அன்பு விஜய் ப்ரகாஷுக்குப் பிறந்தநாள்
அன்புள்ள விஜய் பிரகாஷ்க்கு...

 கனவு காணத் தெரிந்தவன்!
கண்ணீரையும்
கவிதையாக்கத் தெரிந்தவன்!

தன் நீள வாட்ட
முடியின் அசைவுகளில்
நம்மை நிறுத்திப்போடத்
தெரிந்தவன்!

எப்போதும்
சிரிப்புக்கு உறவானவன்!
உருண்டு புரண்டு
இசைகேட்பவன்!

ஓரமாக அமர்ந்து
சிந்திக்கும் ஸீன் போடத்
தெரியாத சமகால எழுத்தாளன்!

தவறாமல் வானம் ரசிப்பவன்!
தரைமீது தேவதைகளைப் பார்ப்பவன்!
வாசித்தலில் மூச்சு விடுபவன்!
சினிமா டேப்புகளில் இதயம் வைத்தவன்!

"ஏமாற்றம் என்னைப் பாதிக்காது
ஏனென்றால் என் பாதை
எனக்கானது மட்டுமே"
என்று எனக்குக் கற்றுக் கொடுத்தவன்!

ஆள் பார்க்காமல் காதலிப்பவன்!
அளவு பார்க்காமல் அன்பு செய்பவன்!
நிறைய பேசுபவன்! நிறைவாய்!

இன்று பிறந்தநாள் கொண்டாடும்
எங்கள் விஜய்!
பச்சைகளின் காதலன்!
பிங்க் சுடிதார்களின் ரசிகன்!
உலக சினிமா வெறியன்!
உள்ளூர்ச் சினிமாக்காரன்!

விஜய்!
உனக்கான வாழ்த்தை
கைப்பட எழுதவில்லை!
பச்சை மை கிடைக்க
நான் என்ன பள்ளி பிரின்ஸிபாலா?
அல்ல மாவட்டக் கலெக்டரா?

நீ நிறைய எழுத வேண்டும்!
உனக்கான பேனாவில்
இனி உணர்ச்சிகளோடு
உலகம் பிறக்கட்டும்!

கணப்பொழுதும்
உன் காதல் மனம்
குறையாமல் காதலிக்கட்டும்!
நீ நம்பும் எதுவும்
உன்னை நிம்மதியாய் வைக்கட்டும்!
சின்ன சறுக்கல்கள்
உனக்கு நிமிரக் கற்று கொடுக்கட்டும்!

உன் கவிதைகளுக்காக
சில கிளியோபாட்ராக்கள் கிடைக்கட்டும்!
உன் வாஞ்சை முத்தம்,
வழக்கம்போல அடை மழையாய்ப் பொழியட்டும்!

என் பராசக்தி
உன் இச்சைகளைக் காக்கட்டும்!
வாழ்க!

அன்பன்
விவேக்பாரதி
12.05.2019

Comments