கதாபாத்திரங்களை இதயத்திலிருந்து படைக்கிறேன்

“சாகித்ய அகாதமி விருது என்பது இலக்கியத்துக்காக மத்திய அரசால் வழங்கப்படும் உயரிய விருது. இது எனக்குக் கிடைத்திருப்பது மிகுந்த மகிழ்ச்சிக்குரியது. நான் மனப்பூர்வமாக ஏற்றுக்கொள்கிறேன்” என்று கூறுகிறார் இந்த வருடத்துக்கான சாகித்ய அகாதமி விருதுபெற்ற ‘சூல்’ நாவலின் ஆசிரியர் சோ. தர்மன். முழுநேர எழுத்தாளராகவும் பகுதிநேர விவசாயியாகவும் வாழ்ந்துகொண்டிருக்கும் தர்மன், “எங்கள் பகுதியில் இன்னும் சில தினங்களில் பிள்ளை பெறவிருக்கும் நிறைமாதக் கர்ப்பிணியை ‘நிறைசூலி’ என்று சொல்வது வழக்கம். பருத்தி எடுக்கும் வேலைக்கு வரும் அப்படிப்பட்ட நிறைசூலிகளுக்கு, வயிற்றில் இருக்கும் குழந்தைக்கும் சேர்த்துக் கூலி கொடுப்பார்கள். இன்னொரு உயிரை உலகத்தில் பிரசவிக்க விருக்கும் பெண்ணுக்கு இத்தனை மரியாதைகளைச் செய்யும் சமூகத்திலிருந்து வந்த எனக்கு, கண்மாய்கள் நிறைசூலிகளாகத் தெரிகின்றன. கண்மாய், எத் தனை நீர்வாழ் உயிரினங்களையும், பூச்சிகளையும், பறவைகளையும் உற்பத்தி செய்யும் சூலாக இருக்கிறது என்பது என்னுடைய பார்வை. நான் விவசாயி என்பதால் எங்கள் ஊரில் சில காலம் முன்பு ஏற்பட்ட தண்ணீர்ப் பஞ்சம் என்னை ஆராய்ச்சி செய்ய வைத்தது. மன்னர்களும், ஜமீன்தார்களும் நீர்நிலை மேலாண்மை எப்படிச் செய்தார்கள் என்று ஆராய்ந்து அதில் கிடைத்த அனுபவங்களே ‘சூல்’ நாவல் எழுதத் தூண்டிய விஷயம்” என்கிறார். “வருடத்திற்கு இத்தனை என்று கணக்கு வைத்து எழுத இது உற்பத்தி அல்ல, படைப்பு. நான் படைப்பாளன். என்னுடைய நாவல்கள் வரிசையைப் பார்த்தால் 1996, 2006, 2016 என்ற பத்தாண்டு இடைவெளி சீராக இருக்கும். தனிப்பட்ட காரணம் இல்லை, நான் எனக்குக் கிடைக்கும் தகவல்களைக் கோபுரம்போல் அடுக்கிக் குவிப்பதில்லை. பொறுமையாக என் கற்பனை களுடன் நெசவு செய்கிறேன். கோபுரங்கள் சரியலாம், ஆனால் நெசவுக்கு எப் போதும் உறுதி உண்டு” என்பதுதான் தன் படைப்புகளின் இடைவெளிக்கான காரணம் என்று சொல்லும் சோ. தர்மன், இன்றைய எழுத்தாளர்களுக்குச் சொல்ல விரும்புவது, “அவசரப்படாதீர்கள்! காலம் வரும்! நாவலில் கதாபாத்திரங்கள் உயிரோட்டமாகப் பேச வேண்டும். பேசாத தளங்களைப் பேச ரிஸ்க் எடுக்க வேண்டும். சூழல் மிகவும் முக்கியமான விஷயம். இயற்கையையும், இடம் சார்ந்த பாரம்பரியத்தையும் எழுத்தில் பதிவு செய்ய வேண்டும். வரலாற்றுச் செய்திகளில் கற்பனை இழையோட வேண்டும். கதையின் கதாபாத்திரங்கள் மூளையிலிருந்து பிறக்கின்றன என்பார்கள், நான் என் கதாபாத்திரங்களை இதயத்திலிருந்து படைக்கிறேன். இப்போது ஒரு மெகா நாவலை எழுத, தகவல்களைத் திரட்டிக் கொண்டிருக்கிறேன். அது நான் பணி செய்த கருமுத்து தியாகராஜ செட்டியார் பஞ்சாலையின் நூறாண்டு கால வரலாற்றைத் தழுவியது. நிறைய சுவாரஸ்ய மான கதைகளும் காட்சிகளும் எங்கள் ஆலையில் நிகழ்ந்திருக்கின்றன. இது வரை யாரும் நெசவு தொழிற்சாலைகளின் கதையைப் பதிவு செய்தது கிடை யாது. அதனால் இந்த நாவலை இரண்டு தொகுதிகளாக எழுதி வெளியிடத் திட்டமிட்டிருக்கிறேன்.”

-05.01.2019 கல்கி புத்தாண்டு சிறப்பிதழில் வெளியான கட்டுரை-

Comments

Popular Posts