மழை வேண்டி...வாட்டிடும் பஞ்சம் வதங்கிடும் மக்கள் வருத்தமுற்று
நீட்டிடும் கூக்குரல் நின்செவிக் கேறா நிலைவருமோ?
மீட்டிநின் கைகளின் மென்னகக் கீரலில் மின்படைத்து
ஓட்டுக பேரிடி ஓங்குக மாரிநம் ஊருக்குள்ளே!!

-விவேக்பாரதி
18.06.2019

Comments

Popular Posts