சாரதை தாள்

'பாரதி யார்?' நாடகத்துக்காக சென்றிருந்த ராஜபாளையத்தில் அற்புதமான சாரதை கோவிலைத் தரிசித்தோம். பொற்சிலை மேனி, கண்ணீர் மல்கக் கண்டுவந்த காட்சியைச் சுதன் அண்ணனின் ஓவியம் நினைவுறுத்த கவிதை மல்க மீண்டும் பார்க்கின்றேன்... கண்விட் டகலாக் கலைவதனம்! பிள்ளைமன
மண்விட் டகலா மலர்பாதம் - பொன்விட்ட
பேரெழில் மேனிப் பெருமாட்டி யாமெங்கள்
சாரதை தாளே சரண்!

-விவேக்பாரதி
10.07.2019

படம்: Sudhan Kalidas

Comments

Popular Posts