உருகுதலும் உடைதலும்

 


தனதன தானா தனதன தானா
தனதன தானா தனதானா


ஒருதின மேநீ பிரிகிற போதே
உயிர்வரை யேதோ சதிர்நேரும்

உலகுறு நாளோ நரகிடை தீயோ
டுலவிடு நாளா யுறுமாறும்

பருவமு மாகா அனலிடை யேபூ
படுகிற சோகா டவிகாணும்

பகலிர வாநீ வருவதை யேநா
பழகிட வேபா வினிலோதும்

அரியவ ளேபா லிதழழ கேநீ
அழகிய தீவே யெனநாளும்

அடியடி யாயோர் வரிவடி வோடே
அழுதிட லாமா மெளிதாகும்

உரியவ ளேநா னுடையுகி றேனோ
ருரிமையி னாலே தொடுவாழ்வேன்

உனையெணி யேநா னுருகுகி றேனே
உடனடி யாய்வா உரைவேனே!!

-விவேக்பாரதி
30.07.2019

Comments

Popular posts from this blog

மரகதப் பஞ்சகம்

மாதங்களில் அவள் மார்கழி

கவிதை ஆண்டாள் - 1