ஞாபகங்கள்ஞாபகங்களே வணக்கம்
நல்ல உறவுதான் நமக்கும்!

உன்னை எடுத்து உடுத்த உடுத்த
என்னைக் கண்டேன் நான்!
என்னை யாரென்று இயம்பத்தானோ
உன்னைக் கொண்டேன் நான்?
தன்னை யாரென்று அறிவதைத்தானே
ஞாபகம் என்கின்றார்
உன்னை எனக்குக் கொடுத்தவனுக்கு உன்
ஞாபகம் இருக்குறதா?

ஒரு கணத்திலே மன வனத்துளே
அனைத்தும் காண்பதாய்
மறு கணத்திலே ஒரு சொடுக்கிலே
மரிந்து போவதாய்
சில தினங்களைத் திரை அடுக்கிலே
காட்டிச் செல்கின்றாய்
உனை எடுத்ததார்? இங்கு விடுத்ததார்?
ஏங்க வைக்கின்றாய்!

நீயும் நானும் எப்படிச் சேர்ந்தோம்?
விஞ்ஞானம் என்பார்!
நீயே நானாம்! நானோ இறையாம்!
மெய்ஞானம் என்பார்!
தீயாம் தீக்குள் தலைமுடி எல்லாம்
சொல்லுதல் சாத்தியமோ?
ஓயாது அலையும் காற்றில் அடிமுடி
வகுத்தல் நடந்திடுமோ?

ப்-விவேக்பாரதி
24.07.2018

Comments

Popular posts from this blog

மரகதப் பஞ்சகம்

கவிதை ஆண்டாள் - 1

மாதங்களில் அவள் மார்கழி