுக்     காசுக்கு விலைபோகும் உலகம் தன்னில் வல்லாண்மை பலவாய்த்த போதும் செல்வ     வழக்கத்தில் வழுக்காத வரதர் வாழ்க! தலைமைகள் என்பதெலாம் பொறுப்பே அன்

சன்னிதியில் விழ வேண்டும்

Image
அறியாத சிறுவனின் புரியாத நெஞ்சினில்     அம்மைநின் ஆர்பாட்டமா? உன்றன்     அன்புக்கு நான் வாட்டமா? மறவாமல் உன்பெயர் சரியாய் மொழிந்திட     மாற்றிவிட்டாய் ஏற்றமா? மனதில்     மல்லிகைத் தேரோட்டமா? வறுமையின் நோயிலும் வாழ்க்கையின் பாயிலும்     வாடிக் கிடக்கின்றவன் - வெறும்     வார்த்தை சுமக்கின்றவன்! பிறந்ததை அன்றியோர் செய்தவறு தெரியாத     பித்தாய் அலைகின்றவன்! - உன்னைப்     பின்னால் தொடர்கின்றவன்! கடமைகள் யாதென்று கல்லாதவன் நெஞ்சைக்     கல்லாக்கி வாழ்கின்றவன் - எண்ணம்     கழுவாமல் வீழ்கின்றவன் உடமைகள் என்றிந்த போகத்தை நம்பியே     உடலோம்பி வாழ்கின்றவன் - அதற்     குத்திகள் காண்கின்றவன் மடநெஞ்சின் வார்த்தையை முழுதாக நம்பியே     மரியாதை பேர்க்கின்றவன் - மௌன     மதிவேலை அறியாதவன்! திடமான உன்னையே பற்றத் தெரிந்தவன்     தீபோல கவிசொல்பவன் - கண்ணில்     தீபமிட்டே செல்பவன்! இயல்கின்ற சக்தியாய் இருக்கின்ற தெய்வம்நீ     இருப்பதே வீணென்று நான் - உன்றன்     இசைபாட வாழ்கின்ற நான் முயல்கின்ற வினையன்றி பிறிதொன்றை அறியாமல்     மூச்சுப் பிடிக்கின்ற

சன்னிதியில் விழ வேண்டும்

Image
அறியாத சிறுவனின் புரியாத நெஞ்சினில்     அம்மைநின் ஆர்பாட்டமா? உன்றன்     அன்புக்கு நான் வாட்டமா? மறவாமல் உன்பெயர் சரியாய் மொழிந்திட     மாற்றிவிட்டாய் ஏற்றமா? மனதில்     மல்லிகைத் தேரோட்டமா? வறுமையின் நோயிலும் வாழ்க்கையின் பாயிலும்     வாடிக் கிடக்கின்றவன் - வெறும்     வார்த்தை சுமக்கின்றவன்! பிறந்ததை அன்றியோர் செய்தவறு தெரியாத     பித்தாய் அலைகின்றவன்! - உன்னைப்     பின்னால் தொடர்கின்றவன்! கடமைகள் யாதென்று கல்லாதவன் நெஞ்சைக்     கல்லாக்கி வாழ்கின்றவன் - எண்ணம்     கழுவாமல் வீழ்கின்றவன் உடமைகள் என்றிந்த போகத்தை நம்பியே     உடலோம்பி வாழ்கின்றவன் - அதற்     குத்திகள் காண்கின்றவன் மடநெஞ்சின் வார்த்தையை முழுதாக நம்பியே     மரியாதை பேர்க்கின்றவன் - மௌன     மதிவேலை அறியாதவன்! திடமான உன்னையே பற்றத் தெரிந்தவன்     தீபோல கவிசொல்பவன் - கண்ணில்     தீபமிட்டே செல்பவன்! இயல்கின்ற சக்தியாய் இருக்கின்ற தெய்வம்நீ     இருப்பதே வீணென்று நான் - உன்றன்     இசைபாட வாழ்கின்ற நான் முயல்கின்ற வினையன்றி பிறிதொன்றை அறியாமல்     மூச்சுப் ப

இலைதரும் சேதி

Image
யாதென்று தெரியாத நடுவீதி தனிலென்னை     யாரிங்கு விட்டதோ தெரியாதடி! யாழ்கொண்டு நான்பாடும் சோகத்தின் கீதத்தை     யார்காதில் கேட்பாரோ தெரியாதடி! போருக்கு மத்தியிலும் புன்முறுவல் மறவாத     போகத்தை மட்டும்நான் கேட்பேனடி புல்லாங்கு ழல்போல புயல்காற்றை நான்வாங்கிப்     புளகாங்கி தத்தோசை தருவேனடி! விழிப்பாதை வழியோடித் துளியாகும் கண்ணீரின்     விசையென்ன சூடென்ன அறியாயடி! வீணான நெஞ்சத்தில் தேனாலே பாயாசம்     விதிசெய்வ தாருக்கு? விளங்காதடி! பழித்தாலும் புகழ்ந்தாலும் பலகாலம் இகழ்ந்தாலும்     பழக்கங்கள் ஒருநாளும் மாறாதடி பரசக்தி பக்தியினில் பற்றுள்ள ஆடவனைப்     பதம்பார்க்க எவ்வாளும் முயலாதடி! அதிகார உயிர்நாடி அடிவாழ்தல் எனும்கொள்கை     ஆழமாய் நெஞ்சத்தில் பதித்தாலுமே அடிவாங்கும் போதுள்ளில் அழலாக வரும்கோபம்     அதுவாகத் தீய்ப்பதார் காண்பாரடி!? புதிர்க்காட்டின் நடுவிலொரு பூக்கூடை விற்றாலும்     புரிகின்ற தொழிலுக்குப் பயனேதடி? புறப்பட்டு மிதிபட்டு வருகின்ற இலைத்துண்டு     புறமேந்தித் தரும்சேதி எனக்காயடி!! -விவேக்பாரதி 25.02.2019

நான் வேண்டும் குழந்தை

Image
( தெருவில் விளையாடும் ஒரு குழந்தையைக் கண்டு எழுதியது. பொருத்தமான படத்தை செய்து வைத்திருந்த நண்பர் ரமேஷ் அவர்களுக்கு நன்றி.) இதைப்போல் எனக்கொரு குழந்தை வேண்டும்      இறைவனிடம் நான் வேண்டுகிறேன் புதுமைச் சிரிப்பும் புயல்போல் குறும்பும்      புரியும் மழலை வேண்டுகிறேன்!  முத்து பற்களில் முகைபோல் அவிழும்      முல்லைச் சரத்தை வேண்டுகிறேன்!  தத்தித் தத்தி விளையா டுகிற     தங்கச் சிலையை வேண்டுகிறேன்!  அம்மை சக்தி பதத்தை அவளுக்  கருகில் இருக்கும் படைகளையும்  பொம்மை போலக் கண்டு சிரிக்கும்  பொக்கிஷத்தை வேண்டுகிறேன் கொழுக்கு முளுக்கென கொஞ்சித் திரியும்      கோபுரச் சிலையை வேண்டுகிறேன்  இழுத்தும் முத்தம் கொடுக்கும் உன்றன்      இம்சைத் தனத்தை வேண்டுகிறேன்!  கூப்பிட் டாலுடன் குறும்புப் பார்வை      கொடுக்கும் உன்னை வேண்டுகிறேன்!  காப்பிட் டதனைக் காப்பேன் அழகுக்      கவிதை சூட்டி நான்மகிழ்வேன்!  சேட்டை செய்தால் ரசிப்பேன்! மழலைச்      செம்மை கண்டு கவியெடுப்பேன்  பாட்டால் அவளை அர்ச்சனை செய்வேன்      பார்த்துப் பார்த்துக் கண்மலர்வேன்! –விவேக்பாரதி  22.06.2019 

என் இசைக்கவிக்கு

இது உன் பிறந்தநாள் என்று சொல்வதா இசையுங் கவிதையும் பிறந்த தென்பதா? எதுவா கிலுமுன் எதிரே சமம்தான் அதனால் சொல்வேன் இசைக்கவி வாழ்க! பிடறி விரித்தொரு சிங்க மென்னவே பீடுறு கவிதைகள் பாடல் பற்பல கடலும் மணலும் வளியும் அதிர்ந்திடக் கர்ஜனை செய்கிற சிங்கம் அல்லவா! மறு கணத்திலோர் குழந்தை என்னவே மனம் அழிந்ததோர் ஞானி ஆகவே அற முணர்த்திடும் ஆசை சேர்த்திடும் அம்பிகை மடிப் பிள்ளை அல்லவா நகை தெறித்திடும் விகடப் பேச்சுகள் நாசுக் காயதில் நுழைத்த தத்துவம் பகை முறித்திடும் அன்பில் படைபலம் பாட்டுப் பாடும் கவிஞன் அல்லவா உனை எனக்கெனத் தந்த காளியை உலகனைத்தையுந் தந்து வாழ்த்துவேன் எனை உயர்த்திட எண்ணு வோர்களில் எப்போதும் என் அப்பன் அல்லவா! கலைமா மணியே கவிதைப் புயலே ககனம் அதிர இசைக்குங் குயிலே இலைநான் சருகென நினைக்கா தென்னை இதயக் கூட்டில் வைத்த மரமே! பரா சக்தியின் ஆனந்தக் காட்சி பாரோர்க் கெல்லான் அன்பின் கூட்டு தரா தலத்தையே அசைக்கும் பாட்டு தண்மை மாறா உண்மை நெஞ்சம் யாவும் இப்போ திருக்கிற தைப்போல் யாண்டும் கொண்டு யவ்வணம் கண்டு மேவும் வசந்தம் எய்தி வாழ்க! மேலோர் விண்ணோர் மலர்தூ விடவே!! -விவேக்பாரதி 30.03.2019

என் இசைக்கவிக்கு

Image
இது உன் பிறந்தநாள் என்று சொல்வதா இசையுங் கவிதையும் பிறந்த தென்பதா? எதுவா கிலுமுன் எதிரே சமம்தான் அதனால் சொல்வேன் இசைக்கவி வாழ்க! பிடறி விரித்தொரு சிங்க மென்னவே பீடுறு கவிதைகள் பாடல் பற்பல கடலும் மணலும் வளியும் அதிர்ந்திடக் கர்ஜனை செய்கிற சிங்கம் அல்லவா! மறு கணத்திலோர் குழந்தை என்னவே மனம் அழிந்ததோர் ஞானி ஆகவே அற முணர்த்திடும் ஆசை சேர்த்திடும் அம்பிகை மடிப் பிள்ளை அல்லவா நகை தெறித்திடும் விகடப் பேச்சுகள் நாசுக் காயதில் நுழைத்த தத்துவம் பகை முறித்திடும் அன்பில் படைபலம் பாட்டுப் பாடும் கவிஞன் அல்லவா உனை எனக்கெனத் தந்த காளியை உலகனைத்தையுந் தந்து வாழ்த்துவேன் எனை உயர்த்திட எண்ணு வோர்களில் எப்போதும் என் அப்பன் அல்லவா! கலைமா மணியே கவிதைப் புயலே ககனம் அதிர இசைக்குங் குயிலே இலைநான் சருகென நினைக்கா தென்னை இதயக் கூட்டில் வைத்த மரமே! பரா சக்தியின் ஆனந்தக் காட்சி பாரோர்க் கெல்லான் அன்பின் கூட்டு தரா தலத்தையே அசைக்கும் பாட்டு தண்மை மாறா உண்மை நெஞ்சம் யாவும் இப்போ திருக்கிற தைப்போல் யாண்டும் கொண்டு யவ்வணம் கண்டு மேவும் வசந்தம் எய்தி வாழ்க! மேலோர் விண்ணோர் மலர்தூ

பூப்போல விடியுதடி

Image
– மெல்ல மெல்ல விடிவதைப் பார்த்துக் கொண்டே பாடிய பாட்டு - பொரண்டு பொரண்டு படுக்குதடி மனது  ஒரு பூப்போல விடியுதடி பொழுது!  மலைமேல சாரல்விழ  எதிர்த்தபக்கம் வெயிலடிக்க  வானவில்லா மொளச்சதடி வளவு  வண்ணவண்ணமா தெரியுதடி கனவு!  கருத்தமேகம் வானச்சுத்தி படர!  அது கக்கும் மின்னல் இடியக்கேட்டு மெரள! வெளுத்திருக்கும் ரெக்கைகள  வேகமாக அசைச்சிக்கிட்டு  கிழிச்சிக்கிட்டு போகுதுபார் பறவ அதப் பார்க்கப் பார்க்க தீர்ந்துபோச்சு கவல!  மரக்கிளையும் காத்துலகை ஆட்ட! அந்த மஞ்சக்குருவி கூட்டுலதான் ஓட்ட  சின்னச்சின்னக் குஞ்சுங்கல்லாம்  தலை ஒசத்தி வானத்துல பறந்துபோக ஆசப்பட்டு பார்க்க  தாய்க்குருவி சத்தம்மட்டும் கேட்க!  அல்லிப்பூவு கொளமுழுக்க மணக்க,  அங்கவொரு கொக்குதவம் கெடக்க  குட்டிக்குட்டி மீனுங்கதான்  அல்லிபூவில் ஒளிஞ்சுக்கிட்டு  மேல அந்தக் கொக்கப்ப்பார்த்து சிரிக்க  பெரியமீனு தண்ணியில் வெலவெலக்க!  கெழக்கப்பார்த்து ஒழைக்கப்போகும் மக்கா  இந்த மனுசப்பய ஒடம்புஒரு சொக்கா  முடிஞ்சமட்டும் காத்துக்கிட்டு  முடியும்போது கழட்டிப்போட்டு  போகுறதே தான்நமக்கு வாழ்க்க  இதுல போட்டியெல்லாம் எனக்கத்துக்கு சேர்க்க?  -விவேக்பாரதி  1