பாடுவோம் ஏசு நாமம்


ஆடுபோல் இருந்த மக்கள்
   அறிவினில் விழிப்பைக் கொள்ளப்
பாடுகள் நீங்கிப் போகப்
   பரமனின் மகன் பிறந்தான்!

பாடுவோம் ஏசு நாமம்
   பழகுவோம் அன்பு நாதம்!
சூடுவோம் தியாக உள்ளம்
   சுகமெலாம் வாய்க்கும் வாறே!

தொழுவினில் விண்மீன் ஒன்று
   தோன்றிய சேதி கேட்டு
முழுதுமாய் உலகில் இன்பம்
   மூண்டதும் இந்த நாளாம்!

பாடுவோம் ஏசு நாமம்
   பழகுவோம் அன்பு நாதம்!
சூடுவோம் தியாக உள்ளம்
   சுகமெலாம் வாய்க்கும் வாறே!

போதனை சிறுவன் செய்ய
   புறமெலாம் வியந்து பார்த்துச்
சாதனை என்று பின்னால்
   தொடரவே வந்த நாளாம்!

பாடுவோம் ஏசு நாமம்
   பழகுவோம் அன்பு நாதம்!
சூடுவோம் தியாக உள்ளம்
   சுகமெலாம் வாய்க்கும் வாறே!

பாவிகள் புண்ணியத்தைப்
   பார்த்திடப் பரமன் தாளில்
ஆவிதீர் பொழுதும் வேண்டும்
   அன்புளம் வந்த நாளாம்!

பாடுவோம் ஏசு நாமம்
   பழகுவோம் அன்பு நாதம்!
சூடுவோம் தியாக உள்ளம்
   சுகமெலாம் வாய்க்கும் வாறே!!

-விவேக்பாரதி 
25.12.2019

Comments

Popular Posts