நகைச்சுவை நானூறு - ஐம்பது பைசா
அன்றொருநாள் பழம்வாங்க இனியன் சென்றான்
    அங்கிருந்த கடைக்காரர் ஒருப ழத்தை
இன்றுமுதல் இரண்டுருபாய் என்று சொன்னார்
    இனியனதைக் கேட்டவுடன் பேரம் பேசி
ஒன்றரைரூ பாய்க்கிதனைத் தாரும் என்றான்
    ஒன்றரைரூ பாய்க்குத்தோல் மட்டும் என்றார்
நன்றந்த ஐம்பதுபை சாப்ப ழத்தை
    நமக்கிங்கு தந்திடுக எனக்கேட் டானே!!


-விவேக்பாரதி
09.05.2019

Comments