காதல் நிமிடம்...எந்த ஒரு கணத்தில்
இந்த மழைத் துளிகள்
இதயம் திறந்து
விதையில் விழுந்து
கதைகள் எழுகிறதோ!

இந்தத் தருணமென
மலர்கள் விரிகிறதை
அளந்து சொல்லும்
வழியும் உலகில்
அடங்கிக் கிடக்கிறதோ?

அதனைப் போலே
உன்னுடன் நான்
இணைந்த தருணமடி!
நீயும் நானும்
நாமாய் ஆகி
கலந்த நிமிடமடி!!

-விவேக்பாரதி 
28.06.2019

Comments

Popular posts from this blog

மரகதப் பஞ்சகம்

மாதங்களில் அவள் மார்கழி

கவிதை ஆண்டாள் - 1