வானகத்துத் தேவரெலாம் | மணிப்பாவை


வானகத்துத் தேவரெலாம் வந்தேத்தும் ஐயப்பன் 
கானகத்துக் கோயிலைக் காணும் விரதத்தில் 
பானகமும் நல்ல பழமும் நிவேதனமாய்
தானஞ்செய் தர்மத்தும் சத்திய கர்மத்தும் 
கானத்தும் ஐயனைக் காணுதல் பேரின்பம்! 
ஞானகுரு சாமிசொன்னார் நங்காய் விழிதிறந்
தேனின்னும் பள்ளி எழவில்லை? காலையிலே 
மோனந்தீர் கோஷம் முழங்கேலோ ரெம்பாவாய்! (3)

கருத்து: 

வானத்தின் அகத்தில் வாழும் முப்பத்து முக்கோடி தேவர்களும் வந்து வணங்கித் துதிக்கும் ஐயப்பனின் காட்டுக் கோயிலைக் காண நாம் விரதம் இருக்கிறோம் அல்லவா! இந்த விரத பூஜைக் காலத்தில் பானகமும் பழங்களும் ஐயப்பனுக்கு வழக்கப்பட்டு நமக்கும் நிவேதனமாய்க் கிடைக்கின்றது. இந்த நிவேதனத்தோடு சேர்த்து சிறந்த தானமான நிதானமும், சிறந்த கர்மமமான சத்தியமும், சிறந்த சந்தோஷமான கானமும் நமக்க் ஐயப்பனையே காட்டுமாம்! அது நமக்குப் பேரின்பம் சேர்க்குமாம்! 

இதையெல்லாம் நம் குருசாமி என்னிடம் சொன்னாரடி! நீ மட்டும் ஏன் இன்னும் துயிலெழவில்லை? உன் மௌனம் தீர்க! காலையில் ஐயப்பன் சரண கோஷத்தை முழங்கிடுவோம் என் பாவையே! 

-விவேக்பாரதி
19.12.2019

Comments

Popular posts from this blog

கவிதை ஆண்டாள் - 1

மரகதப் பஞ்சகம்

மாதங்களில் அவள் மார்கழி