நகைச்சுவை நானூறு - என்ன வெயில்...
மதியம் சரியாய்ப் பன்னிரண்டு - வெயில்
    மண்டை பிளக்கும் ஒருவேளை!
கொதிக்கும் வெப்பம் நீங்கிடவே - நான்
    குளிர்பா னக்கடை சென்றிருந்தேன்!
அதற்குள் பார்த்தால் பெருங்கூட்டம் - உள்
    அமரக் கூட இடமில்லை,
விதியே என்று தனித்தவன்நான் - உள்
    வீற்றிருந் தவர்கள் காதலர்கள்!


உடனே என்றன் கைப்பேசி - தனில்
    உரத்த குரலில் "டேய்!மச்சான்
கடையில் உன்னாள் இன்னொருத்தன் - சேர்ந்த
    காட்சி கண்டேன்" எனச்சொன்னேன்
உடனே காலி ஐந்திருக்கை - இடம்
    ஒதுங்கக் கண்டேன்! மனதுக்குள்
அடடா என்ன வெயிலென்று - நான்
    அமர்ந்தேன் ஜூஸும் குடித்தேனே!!

-விவேக்பாரதி
07.05.2019

Comments

Popular Posts