என் நினைவுடன்
நீ செல்லும் பயணங்களின்
தருணங்களில்
உனக்காக இங்கே
என் உலையில் கொஞ்சம்
கவிதை சமைந்து கொண்டிருக்கும்!
உனக்கு விக்கலெடுத்தால்
ஏக்க உப்பு
சேர்க்கப்பட்டதாய் அர்த்தம்!
இருமினால்
ஊடல் காரம்
கூடுதல் என்று பொருள்!
புன்னகை தோன்றினால்,
காதல் இனிப்பைக்
கலந்திருக்கிறேன் என்று தெரிந்துகொள்!
கண்ணே
நீ என் நினைவோடு
பயணப்பட்டுக்கொண்டே இரு
நான் நிரந்தர சமையல்காரனாகவே
வாழ ஆசைப்படுகிறேன்!!
-விவேக்பாரதி
27.06.2019
Comments
Post a Comment