பூப்போல விடியுதடி


– மெல்ல மெல்ல விடிவதைப் பார்த்துக் கொண்டே பாடிய பாட்டு -

பொரண்டு பொரண்டு படுக்குதடி மனது 
ஒரு பூப்போல விடியுதடி பொழுது! 
மலைமேல சாரல்விழ 
எதிர்த்தபக்கம் வெயிலடிக்க 
வானவில்லா மொளச்சதடி வளவு 
வண்ணவண்ணமா தெரியுதடி கனவு! 

கருத்தமேகம் வானச்சுத்தி படர! 
அது கக்கும் மின்னல் இடியக்கேட்டு மெரள!
வெளுத்திருக்கும் ரெக்கைகள 
வேகமாக அசைச்சிக்கிட்டு 
கிழிச்சிக்கிட்டு போகுதுபார் பறவ
அதப் பார்க்கப் பார்க்க தீர்ந்துபோச்சு கவல! 

மரக்கிளையும் காத்துலகை ஆட்ட!
அந்த மஞ்சக்குருவி கூட்டுலதான் ஓட்ட 
சின்னச்சின்னக் குஞ்சுங்கல்லாம் 
தலை ஒசத்தி வானத்துல
பறந்துபோக ஆசப்பட்டு பார்க்க 
தாய்க்குருவி சத்தம்மட்டும் கேட்க! 

அல்லிப்பூவு கொளமுழுக்க மணக்க, 
அங்கவொரு கொக்குதவம் கெடக்க 
குட்டிக்குட்டி மீனுங்கதான் 
அல்லிபூவில் ஒளிஞ்சுக்கிட்டு 
மேல அந்தக் கொக்கப்ப்பார்த்து சிரிக்க 
பெரியமீனு தண்ணியில் வெலவெலக்க! 

கெழக்கப்பார்த்து ஒழைக்கப்போகும் மக்கா 
இந்த மனுசப்பய ஒடம்புஒரு சொக்கா 
முடிஞ்சமட்டும் காத்துக்கிட்டு 
முடியும்போது கழட்டிப்போட்டு 
போகுறதே தான்நமக்கு வாழ்க்க 
இதுல போட்டியெல்லாம் எனக்கத்துக்கு சேர்க்க? 

-விவேக்பாரதி 
17.06.2019

Comments