கடைசி ஆசைநான் எழுதிக் கொண்டிருக்கும்
பேனாவே!
நீ துணைவர வேண்டும்
நான் எரியும் போது... 


கீழே விழுந்து
உடைபட்டாலும்,
மை இல்லாமல்
தடைபட்டாலும்,
எழுத்தில் சிக்கி
இறக்கும் போது
நீ!
துணைவர வேண்டும்!

பழைய வழக்கம் என
மாற்றிவிட்டாலும்,
பழுது பட்டாய் எனத்
தூற்றி விட்டாலும்,
மழைக்காலம் தீர்ந்தபின்
இலையில் தோன்றும் சலனமாய்
நீ!
துணைவர வேண்டும்!

எங்கே...
இங்கு கடைசி ஆசை
நிறைவேற்றப்படும் என்றார்களே!
நான் எழுத வைத்திருக்கும் பேனாவை
என்னோடு போட்டு
எரித்து விடுங்கள்!

கந்தர்வலோகம்,
எங்களுக்காகக் காகிதங்களுடன்
காத்திருக்கிறது!!

-விவேக்பாரதி
09.05.2019

Comments

Popular Posts