நகைச்சுவை நானூறு - பாவங்கள்

மருந்துக் கடைக்குத் தமிழா சிரியர்
மருந்தைத் தமக்காய் வாங்கச் சென்றார்!
"என்பா வங்கள் எறியும் மருந்தை
உண்பேன் தந்தே உதவுக” என்றார்!
மருந்துக் காரர் மதியால் குழம்பித்
திருந்தச் சொல்க ஐயா என்றதும்
ஆங்கில மெனக்கோ அறவே பிடிக்கா(து)
ஈங்கென் செய்யச் சொல்லித் தொலைக்கிறேன்
"எறித்ரோ மைசின்" என்றார்
மருந்துக் காரர் மல்லாந் தாரே!!


என் பாவங்கள் எறியும் மருந்து - எறி throw my sin.

-விவேக்பாரதி
08.05.2019

Comments