அதிகாலை நிலவு

விருதுநகருக்கு இரயிலில் பயணித்துக் கொண்டிருக்கிறேன். எழுப்பி விடுகிறது இந்தப் பாட்டு, அதுசரி காலையில் நமக்கென்ன வேலை.... அதிகாலை வேளை நிலவே
அதிகாரமாகும் கதிரே
விடியாத போது செவியோடு மோதி
விளையாடும் மாயக் குயிலே
பின்பு பூவில் தூங்கும் வெயிலே!

உன் பார்வை ஒன்று
அதை ஜீவன் உண்டு
பல கோடி வருடம் வளரும்!
அது பாடலாகி
அதில் சேதியாகி
புதுப் பாவ ராகம் பழகும்!

இசை காதலாகும் தருணம்
இனிதான நாட்கள் நிகழும்
இது போதும் போதுமென
நாளும் பாடும் சுகம்
வேண்டும் வேண்டும் இதயம்!

(அதிகாலை)

இது பழைய வானம்
இது புதிய வானம்
எனும் பேதம் எதிலும் இல்லை!
மலை நதிகள் யாவும்
மிகப் பழைமை தானெனினும்
ரசனை அழிவதில்லை!

ஒரு பழைமை என்பதில்லை
விழி புதுமை காணும் எல்லை
இதில் அழகும் ஏது எனத்
தேடும் மனது,
ஒரு மழலை அணிந்த பிள்ளை!!

(அதிகாலை)

-விவேக்பாரதி
04.07.2019

Comments