வருக வருக வருக
வருக வருக வருக - நீ
வருக வருக வருக!

மலரில் தவழும் தென்றல் போல
வருக வருக வருக!
மனதில் பாயும் மின்னல் போல
வருக வருக வருக
புலர்வில் தெரியும் வெண்ணிலவாய் நீ
வருக வருக வருக
புல்லாங்குழலின் மெல்லிசையாய் நீ
வருக வருக வருக

நீ வந்தாலே பொதும்
நிழல் பாராட்டும் மேகம்
தீ எனை விட்டுப் போகும்
திசை தீபங்கள் ஆகும்!

வாசலை என் வாசலை - உன் 
வரவுக்காக திறக்கின்றேன் 
நேசத்தில் புது நேசத்தில் - நிறம் 
நெளியும் கோலம் இடுகின்றேன் 
ஆசையே என் ஆசையே - உன் 
அரும்புப் பாதம் உள் வருக! 
தேசமே என் தெய்வமே - உன் 
தேர்விட் டிறங்கி நீ வருக! 

வருக வருக வருக! 

காதலில் ஒரு காதலில் - என் 
கவிதை யாவும் வைக்கின்றேன் 
ஆதலால் அவை பார்த்திட - தனி 
அன்பைக் கொண்டு நீ வருக! 
போதுமே இது போதுமே - நான் 
பொய்மை சூழக் கிடக்கின்றேன்! 
பாதமே உன் பாதமே! - மனம் 
பாரா திங்கு தவிக்கின்றேன்! 

வருக வருக வருக! 

பாடல்:
 
-விவேக்பாரதி 
03.08.2019
படம்: Namaste art print by Ann Loyd

Comments

Popular Posts