காகித மின்சாரம்காகித மின்சாரம் - அதுதான்
   கவிதைகளின் சாரம்
ஆகி வளர்ந்த படைப்பா ளிக்கோ
   அன்மா ஆதாரம்!

காலக் கோட்பாடு - கவிதை
   கனலின் மலைப்பாடு
ஜாலம் செய்யும் சந்தம் போல
   ஜாதகம் கிடையாது

முகிலில் துளிர்க்கின்ற - மின்னல்
   மூளையில் பிறக்கையிலே
அகத்தில் கவிதை அனலாய்ப் பொறியும்
   அதுபோல் சுகமேது?

அடடா கவிதைவரும் - என்றே
   ஆனந்தம் மனதில்
குடையோ குடையென நெஞ்சைக் குடையும்
   குறித்தால் அதுகவிதை! எனவே
   கொடுப்போம் உயிர்க்கவிதை....

படம் : Secret of electricity by Judy wise

-விவேக்பாரதி 
09.09.2018

Comments

Popular Posts