ஆசிரியர் தினம்கல்லைச் செதுக்கும் கவினுளியாய்! நம்மிருளின் 
அல்லல் அகற்றும் அகல்விளக்காய் - எல்லையறு 
பேரறிவின் பிம்பமாய்ப் பேணவந்த ஆசிரியர் 
சீரடி எண்ணல் திறம்! 

திறமை எவர்பக்கம் திட்டமிட் டுக்கண்(டு)
அறிவைத் தருபவர் ஆசான் - பறவைக்கு
வானாசான் மீனுக்கு நீராசான் நல்லிறையே
தானாசான் மானிடர்க் கு!

-விவேக்பாரதி 

05.09.2019

படம் - நன்றி தினமலர் பட்டம். 

Comments

Popular Posts