பாருக்கெல்லாம் குரு பாரதநாடு

பாரத நாடுஇந்தப்
பாரினுக்கே குருவாய் உயர் நாடு

மந்திரம் போலே வந்தே மாதரம்
வந்து நிறைந்த நாடு
வானவர் ஞானியர் தெய்வங்கள் யாவும்
வாழ்ந்து புகழ்ந்த நாடு

சந்ததி கோடி சுகமாய் வாழ!
சுதந்திரம் வாங்கிய நாடுஎங்கள்
தாய்த்திரு நாடு என்பதைப் பாடு
தாராளமாகக் கொண்டாடு!

உலகம் வியக்கும் உன்னத ஞானம்
ஓங்கி வளர்ந்த நாடு
உண்மை வெல்லும் என்னும் தருமம்
ஊற்றி வளர்த்த நன்னாடு

கலை, பண்பாடு மொழிகள் நூறு
காட்சி ஒன்றே நம் நாடு! – இன்று
காஷ்மீர் என்னும் திலகம் அணிந்ததைக்
கம்பீரமாக நீ பாடு!!

-விவேக்பாரதி
15.08.2019

Comments

Popular Posts