கிரேஸி மோகன் காலமானார்.

மதிப்புக்குரிய கிரேஸிமோகன் காலமானார்.

கிரேஸிமோகன் சாருடன் எனக்கிருந்த நட்பு, நிறய இரவு நாங்கள் பேசிய சினிமா அனுபவங்கள், என்னைக் கதை எழுதச் சொல்லி அவர் சொன்ன ஊக்கங்கள் எல்லாம் கண்முன் நிழலாடுகின்றன. "இன்றைக்கு ஏன் அழைக்கவில்லை" என்று செல்லமாக கோபிப்பார். 

அவரது வெண்பாக்களைப் படித்து அவருக்கு நான் (அவர் பாணியிலேயே) எழுதிய வெண்பாக்களை இங்கே பகிர்கிறேன்! 

அன்னாரது ஆத்மா நித்யமும் கண்ணன் திருவடிகளில் சேர்ந்திருக்கட்டும்!
#Crazyவெண்பா

Crazyவெண் பாவால் கிளர்ச்சியுற்றேன் வாக்கில்
ராசியான கண்ணா ரதத்தில் - Easyஆய்
பார்த்தனுக்குக் கீதை பகர்ந்தவா என்பதிலைச்
சேர்க்க Crazyயிடம் சென்று !

யாப்பில் அவனெழுத்து யாவையும் நான்வாழ்த்தப்
Paperபற் றாது பெருமாளே - Topஆக
வெண்பா எழுதுகின்ற வேந்தன் Crazyயிடம்
நண்பனெனென் றேன்வாழ்த்தை நல்கு !

Choclate கிருஷ்ணாவைச் சத்தோடு காத்திடவே
வாக்குள் துதித்தான் வணங்கிநின்றான் - Jokeஆய்க்
Crazyயின் காதருகே கேசவனே நீசென்று
வாசிப்பாய் என்வெண்பா வாழ்த்து !

மதுரைவாழ் மீனாள் மணநிகழ்வைப் பாவில்
புதுமையாய்ச் சொல்லிப் புகழ்ந்தான் - அதிவேக
மாக உரைப்பேசும் மாதவன் அண்ணனிடம்
வேகமாய்ச் சொல்லென்றன் வாழ்த்து!

"கேசவ்"வின் வண்ணத்தில் வாசஞ்செய் வேங்கடவா
பாசக் Crazyநின்  பக்தன்நான் - வாசிக்க
Easyயாய் வெண்பா இயற்றுகிறான் என்றேநான்
பேசியத்தைக் காதில்சொல் போ!

Jokeஆன வெண்பாக்கள் ஷோக்காக ஆக்கிவிடும்
நேக்கான மோகனிவன் நேர்த்தியினைப் - Bakeஆகா
சின்ன Breadநான் சிந்திடும் வாழ்த்தைநீ
சொன்னாலே போதும்போய்ச் சொல்!

Drama நடித்ததற்காய் தாரணி யேபோற்றி
பூமாரி வந்து பொழிந்திருக்கும் - ராமாசொல்
என்வாழ்த்(து) அனைத்தும் எழிலான பாத்திறத்தின்
வன்மைக் கெனநீ வழங்கு!

கமர்கட்டைத் தந்து கணநாதன் காதில்
தமிழ்க்கேட்ட நல்ல தமிழன் - குமரனின்
சம்பவம் சொன்னான் சகம்காக்கும் கண்ணாநீ
நம்கிரேஸி மோகனை வாழ்த்து!!

-27.06.2016

படத்தில் அவர் எனக்கு அனுப்பிய அறிவுரை!

Comments

Popular Posts