அன்பன் அப்பன் ஆதிசிவன்

-இன்று பிரதோஷம்- உள்ளும் புறமும் ஆனவரம் உள்ளத் துக்குள் ஜீவசுரம் கள்ளும் கனலும் ஆனதயை கவிதை இசையென் றானசுகம் தள்ளும் அலையும் மணலுமவன் தமிழும் தெய்வ மொழியுமவன் பிள்ளை அன்னை தோழனவன் பித்தன் சடையன் ஆதிசிவன்! ஒற்றைக் கையில் மழுவேந்தி ஒற்றைக் கையில் மானேந்தி மற்றும் உடலில் பெண்ணேந்தி மலர் முகத்தில் நகையேந்தி சற்றும் மாறா வெளுப்பேந்தி சரியும் குழலில் நதியேந்தி நெற்றிக் கண்தீ ஏந்துபவன் நீதித் தலைவன் ஆதிசிவன்! தவமும் இவனுக் கொருவாழ்க்கை தமிழ்ச் சங்கத்தில் தலைவாழ்க்கை கவலை இன்றி உமையுடனே களிக்கும் நடனம் ஒருவாழ்க்கை திவலை கசியும் அடியார்க்குத் திருத்தாள் சேர்க்கும் ஒருவாழ்க்கை சிவனே என்று வாழுபவன் சித்தந் தெளிக்கும் ஆதிசிவன்! அரவம் கழுத்தில், மதிசடையில், அன்பர் உளத்தில், விடையடியில், பரவும் நஞ்சு நடுமிடற்றில், பகைகொல் சூலம் இடத்தருகில் அரனே என்றால் வருகிறவன் அழுதால் உடனே அணைக்கிறவன் குருவின் குருவாய் அருளுபவன் குருவிக் கருள்செய் ஆதிசிவன்! தியானம் காட்டும் சிவரூபம் தர்மம் காட்டும் சிவரூபம் கானம் காட