காதல் பைத்தியம்நீ போகும் சாலையில்
நிலவை மெழுகிப்
பாதை அமைக்கிறேன்
ஒளிரும் ஒவ்வொரு தடமும்
உன் பாதச் சுவடாக!

நீ உணரும் தென்றலில்
மலரைக் குழைத்து
சாந்து சமைக்கிறேன்!
உன் ஒவ்வொரு மணத்தையும்
மலர்கள் வாங்கிக் கொள்வதாக!

அப்படித் திரும்பிப் பார்க்காதே!
உயிர் ஒருகணம் ஆண்டவனாகிறது!
மனம் ஒருகணம் யாசகனாகிறது!
உடல் ஒருகணம் மிருகமாகிறது!
காதல் ஒருகணம் பைத்தியமாகிறது!!

-விவேக்பாரதி
22.07.2019

Comments

பிரபலமான பதிவுகள்